Latest Updates
-
இன்றைய ராசிபலன் 02 ஜூன் 2026: இந்த நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா -
புதன்-சுக்கிரன் ஒரே நாளில் நட்சத்திரத்தை மாற்றுவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/4 கப் வேர்க்கடலையும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - இட்லி,தோசைக்கு செமயா இருக்கும் -
குரு-சனி இணைந்து உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க மூட்ட மூட்டையா பணத்தை அள்ளப்போறாங்க.. -
பிரைட் மாதம் கொண்டாடும் எல்ஜிபிடிகியூ இணையர்களே! பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்க இந்த 5 விஷயங்களை மறக்காதீங்க! -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க? ஜூன் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
சப்பாத்திக்கு ஏற்ற க்ரீமி பன்னீர் சோயா - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஆர்சிபி வெற்றிக்கு பிறகு விராட் - அனுஷ்கா ஆடிய டான்ஸ்! இணையத்தை அதிரவைக்கும் அந்த வைரல் வீடியோ இதோ! -
சாணக்கிய நீதி படி இந்த 2 பழக்கங்கள் உங்களின் விதியையே மாற்றும் சக்தி உள்ளவையாம் - என்னென்ன பழக்கங்கள் தெரியுமா -
வெங்காய சாறு Vs பூண்டு எண்ணெய் - இவற்றில் தலைமுடி வளர்ச்சிக்கு சிறந்தது எது?
மறந்தும் இந்த 6 உணவுகளை குக்கர்-ல சமைச்சுடாதீங்க.. இல்ல அதுவே விஷமாகி எமனாயிடும்...
தற்போது அனைவரது வீட்டிலும் சமையலை எளிதாக்கும் வகையில் குக்கர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் இதுவரை சாதத்தை குக்கரில் சமைத்தது போக, தற்போது சமையலை விரைவில் முடிக்க வேண்டுமென்று அந்த குக்கரில் அனைத்து உணவுகளையும் மக்கள் சமைக்கத் தொடங்கிவிட்டனர்.
என்ன தான் குக்கர் நமது வேலையை எளிதில் முடிக்க உதவினாலும், இந்த குக்கரில் அனைத்துவிதமான உணவுகளையும் சமைப்பது நல்லதல்ல. ஏனெனில் சில உணவுப் பொருட்களை குக்கரில் வேக வைக்கும் போது, அந்த உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அழிந்து, குப்பை உணவுக்கு சமமாகிவிடும்.

நீங்கள் இதுவரை குக்கரில் தான் அனைத்து சமையலையும் செய்வீர்களானால், இனிமேல் அந்த தவறை செய்யாதீர்கள். மேலும் எந்த உணவுகளையெல்லாம் குக்கரில் சமைக்கக்கூடாது மற்றும் அதற்கான காரணம் என்னவென்பதையும் தெரிந்து கொண்டு, அந்த உணவுகளை குக்கரில் சமைப்பதை தவிர்த்திடுங்கள். கீழே குக்கரில் சமைக்கக்கூடாத சில உணவுகளும், அதற்கான காரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. பால் பொருட்கள்
எந்த ஒரு பால் அடிப்படையிலான உணவுப் பொருட்களையும் குக்கரில் சமைப்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஒருவேளை சமைத்தால், அதன் சுவை பாழாவதோடு, சில சமயங்களில் திரிந்து போய் அதன் அமைப்பே மாறிவிடும். எனவே க்ரீம், சீஸ், குளிர்ச்சியான பால் போன்றவற்றை குக்கரில் சமைப்பதைத் தவிர்த்திடுங்கள். மேலும் பால் பொருட்களை ஒரு உணவில் சேர்ப்பதாக இருந்தால், எப்போதும் அவற்றை இறுதியில் சேர்த்திடுங்கள். இதனால் உணவின் சுவை இன்னும் சிறப்பாக இருக்கும்.
2. பாஸ்தா
பாஸ்தா விரைவில் வேகக்கூடிய உணவுப் பொருள். இந்த பாஸ்தா அளவுக்கு அதிகமாக வெந்துவிட்டால், பின் அது குலைந்து உணவின் அமைப்பையும், சுவையையும் பாழாக்கிவிடும். எனவே பாஸ்தாவை சமைப்பதாக இருந்தால், அதை பாத்திரத்தில் போட்டு சமைத்து சாப்பிடுங்கள். முடிந்தவரை நீரில் தனியே வேக வைத்து, பின் அதை மசாலாவுடன் சேர்த்து கலந்து 1 நிமிடம் வேக வைத்து இறக்குங்கள்.
3. உறைய வைக்கப்பட்ட உணவுகள்
உறைய வைக்கப்பட்ட உணவுகளை சூடேற்றும் போது, அது அதிகப்படியான நீர் வெளியேறி, உணவின் அனைத்து பகுதிகளும் சரிசமமாக வேகாமல் போகலாம். அதுவும் இந்த வகை உணவுகளை குக்கரில் வேக வைக்கும் போது, உணவின் சில பகுதிகள் அதிகமாக வெந்தோ, பிற பகுதிகள் சரியாக வேகாமலோ போகலாம். எனவே உறைய வைக்கப்பட்ட உணவுகளை சமைப்பதாக இருந்தால், அவற்றை சமைப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பே வெளியே வைத்து, அறைவெப்பநிலைக்கு வரவழைத்து, அதன் பின் சமைத்திடுங்கள்.
4. பச்சை இலைக் காய்கறிகள்
குக்கரில் சமைக்கக்கூடாத மற்றொரு உணவுப் பொருள் என்றால் அது கீரை, கோஸ், ப்ராக்கோலி போன்ற பச்சை இலைக் காய்கறிகள் தான். இந்த வகை இலை உணவுகளை குக்கரில் சமைத்தால், அது சுவை மற்றும் அமைப்பை பாழாக்கிவிடும். மேலும் பச்சை இலை காய்கறிகளை அதிகமாக சமைத்தால், அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக அழிந்துவிடும். பின் அந்த உணவுகளை சாப்பிடுவதே வேஸ்ட் தான்.
5. முழு தானியங்கள்
பார்லி, திணை போன்ற சில தானிய வகைகளை சமைக்க வெவ்வேறு நேரங்கள் தேவைப்படும். ஆனால் இந்த வகை தானியங்களை குக்கரில் சமைத்தால், அதன் அமைப்பு பாழாகிவிடும். மேலும் தானிய வகைகள் அதிகப்படியான நீரை உறிஞ்சக்கூடியவை. இந்த வகை முழு தானிய வகை உணவுகளை பாத்திரத்தில் சமைப்பது தான் எப்போதும் சிறந்தது.
6. மென்மையான காய்கறிகள்
அஸ்பாரகஸ், நீர் பூசணி, குடைமிளகாய் போன்ற மென்மையான காய்கறிகளை குக்கரில் சமைக்கக்கூடாது. அப்படி சமைத்தால், அதில் உள்ள சத்துக்கள் அழிக்கப்படுவதோடு, அதன் அமைப்பும், சுவையும் மாறிவிடும். எனவே இந்த வகை காய்கறிகளை குக்கரில் சமைக்காமல், பாத்திரத்திலேயே வேக வைத்து சாப்பிடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications