Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
கையில் இந்த மாற்றங்கள் தெரியுதா? அப்ப உடம்புல இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்..
Hands Reveal Health Problems In Tamil: நமது உடலின் ஒவ்வொரு பகுதியும் மற்றொன்றுடன் தொடர்புடையது. இதனால் தான் உடலின் குறிப்பிட்ட பகுதியைப் பார்த்ததுமே மருத்துவர்கள் உடலில் என்ன பிரச்சனை இருக்கலாம் என்று கணித்து கூறுகின்றனர். முக்கியமாக நமது உடலில் உள்ள ஆரோக்கிய பிரச்சனைகளை கைகளைக் கொண்டே கண்டறியலாம்.
அதுவும் கைகள் எப்படி காணப்படுகின்றன, அவற்றின் உணர்ச்சிகள் மற்றும் அசைவுகள் போன்றவை உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் இருப்பதற்கான வாய்ப்புள்ளது என்பதை வெளிப்படுத்தும். நீங்கள் உங்களின் ஆரோக்கியத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

தேனியைச் சேர்ந்த நுரையீரல் நிபுணரான டாக்டர் நிரஞ்சன் பிரபாகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரது ஆரோக்கியத்தைப் பற்றி கைகள் என்ன சொல்கின்றன என்பது குறித்து கூறியுள்ளார். அது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. கைகளில் கூச்ச உணர்வு - கைகளில் கூச்ச உணர்வை அதிகம் சந்திக்கிறீர்களா? அப்படியானால் உடலில் வைட்டமின் பி12 குறைபாடு அல்லது உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருக்க வாய்ப்புள்ளது.
2. வெளிரிய கைகள் - உங்கள் கைகள் வெளுத்துப் போய் உள்ளதா? அப்படியானால் இரத்த சோகை அல்லது உடம்பில் இரத்த சர்க்கரை குறைவாக இருக்க வாய்ப்புள்ளதாக டாக்டர் கூறியுள்ளார்.
3. சிவப்பு நிற கைகள் - உங்கள் கைகள் மிகவும் சிவந்து போய் காணப்படுகிறதா? அப்படியானால் கல்லீரல் நோய், கர்ப்பம் அல்லது ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்றவைகள் காரணமாக இருக்கலாம்.
4. ஜில்லென்ற கைகள் - கைகள் வழக்கத்திற்கு மாறாக மிகவும் ஜில்லென்று உள்ளதா? அப்படியானால் உடலில் ஹைப்போதைராய்டிசம், இரும்புச்சத்து குறைபாடு, இரத்த சோகை இருக்க வாய்ப்புள்ளது. மேலும் மன பதட்டம் அதிகமாக இருந்தாலும், கைகள் சிவந்து போகும்.
5. கைகளில் தசை வலி - அடிக்கடி கைகளில் வலியை சந்திக்கிறீர்களா? அப்படியானால் உடம்பில் கால்சியம் அல்லது வைட்டமின் டி குறைபாடு இருக்கலாம். இல்லாவிட்டால் உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாமலும் இருக்கலாம்.
6. வறண்ட கைகள் - கைகள் அதிகமாக வறண்டு போகிறதா? அப்படியானால் உடலில் எக்ஸிமா, சர்க்கரை நோய், வைட்டமின் டி குறைபாடு, நியாசின் குறைபாடு, ஜிங்க் குறைபாடு போன்றவைகள் இருக்க வாய்ப்புள்ளது.
7. கை நடுக்கம் - கைகளில் அதிக நடுக்கத்தை உணர்கிறீர்களா? அப்படியானால் நரம்பியல் பிரச்சனைகள், மன அழுத்தம் அல்லது அதிகப்படியான காப்ஃபைனை அருந்துவது காரணமாக இருக்கலாம்.
8. நக அமைப்பு அல்லது நிறத்தில் மாற்றம் - நகங்களில் பிளவுகள், உடையக்கூடிய தன்மை அல்லது நகங்கள் நீல நிறத்தில் காணப்பட்டால், அது உடலில் உள்ள சத்து குறைபாடுகள், தொற்றுகள் அல்லது சர்க்ரை நோய், இரத்த சோகை போன்ற பிரச்சனைகளைக் குறிக்கலாம்.
9. நகங்கள் வளைந்து கொக்கி போன்று இருப்பது - திடீரென்று விரல் நகங்கள் வளைந்து காணப்பட்டால், அது நுரையீரல் அல்லது இதய பிரச்சனைகள் இருக்க வாய்ப்புள்ளதைக் குறிக்கலாம். அதே வேளையில் வீக்கம் அல்லது கடினமான மூட்டுகள் கீல்வாதத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.
எனவே நண்பர்களே! உங்கள் கைகள் மற்றும் விரல் நகங்களில் இப்படியான மாற்றங்களைக் கண்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே கவனித்து, மருத்துவரை அணுகி, என்னவென்று பரிசோதனை செய்து உறுதிப்படுத்தி சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications