Latest Updates
-
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க பழைய காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா?
முகத்தின் இந்த இடத்துல பிம்பிள் அதிகமா வருதா? அப்ப உடலின் இந்த உறுப்புல பிரச்சனை இருக்குன்னு அர்த்தம்...
Pimple And Health Problems In Tamil: நாம் ஒவ்வொருவருமே முகப்பரு அல்லது பிம்பிள் பிரச்சனையை சந்தித்திருப்போம். முகப்பருக்களானது சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்புடன், சருமத்துளைகளில் அழுக்குகள் அதிகம் சேர்த்து அடைப்புக்கள் ஏற்படும் போது வருகின்றன.
ஒருவருக்கு முகப்பரு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் உண்ணும் உணவுகள், மோசமான சரும பராமரிப்பு, ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதே சமயம் ஒருவரது உடலினுள் உள்ள பிரச்சனைகளாலும் முகப்பருக்கள் வரக்கூடும் என்பது தெரியுமா?

ஆம், முகத்தின் குறிப்பிட்ட பகுதியில் வரும் முகப்பருக்கள், உடலின் குறிப்பிட்ட உறுப்புக்களில் உள்ள பிரச்சனையை சுட்டிக் காட்டுகின்றன. கீழே இதுக்குறித்து விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
நெற்றி
உங்களுக்கு நெற்றிப் பகுதியைச் சுற்றி முகப்பரு வருகிறதா? நெற்றி செரிமான மண்டலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே நெற்றிப் பகுதியில் ஒருவர் முகப்பரு பிரச்சனையை சந்தித்தால், அவரது செரிமான மண்டலத்தில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். செரிமான பிரச்சனை சரியாவதற்கு நீர் அதிகம் அருந்த வேண்டும், சரிவிகித உணவை உண்ண வேண்டும், குறைந்தது 7 மணிநேரம் தூங்க வேண்டும்.
கன்னம்
பெரும்பாலானோருக்கு கன்னப் பகுதியில் தான் முகப்பருக்கள் வரும். கன்னமானது சுவாச மண்டலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதுவும் கீழ் கன்னம் மோசமான வாய் சுகாதாரம், மோசமான சுற்றுச்சூழல் தூண்டுதல்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அழுக்கு நிறைந்த தலையணை உறைகள் மற்றும் படுக்கை விரிப்புக்களைப் பயன்படுத்தினால் கன்னப்பகுதியில் முகப்பருக்கள் வரும். இதைத் தவிர்க்க அடிக்கடி தலையணை உறைகளை மாற்றுவதோடு, முகத்தை அவ்வப்போது கழுவ வேண்டும்.
மூக்கு
மூக்குப் பகுதியைச் சுற்றி மற்றும் தாடைப் பகுதியில் முகப்பருக்கள் வந்தால், அது இரைப்பை குடல் சமநிலையின்மை அல்லது உணவு அழற்சிகளால் இருக்கலாம். மேலும் முகத்திலேயே இந்த பகுதிகளில் தான் எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக உள்ளன. மேலும் மூக்கு பகுதி கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே மூக்கு மற்றும் தாடையைச் சுற்றி பருக்கள் வந்தால், கல்லீரல் அல்லது சிறுநீரக பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது.
தாடை மற்றும் கழுத்து
தாடை மற்றும் கழுத்துப் பகுதியில் முகப்பருக்கள் வந்தால், அது ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வைக் குறிக்கின்றன. நாளமில்லா அமைப்பில் உள்ள ஏற்றத்தாழ்வுகளால் இந்த பகுதிகளில் பருக்கள் வரலாம். சிலருக்கு ஹார்மோன் சமநிலையின்மையால் கழுத்தில் முகப்பருக்களை சந்திக்கலாம். சில சமயங்களில் பிசிஓஎஸ் போன்ற தீவிர பிரச்சனைகளாலும் கழுத்துப் பகுதியில் பருக்கள் வரலாம். உடலில் ஈஸ்ட்ரோஜெனை விட ஆன்ட்ரோஜென் அதிகமாக இருந்தால் தாடைப் பகுதியில் பருக்கள் வரக்கூடும்.
முதுகு, கைகள் மற்றும் தொடை
முதுகு, கைகள் மற்றும் தொடையில் வரும் முகப்பருக்கள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மரபணுக்களால் ஏற்படுகிறது. சில சமயங்களில் உடுத்தும் உடைகளில் உராய்வினாலும், பருக்கள் வரலாம். இந்த பகுதிகளில் வரும் பருக்களை கட்டுப்படுத்துவது சற்று சவாலாக இருக்கலாம். இருப்பினும், சுத்தமான மென்மையாக மற்றும் தளர்வான ஆடைகளை அணிவது, முதுகுப் பகுதியில் அதிக அழுத்தத்தைக் கொடுப்பதைத் தவிர்ப்பது, சன் ஸ்க்ரீன், பாடி லோசன் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் இவற்றை கட்டுப்படுத்தலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications