உங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா? அத சாதாரணமா நினைக்காதீங்க...ஆபத்தான இந்த நோயா இருக்கலாமாம்!

Causes of Shaking Hands In Tamil: உங்க கை ஏன் இவ்வளவு நடுங்குது? சரக்கு அடிச்ச மாதிரி உங்க கை நடுங்குது? அப்படினு யாரவது உங்களை பார்த்து கேட்டு இருக்கிறார்களா? இல்லை நீங்கள் யாரையாவது பார்த்து கேட்டு இருக்கீங்களா? ஆம். எனில், இது காமெடிக்கானது இல்லை. ஆபாத்தான சுகாதார நிலையை குறிக்கும் ஒரு அறிகுறியாகும்.

பொதுவாக வயதானவர்களுக்கும் ஆல்கஹால் அருந்தும் நபர்களுக்கும் கை நடுக்கம் ஏற்படும் என்பது நாம் அனைவரும் அறிந்தது. ஆனால், அது எதனால் ஏற்படுகிறது? என்பது பற்றி நமக்கு தெரியாது. இருப்பினும், இது இரண்டும் இல்லாத நபர்களுக்கும் தன்னிச்சையாகவே கை நடுக்கம் ஏற்படுகிறது எனில், அது சாதாரணமானது அல்ல.

Reasons Why Your Hands Are Shaking In Tamil

கைகளில் நடுக்கம் அல்லது நடுக்கம் பல்வேறு அடிப்படை நிலைமைகள் அல்லது காரணிகளின் அறிகுறியாக இருக்கலாம். அதாவது அத்தியாவசிய நடுக்கம், பார்கின்சன் நோய், மல்டிபிள் ஸ்களீரோசிஸ், ஹைப்பர் தைராய்டிசம், பதட்டம் போன்ற இன்னும் பிற சுகாதார நிலையின் அறிகுறியாக இருக்கலாம். அதைப் பற்றி விரிவாக இக்கட்டுரையில் காணலாம்.

பதட்டம்
மன அழுத்தம் மற்றும் கவலை உடலின் பாதுகாப்பு அல்லது தற்காப்பு எதிர்வினையைத் தூண்டுகிறது. இது இரத்த அழுத்தம் அதிகரிப்பதன் அறிகுறிகளில் ஒன்றாகும். உங்களுக்கு பதட்டம் ஏற்படும்போது, உடலின் அட்ரினலின் சப்ளையும் உயர்கிறது, இது இதயத் துடிப்பை துரிதப்படுத்தவும் தசைகள் நடுங்கவும் தூண்டுகிறது. இதனால், நடுக்கம் ஏற்படுகிறது. நீங்கள் எதையாவது பார்த்து பதட்டம் அடையும்போது, உங்கள் கை மற்றும் உடல் தனாகவே நடுங்க ஆரம்பிக்கும்.

ஆல்கஹால் அருந்துவதை தவிர்த்தல்
தொடர்ந்து மது அருந்தும் நபர்கள், அதை நிறுத்தும்போது, அவர்களின் கை நடுங்க ஆரம்பிக்கும். இது மது போதையின் அறிகுறியாக இருக்கலாம் மற்றும் மருத்துவ தலையீடும் தேவைப்படலாம். கடைசியாக மது அருந்திய ஆறு முதல் பத்து மணி நேரத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் நடுக்கம் தொடங்கலாம். அதிகளவு மது அருந்துவதால் மூளையின் செயல்பாடு மற்றும் உடலின் ஆற்றல் அளவு குறைகிறது.

பின்னர், ஆல்கஹால் மயக்க விளைவுக்கு பதிலளிக்கும் விதமாக, மனித உடலை அதிக விழிப்புணர்வு நிலையில் வைத்திருக்க மூளை நரம்பு செயல்பாட்டை அதிகரிக்கிறது. நடுக்கம், பதட்டம், அதிவேகத்தன்மை போன்ற பிற அறிகுறிகள் ஆல்கஹால் குடிப்பதை திடீரென நிறுத்தப்படும் போது ஏற்படலாம். ஏனெனில் மூளை இன்னும் அதிக நரம்பு செயல்பாட்டைத் தொடர்வதால் இருக்கலாம்.

மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனையோடு ஆல்கஹாலில் இருந்து முழுவதுமாக மீட்கும் நபர் முழுமையாக நச்சுத்தன்மையை நீக்கியவுடன் நடுக்கம் நின்றுவிடும். இருப்பினும், நாள்பட்ட ஆல்கஹாலின் தவறான பயன்பாடு கல்லீரல், மூளை மற்றும் நரம்புகளுக்கு தீங்கு விளைவிக்கும், இது தொடர்ந்து நடுக்கத்திற்கு வழிவகுக்கலாம். அதனால், மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம்.

குறைந்த இரத்த சர்க்கரை
உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்போது நடுக்கம் ஏற்படலாம். குறிப்பாக இன்சுலின் அல்லது சில நீரிழிவு மருந்துகளை உட்கொள்ளும் நீரிழிவு நோயாளிகள் நடுக்கத்தை அனுபவிக்கலாம். இரத்த சர்க்கரை அளவு லிட்டருக்கு 4 மில்லிமோல் (எம்எம்எல்) க்குக் கீழே குறையும் போது இது பொதுவாக நிகழ்கிறது.

பசி மற்றும் அதிக வியர்வை உணர்வுடன் உடல் நடுக்கம் மற்றும் கை நடுக்கம் ஏற்படுவது ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளாகும். இரத்தச் சர்க்கரைக் குறைவு ஒரு நபரை தீவிர சூழ்நிலையில் சுயநினைவை இழக்கச் செய்யலாம். ஆதலால், இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவ உதவியை நாடுவது நல்லது.

ஹைப்பர் தைராய்டிசம்
ஹைப்பர் தைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பி அதிக தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்யும் ஒரு சுகாதார நிலையை குறிக்கிறது. ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறிகளில் ஒன்று கை நடுக்கம், இது கைகள் மற்றும் விரல்களை பாதிக்கும். இதற்கும் நீங்கள் மருத்துவ உதவியை நாட வேண்டும்.

அத்தியாவசிய நடுக்கம்
உங்கள் கை நடுங்குவதற்கு மற்றொரு முக்கிய காரணம் நரம்பியல் கோளாறு ஆகும். இது கைகள், தலை, குரல் மற்றும் சில நேரங்களில் மற்ற உடல் பாகங்கள் தாளமாக நடுங்குகிறது. வயதானவர்களுக்கு கை நடுங்குவது பொதுவானது. அத்தியாவசிய நடுக்கம் எந்த வயதிலும் ஏற்படலாம். ஆனால் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் இது மிகவும் பொதுவானது. அத்தியாவசிய நடுக்கம் உள்ளவர்கள் சில நேரங்களில் மற்ற நரம்பியல் பிரச்சனைகளையும் சந்திக்கலாம்.

பார்கின்சன் நோய்
பார்கின்சன் நோய் என்பது ஒரு நரம்பியல் கோளாறு ஆகும். இது இயக்கத்தை பாதிக்கிறது. பார்கின்சன் நோயின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று நடுக்கம். இது பொதுவாக ஒரு கையிலிருந்து தொடங்கி மற்றொரு கை மற்றும் பிற உடல் பாகங்களுக்கு பரவுகிறது. பார்கின்சன் நோயினால் ஏற்படும் நடுக்கம், கைகள் உடலின் பக்கவாட்டில் இருக்கும் போது அல்லது மடியில் ஓய்வெடுக்கும்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

மல்டிபிள் ஸ்களீரோசிஸ்
மல்டிபிள் ஸ்களீரோசிஸ் என்பது ஒரு நாள்பட்ட தன்னுடல் தாக்கக் கோளாறு ஆகும். இது மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. இதன் அறிகுறிகளில் ஒன்று நடுக்கம். நடுக்கம் ஒரு நபரின் அன்றாட வாழ்க்கை முறைகளை பெரிதும் பாதிக்கிறது.

உங்கள் அடிப்படை தேவைகளான உணவு சாப்பிடுவது மற்றும் தண்ணீர் குடிக்கும் திறனில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். சேதத்தின் அளவு மற்றும் பாதிக்கப்பட்ட நரம்புகளைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். கடுமையான ஸ்களீரோசிஸ் உள்ள சிலர் நன்றாக நடக்கக்கூடிய திறனை இழக்க நேரிடலாம்.

இறுதிக்குறிப்பு
உங்களுக்கு அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு கை நடுங்கினால் அல்லது வேறு ஏதேனும் அறிகுறிகளை அனுபவித்தால் மருத்துவரை அணுகுவது முக்கியம். ஏனெனில் அவர்கள் அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க உதவுவார்கள். ஆபத்தான சுகாதார நிலைகளை முன் கூட்டியே அறிந்து சிகிச்சை அளிக்கலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Friday, April 28, 2023, 11:23 [IST]
Desktop Bottom Promotion