Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
பைல்ஸ் பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. இல்ல நிலைமை ரொம்ப மோசமாயிடும்...
Worst Foods For Piles In Tamil: கோடைக்காலம் என்பதால் பைஸ்ஸ் என்னும் மூல நோய் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வழக்கத்தை விட அதிகமாக நீரை அருந்துவதோடு, ஒருசில உணவுகளை உண்பதை அறவே தவிர்க்க வேண்டும். பொதுவா பைல்ஸ் பிரச்சனையானது நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையால் வரக்கூடியது.
இந்த மலச்சிக்கல் நமது உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளின் விளைவாக ஏற்படுகிறது. அதோடு உடல் அதிகமாக வெப்பமடைந்தாலோ, உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாவிட்டாலோ, மலம் இறுக்கமடைந்து, ஒருகட்டத்தில் வலிமிகுந்த மலத்தை கழிக்க நேரிடும் அல்லது இரத்தக்கசிவுடனான மலத்தை கழிக்க வேண்டியிருக்கும்.

மேலும் பைல்ஸ் பிரச்சனை வந்துவிட்டால், அந்நபர் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் பைல்ஸ் மலம் கழிக்கும் போது மட்டும் வலியை உண்டாக்காமல், ஒருவரால் உட்காரவோ, நிற்கவோ, ஏன் நடக்கவோ கூட சிரமத்தை அல்லது அசௌகரியத்தை உண்டாக்கலாம்.
எனவே பைல்ஸ் நோயாளிகள் கோடைக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் ஒருசில உணவுகளை அறவே தொடக்கூடாது. கீழே பைல்ஸ் நோயாளிகள் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ளக்கூடாது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
1. வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பைல்ஸ் உள்ளவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளான உறைய வைத்த இறைச்சிகள், ஃபாஸ்ட் புட் மற்றும் எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுகள் ஜீரணமாவதற்கு கடினமாக இருக்கும். மேலும் இவற்றில் ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவு. முக்கியமாக இவற்றில் உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புக்களும் ஏராளமாக உள்ளன. எனவே இந்த வகை உணவுகளை உட்கொள்ளும் போது, அவை மோசமான செரிமானத்திற்கும், மலச்சிக்கலுக்கும் வழிவகுக்கும்.
2. காரமான உணவுகள்
நீங்கள் கார உணவுப் பிரியராக இருக்கலாம். ஆனால் பைல்ஸ் பிரச்சனை வந்துவிட்டால், காரமான உணவுகளை சாப்பிடுவதைப் பற்றி ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். ஏனென்றால் இந்த உணவுகளானது மலம் கழிக்கும் போது கடுமையான வலியுடன், எரிச்சலையும் ஏற்படுத்தும். எனவே ஏற்கனவே பைல்ஸ் முற்றிய நிலையில் இருந்தால், கார உணவுகளுக்கு குட்-பை சொல்லிவிடுங்கள்.
3. ஆல்கஹால்
பைல்ஸ் இருந்தால், ஆல்கஹாலை முதலில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆல்கஹால் சில ஊட்டச்சத்துக்களை குறைப்பதன் மூலம் செரிமான சமநிலையை சீர்குலைப்பது மட்டுமின்றி, உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
4. பால் பொருட்கள்
பால் பொருட்கள் சத்தான ஒரு உணவுப் பொருட்களாக இருக்கலாம். ஆனால் பால் பொருட்கள் சில நேரங்களில் வாயு உருவாவதற்கும், வயிற்றில் பிடிப்புக்கள் மற்றும் மலச்சிக்கல் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும். அதுவும் பைல்ஸ் தீவிரமாக இருக்கும் போது, பால், சீஸ் மற்றும் பிற பால் பொருட்களை உட்கொண்டால், நிலைமை தீவிரமாகிவிடும். எனவே பைல்ஸ் உள்ளவர்கள் பால் பொருட்களை அதிகம் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
5. பழுக்காத பழங்கள்
என்ன தான் பழங்கள் மூல நோயாளிகளுக்கு சிறந்ததாக இருந்தாலும், பழுக்காத பழங்கள் மூல நோயை தீவிரமாக்கிவிடும். எனவே எந்த பழங்களை உட்கொள்வதாக இருந்தாலும், அந்த பழம் நன்கு கனிந்துள்ளதாக என்பதை பார்க்க வேண்டும். பழுக்காத வாழைப்பழங்கள் மலச்சிக்கலை உண்டாக்கி, பைல்ஸ் வலியை தீவிரமாக்கிவிடும். எனவே எப்போதும் நன்கு கனிந்த பழங்களை சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
6. சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்
அரிசி, வெள்ளை பிரட் போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் நார்ச்சத்து மிகவும் குறைவாக உள்ளன. பைல்ஸ் நோயாளிகள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் தான், குடலியக்கம் சிறப்பாக நடக்கும். இந்த நார்ச்சத்து முழு தானியங்களில் தான் அதிகம் உள்ளன. எனவே பைல்ஸ் உள்ளவர்கள் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.
7. உப்பு நிறைந்த உணவுகள்
உப்பு நிறைந்த உணவுகள் சுவையாக இருக்கலாம். ஆனால் அவை மிகவும் மோசமான உணவுகளாகும். அதுவும் உப்புள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ளும் போது, அது உடலில் நீரை தேங்கச் செய்து, உடலின் அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக ஆசனவாயில் உள்ள இரத்த நாளங்களையும் பாதிக்கும். எனவே உப்பு நிறைந்த உணவுகளை அதிகம் வாங்கி சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
8. இரும்புச்சத்து சப்ளிமெண்ட்டுகள்
பைல்ஸ் பிரச்சனைக்கு முன் நீங்கள் இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்திருக்கலாம். ஆனால் பைல்ஸ் பிரச்சனை வந்துவிட்டால், இரும்புச்சத்து மாத்திரைகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரும்புச்சத்து மலச்சிக்கலை உண்டாக்கும். எனவே பைல்ஸ் நோயாளிகள் இரும்புச்சத்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, இரும்புச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ளலாம்.
9. அதிகப்படியான நார்ச்சத்து
நார்ச்சத்து குடலியக்கத்திற்கு நல்லது தான். ஆனால் ஒரே வேளையில் அதுவும் திடீரென்று அளவுக்கு அதிகமாக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டால், அதுவே பெரிய பிரச்சனையை உண்டாக்கிவிடும். எனவே குடலியக்கம் சிறப்பாக இருக்க சீரான அளவில் நார்ச்சத்தை உட்கொள்ளுங்கள். அதுவும் முதலில் குறைவாக உட்கொள்ளத் தொடங்கி, அதன் பின் படிப்படியாக நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











