Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
எச்சரிக்கை! காலையில் பற்களை துலக்காவிட்டால் இந்த கொடிய புற்றுநோய் வருமாம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Not Brushing Teeth Cause Bowel Cancer In Tamil: காலையில் எழுந்ததும் ஒருவர் கட்டாயம் செய்ய வேண்டிய கடமைகளுள் ஒன்று பற்களை துலக்குவது. இப்படி காலையில் பற்களைத் துலக்காமல் இருந்தால், அது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் காலையில் எழுந்ததும் பற்களை துலக்காமல் இருப்பதற்கும், உயிரைப் பறிக்கும் கொடிய குடல் புற்றுநோய்க்கும் வலுவான தொடர்பு இருப்பது தெரியுமா?
அமெரிக்காவில் உள்ள புற்றுநோய் மையம் நடத்திய ஆய்வின் படி, வாயில் உள்ள நுண்ணுயிரிகள் குடல் பகுதிக்கு சென்று வயிற்று அமிலங்களில் அப்படி தங்கி விடுவதோடு, அந்த நுண்ணுயிரிகள் மெதுவாக குடலின் சுவற்றில் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தூண்டுவது தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வில் சுமார் 200 குடல் புற்றுநோயாளிகளின் தரவுகள் மதிப்பீடு செய்யப்பட்டன. அதில் பாதி பேருக்கு சொத்தை பற்களில் காணப்படும் நுண்ணுயிரிகள் புற்றுநோய் கட்டிகளில் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
மோசமான வாய் சுகாதாரம் எப்படி குடல் புற்றுநோயை ஏற்படுத்துகிறது?
நமது உடலில் குடலுக்கு அடுத்தபடியாக பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் மற்றும் புரோட்டோசோவாக்கள் வாயில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சொல்லப்போனால் ஒருவரது வாயில் சுமார் 700-க்கும் அதிகமாக நுண்ணுயிரிகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நுண்ணுயிரிகள் ஒருவரது வாயில் பல வழிகளில் நுழைந்திருக்கலாம். இப்படி நுழைந்த நுண்ணுயிரிகள் உடலுக்குள் செல்லாமல் இருக்க வேண்டுமானால், பற்களை தவறாமல் துலக்க வேண்டும். முக்கியமாக பற்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்த நுண்ணுயிரிகள் குடலை அடைந்து புற்றுநோய் அபாயத்தை அதிகரித்துவிடும்.
குடல் புற்றுநோய் என்றால் என்ன?
குடல் அல்லது பெருங்குடல் புற்றுநோயானது பெருங்குடலில் வளரத் தொடங்கும். இப்படி புற்றுநோய் கட்டிகளாக மாறுவதற்கு முன், குடல் பகுதியில் திசு வளர்ச்சியாக காணப்படும். இந்த திசு வளர்ச்சியை ஒருவர் பரிசோதனைகளின் மூலம் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்காமல் போனால், பின் அந்த திசு வளர்ச்சியானது கட்டிகளாக மாறுவதோடு, உடலின் பிற பகுதிகளுக்கும் பரவிவிடும்.
உலகளவில் புற்றுநோய் தொடர்பான இறப்புகளில் பெருங்குடல் புற்றுநோய் தான் இரண்டாவது முக்கிய காரணம். 2023 ஆம் ஆண்டில் மட்டும் இந்த பெருங்குடல் புற்றுநோயால் சுமார் 1.9 மில்லியனுக்கும் அதிகமான புதிய வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டதோடு, 9,30,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
யாருக்கெல்லாம் பெருங்குடல் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது?
அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி, பெண்களை விட ஆண்களுக்கு தான் குடல் புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளன. மேலும் இது கறுப்பினத்தவர்களை அதிகம் பாதிப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக பெருங்குடல் புற்றுநோய் 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களையே அதிகம் பாதிக்கும். ஆனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு 20-49 வயதிற்குட்பட்டவர்கள் பெருங்குடல் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முக்கியமாக ஆண்டுதோறும் சுமார் 1.5 சதவீதம் அதிகரித்தும் வருகிறது.
குடல் புற்றுநோயின் அறிகுறிகள்
பெருங்குடல் புற்றுநோய் சில சமயங்களில் அறிகுறிகளின்றியும் இருக்கலாம். இருப்பினும் அது சிலருக்கு மட்டுமே. ஆனால் பெரும்பாலானோர் குடல் புற்றுநோயின் அறிகுறிகளை அனுபவிப்பார்கள். அதில் பல அறிகுறிகள் வழக்கமாக தினமும் சந்திக்கும் லேசான ஆரோக்கிய பிரச்சனைகளைப் போன்றே இருக்கும். இப்போது பெருங்குடல் புற்றுநோய் இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும என்பதைக் காண்போம்.
* இரத்தம் கலந்த மலம்
* குடலியக்கத்தில் தொடர்ந்து மாற்றங்கள். அதாவது மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு தொடர்ந்து இருப்பது.
* காரணமின்றி கடுமையான வயிற்று வலி
* திடீரென்று வயிறு வீங்கி இருப்பது. அதுவும் ஒரு வாரத்தில் மேல் நீடித்திருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.
* மிகுந்த உடல் சோர்வு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை ஒருவர் திடீரென்று அனுபவித்தால், அதைப் புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து, சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக வாயை சுத்தமாக வைத்துக் கொள்ள தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் பற்களைத் துலக்க வேண்டும். அதோடு எதை சாப்பிட்ட பின்னரும் வாயை நீரால் கொப்பளிக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
