Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
நீரஜ் சோப்ரா இவ்வளவு ஃபிட்டா இருக்க இளநீர் தான் காரணமாம்... எப்படி-ன்னு பாருங்க..
Neeraj Chopra Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் தங்க மகன் என்று செல்லமாக அழைக்கப்படும் தடகள வீரர் தான் நீரஜ் சோப்ரா. இப்படி செல்லமாக அழைக்கப்பட காரணம் ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்ற முதலாவது இந்தியர் ஆவார். இவர் இந்த ஆண்டின் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
நீரஜ் சோப்ரா அவரது வெற்றி மற்றும் சாதனைகளுக்காக மட்டுமின்றி, நல்ல ஃபிட்டான மற்றும் மெலிந்த உடலமைப்பிற்காகவும், செயல்திறனுக்காகவும் அனைவராலும் கொண்டாடப்படுகிறார். இப்படி நீரஜ் சோப்ரா ஃபிட்டாக இருப்பதற்கு அவரது டயட் மற்றும் உடற்பயிற்சி தான் காரணம். இவரது உடலில் 10 சதவீத கொழுப்பு மட்டுமே உள்ளது. இதற்கு அவரது டயட்டில் சேர்க்கும் ஒரு பானம் தான் முக்கிய காரணமாக கூறுகிறார்.

நீரஜ் தனது உடலில் 10 சதவீத கொழுப்புடன் ஃபிட்டாக உடல் எடையை பராமரிக்க போதுமான அளவு புரோட்டீன் மற்றும் மேக்ரோநியூட்ரியண்ட்டுகள் மட்டுமின்றி, இளநீரும் ஒரு முக்கிய காரணமாக பல இன்டர்வியூக்களில் கூறியுள்ளார். நிபுணர்களின் கூற்றுப்படி, இளநீர் ஒருவரது உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வதோடு, இதயம் முதல் சிறுநீரகம் வரை அனைத்து உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
நீரஜ் போன்று தினமும் இளநீர் குடித்தால் இவ்வளவு ஃபிட்டாக இருக்க முடியுமா என்று நீங்கள் ஆச்சரியமாக கேட்கலாம். இப்போது இளநீரை தினமும் குடித்தால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
இளநீரின் ஆரோக்கிய நன்மைகள்
* இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள், கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் போன்றவை அதிகம் உள்ளன. இவை தசைகளின் செயல்பாட்டிற்கு ஆதரவளிக்கின்றன. அதுவும் சோப்ரா போன்ற விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அதிகப்படியான ஆற்றலை இளநீர் அளிக்கிறது. மேலும் இதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவு என்பதால், இது உடலில் கொழுப்புக்கள் தேங்காமல் தடுத்து, உடலை ஃபிட்டாக பராமரிக்க உதவுகிறது.
* இளநீர் ஒரு புத்துணர்ச்சியளிக்கும் பானம். இந்த பானமானது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதால், சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பானமாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இதில் மக்னீசியம் வளமான அளவில் இருப்பதால், இது இன்சுலின் சென்சிடிட்டிவிட்டியை அதிகரிக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுகின்றன. இருப்பினும், இதில் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால், சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் இதை உணவில் சேர்ப்பதற்கு முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
* இளநீர் உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைப்பதன் மூலம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல்வேறு இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. அதுவும் உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இளநீர் மிகச்சிறந்த பானமாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
* இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள் அதிகம் உள்ளதால், இதைக் குடிக்கும் போது உடல் நீரேற்றத்துடன் இருக்கும். அதுவும் உடற்பயிற்சியின் போது அல்லது தீவிரமான விளையாட்டுக்களில் ஈடுபடும் போது இழந்த நீரிழப்பை சரிசெய்ய இளநீர் பெரிதும் உதவி புரிகிறது. மேலும் இளநீரில் மக்னீசியம் மற்றும் கால்சியம் இருப்பதால், இது விளையாட்டு வீரர்களின் ஆரோக்கியத்தைப பராமரிக்க பெரிதும் உதவி புரியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
* முக்கியமாக இளநீரில் மிதமான இனிப்புச்சுவையுடன், நட்ஸின் ப்ளேவரும் இருப்பதால், இதை ஸ்மூத்தி, பாயாசம் போன்றவற்றுடன் சேர்த்துக் கொள்ளலாம். அதுவும் நீரிழப்பு பிரச்சனையை சந்திப்பவர்கள் இளநீரை குடித்து வந்தால், விரைவில் உடலை நீரேற்றத்தை அதிகரிக்கலாம்.
* இளநீர் சிறுநீரக கற்களை தடுக்க பெரிதும் உதவுகின்றன. சிறுநீரக கற்களானது கால்சியம், ஆக்ஸலேட் மற்றும் பிற கலவைகளுடன் இணைந்து கற்களாக உருவாகிறது. இந்த சிறிய கற்கள் மிகுந்த வலியையும், வேதனையையும் தடுக்கும். ஆனால் இளநீரைக் குடித்து வந்தால், அதில் உள்ள கலவைகள் இந்த கற்களை கரைத்து எளிதில் வெளியேற்றுவதோடு, அதன் அபாயத்தையும் தடுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











