Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
எச்சரிக்கை! உருளைக்கிழங்கு இப்படி பச்சையா, முளைக்கட்டி இருந்தா சாப்பிடாதீங்க... இல்ல உயிருக்கே ஆபத்தாயிடும்..
Green And Sprouted Potatoes: பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான ஒரு காய்கறி என்றால் அது உருளைகிழங்கு என்றே கூறலாம். இதனால் நிறைய பேர் தங்கள் வீடுகளில் உருளைக்கிழங்கை ஸ்டாக் வைத்திருப்பார்கள். இப்படி உருளைக்கிழங்கை நிறைய வாங்கி சேகரித்து வைத்திருக்கும் போது, சில சமயங்களில் உருளைக்கிழங்கு முளைக்கட்ட தொடங்கிவிடும்.
மேலும் சிலர் உருளைக்கிழங்கை வாங்கும் போது சரியாக கவனிக்காமல் பச்சையாக இருக்கும் உருளைக்கிழங்கை வாங்கியிருப்பார்கள். இப்படி பச்சையாக இருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் முளைக்கட்டிய உருளைக்கிழங்கை சாப்பிடலாமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.

ஆனால் இதுக்குறித்து ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர். டிம்பிள் ஜங்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியது என்னவென்றால், முளைக்கட்டிய உருளைக்கிழங்கு நச்சுத்தன்மை வாய்ந்தது மற்றும் இது ஃபுட் பாய்சனை ஏற்படுத்துவதோடு, சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே இப்படியான உருளைக்கிழங்கை உட்கொள்ளாமல் தூக்கி எறிந்துவிடுங்கள். ஏனெனில் அப்படிப்பட்ட உருளைககிழங்கில் நச்சுக்கலவைகள் அதிகம் இருக்கும். எனவே இப்படியான உருளைக்கிங்கை உட்கொள்ளாதீர்கள்.
முளைக்கட்டிய உருளைக்கிழங்கு ஏன் ஆபத்தானது?
உருளைக்கிழங்கில் சோலனைன் மற்றும் சாகோனைன் ஆகிய இரண்டு கிளைகோ அல்கலாய்டுகள் உள்ளன. இத்தகைய கலவைகள் தக்காளி, கத்திரிக்காய் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன. இந்த கலவைகளை அளவாக உட்கொள்ளும் போது, அதன் மூலம் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும். ஆனால் அதையே அதிகமாக உட்கொள்ளும் போது, அது ஃபுட் பாய்சனை ஏற்படுத்தி, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
உருளைக்கிழங்கில் பச்சை நிறமானது குளோரோபில்லில் இருந்து வருகிறது. இது நச்சுத்தன்மையற்றது. இருப்பினும், அதில் அதிகளவில் கிளைகோஅல்கலாய்டு இருக்கும். அதுவும் உருளைக்கிழங்கு முளைக்கட்ட தொடங்கும் போது, அதில் கிளைகோஅல்கலாய்டு அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. இதன் விளைவாக இப்படியான உருளைக்கிழங்குகளை உட்கொண்ட சில மணிநேரங்கள் முதல் ஒரு நாள் வரை ஒருசில பக்கவிளைவுகள் தெரியத் தொடங்கும்.
அதுவும் சோலனைன் ஒரு நச்சுப்பொருள். இது குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் நரம்பியல் பிரச்சனைகளை கூட ஏற்படுத்தும். சோலனைன் நிறைந்த உணவை அதிகம் உட்கொள்ளும் போது, அது பின்வரும் அறிகுறிகளை வெளிப்படுத்தும். அவையாவன:
* அதிக காய்ச்சல்
* குழப்பம்
* குறைவான இரத்த அழுத்தம்
* வேகமான இதயத் துடிப்பு
* தலைவலி
* மரணம்
முளைக்கட்டிய உருளைக்கிழங்கில் உள்ள நச்சுத்தன்மையைக் குறைப்பது எப்படி?
முளைக்கட்டிய உருளைக்கிழங்கின் நச்சுத்தன்மையைக் குறைக்கவும், அகற்றவும் சிறந்த வழி, அவற்றைத் தூக்கி எறிவது தான். ஒருவேளை உருளைக்கிழங்கின் ஒரு பகுதியில் மட்டும் பச்சை நிறம் குவிந்திருந்தால், அந்த பகுதியை மட்டும் அகற்றி விட்டு, மீதமுள்ள பகுதியை சமையலுக்கு பயன்படுத்தலாம்.
இருந்தாலும், சமைப்பதன் மூலம், அதில் உள்ள நச்சுப்பொருட்கள் அழியாது என்பதால், முடிந்தவரை உருளைக்கிழங்கை முளைக்கட்ட விடாமல் சமைத்து சாப்பிட்டு விடுங்கள் மற்றும் உருளைக்கிழங்கை வாங்கும் போதே அதில் பச்சை நிற பகுதி இல்லாதவாறு சரியாக கவனித்து வாங்குங்கள்.
உருளைக்கிழங்கை முளைக்கட்டாமல் சேமித்து வைப்பது எப்படி?
நீங்கள் உருளைக்கிழங்கை மொத்தமாக வாங்கி பயன்படுத்தலாம். அப்படி மொத்தமாக வாங்கும் போது, அவற்றை சரியான முறையில் பராமரித்து வைக்கும் போது, உருளைக்கிழங்கு பாழாவதைத் தடுக்கலாம். அதற்கு பின்வருமாறு உருளைக்கிழங்கை சேகரித்து வைக்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு விரைவில் பாழாகாமல் இருக்க அவற்றை குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் வைக்க வேண்டும்.
* முக்கியமாக வெங்காயத்திற்கு அருகில் உருளைக்கிழங்கை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வெங்காயத்திற்கு அருகில் உருளைக்கிழங்கை வைத்தால், வெங்காயத்தில் இருந்து வெளிவரும் வாயு உருளைக்கிழங்கை விரைவில் முளைக்க வைக்கும்.
* வெப்பமான இடங்களில் உருளைக்கிழங்கை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* உருளைக்கிழங்கின் மேல் சூரிய ஒளி படாதவாறு வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சூரிய ஒளி உருளைக்கிழங்கின் மீது பட்டால், சோலனைன் அதிகமாக உருவாகும்.
* உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜ்ஜில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மிகவும் குளிர்ச்சியான இடத்தில் வைக்கும் போது, அது மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றுகிறது. இதன் விளைவாக, சமைக்கும் போது உருளைக்கிழங்கு இனிப்பாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications