Latest Updates
-
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும்
2025-ல் உடல் எடையை கட்டாயம் குறைச்சாகணுமா? அப்ப இந்த விஷயங்களை மிஸ் பண்ணாம ஃபாலோ பண்ணுங்க...
New Year 2025 Resolution In Tamil: 2025 புத்தாண்டில் நுழையவுள்ளோம். ஒவ்வொரு புதிய ஆண்டில் நுழையும் போதும், அந்த ஆண்டில் ஒருசில தீர்மானங்களை எடுப்போம். அதுவும் இந்த தீர்மானங்கள் தொழில் தொடர்பானதாக மட்டுமின்றி, ஆரோக்கியம் தொடர்பானதாகவும் இருக்கலாம். தற்போது நிறைய பேர் உடல் பருமனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த உடல் எடையைக் குறைக்கவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிலர் வருகிற புதிய ஆண்டில் இந்த உடல் எடையைக் கட்டாயம் குறைத்தாக வேண்டுமென்று தீர்மானம் எடுப்பார்கள். உடல் எடையைக் குறைக்க வெறும் டயட்டையும் உடற்பயிற்சியிலும் ஈடுபட்டால் மட்டும் போதாது, ஒருசில பழக்கங்களையும் தவறாமல் பின்பற்ற வேண்டும். வருகிற புத்தாண்டில் நீங்கள் உடல் எடையைக் குறைக்க தீர்மானம் எடுத்திருந்தால், பின்வரும் 7 பழக்கங்களை தவறாமல் வைத்துக் கொள்ளுங்கள். இதனால் நிச்சயம் உங்கள் இலக்கை அடையலாம்.

1, இலக்கை அமைக்கவும்
உடல் எடையைக் குறைக்க நினைத்தால், முதலில் குறுகிய காலத்தில் உடல் எடையைக் குறைக்க நினைக்காமல், ஆரோக்கியமான வழியில் உடலுக்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படாதவாறு எடையைக் குறைக்க நினைக்க வேண்டும். அதற்கு ஒரு ஊட்டச்சத்து நிபுணரை அணுகி, அவரின் ஆலோசனையின் பேரில் உங்கள் உடலுக்கு ஏற்றவாறான உணவுத் திட்டத்தை அமைத்து தர கேட்டு, அதைப் பின்பற்றலாம்.
2. நீரேற்றத்துடன் இருக்கவும்
உடல் எடையைக் குறைக்க நினைத்தால், நீரை அதிகம் பருக வேண்டும். அதுவும் ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 டம்ளர் நீரைக் குடிப்பதை முதலில் ஒரு இலக்காக கொள்ள வேண்டும். இப்படி கொள்வதன் மூலம், அது ஒருவரது உடல் எடையைக் குறைக்க உதவும். இது தவிர நீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளலாம்.
3. கவனமாக சாப்பிடவும்
ஒவ்வொரு வேளை உணவை உண்ணும் போதும், நாம் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் உணவை நன்கு மென்று மெதுவாக சாப்பிடவேண்டும். இப்படி சாப்பிடுவதன் மூலம் உணவுகள் சரியாக ஜீரணிக்கப்பட்டு, அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் சரியாக பிரித்தெடுக்கப்படும். முக்கியமாக சாப்பிடும் போது, டிவி, மொபைல் போன்றவற்றை பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
4. சரிவிகித உணவுகளை உண்ணவும்
உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த நட்ஸ், விதைகள், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உணவில் சேர்த்து வர வேண்டும். அதோடு பழங்கள், காய்கறிகளையும் அதிகம் உட்கொள்ள வேண்டும். இப்படி அனைத்தையும் உணவில் சேர்க்கும் போது, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து போன்ற அனைத்துவிதமான சத்துக்களும் உடலுக்கு கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
5. உடற்பயிற்சியை செய்யவும்
உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் உடலுழைப்பு அவசியம். அதுவும் தற்போது பலரும் உட்கார்ந்தவாறே வேலை செய்வதால், உடலுழைப்புக்கு வழியே இல்லை. இந்நிலையில் ஒருவர் யோகா, நடைப்பயிற்சி, ஜாக்கிங், சைக்கிளிங் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். இதனால் ஒட்டுமெத்த உடலும் சீரான இயக்கத்தைப் பெறும். இதன் விளைவாக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரையும்.
6. தூக்கம் அவசியம்
உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், உண்ணும் உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தாமல், போதுமான தூக்கத்தையும் பெற வேண்டும். அதுவும் ஒருவர் ஒரு நாளைக்கு 7-9 மணிநேரம் தூங்க வேண்டும். போதுமான தூக்கம் கிடைக்காவிட்டால், உடலில் உள்ள ஹார்மோன்கள் சீர்குலைத்துவிடும். எனவே உடல் எடை ஆரோக்கியமான வழியில் குறைய வேண்டுமானால், தினமும் போதுமான அளவு தூக்கத்தை மேற்கொள்ளுங்கள்.
7. சீராக இருக்கவும்
உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், ஒரே நாளில் எந்த ஒரு மாற்றத்தையும் காண முடியாது. அதுவும் ஆரோக்கியமான வழியில் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், அதற்கு பொறுமை மிகவும் அவசியம். மேலும் ஒரு பழக்கத்தை கொண்டால், அதை வழக்கமாக பின்பற்ற வேண்டும். இப்படி வழக்கமாக கொள்ளும் போது, அது உடல் எடையைக் குறைப்பதோடு, கட்டுப்பாட்டிலும் வைத்துக் கொள்ள உதவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications