Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மட்டன் ஈரல் Vs சிக்கன் ஈரல் - உண்மையில் இவற்றில் எது சிறந்தது? விளக்கும் டாக்டர்!
Mutton Liver Vs Chicken Liver: பொதுவாக அசைவ உணவுகளை எடுத்துக் கொண்டால், அதிக மக்களால் விரும்பி உண்ணக்கூடிய இறைச்சி என்றால் அது மட்டன் மற்றும் சிக்கன் தான். இதில் மட்டன் விலை அதிகம் என்பதால், நிறைய பேர் சிக்கனை அடிக்கடி வாங்கி சாப்பிடுவார்கள். இப்படி சிக்கனை வாங்கும் போது, அத்துடன் ஈரலையும் வாங்கி சாப்பிடுவார்கள்.
ஆனால் சிக்கன் ஈரல் நல்லதல்ல, மட்டன் ஈரல் தான் நல்லது என்று நிறைய பேர் சொல்வதைக் கேட்டு, உண்மையில் இவ்விரண்டில் எது ஆரோக்கியமானது என்ற கேள்வி பலரது மனதிலும் இருக்கும். உண்மையில், இந்த இரண்டில் எது சிறந்தது என்று டாக்டர் அருண்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் விரிவாக கூறியுள்ளார். அது என்னவென்பதை பார்போம் வாருங்கள்.

அதில் அவர் கூறியதாவது, "ஈரல் என்று எடுத்துக் கொண்டால், மட்டன் ஈரல், சிக்கன் ஈரல் - இவற்றில் எது சிறந்தது என்ற கேள்வி இருக்கும். இதில் 100 கிராம் மட்டன் ஈரல் மற்றும் சிக்கன் ஈரலில் சுமார் 160-170 கலோரிகளும், 20-25 கிராம் புரோட்டீனும், 5 கிராம் கொழுப்பும் உள்ளது. கொலஸ்ட்ரால் என்று எடுத்துக் கொண்டால் மட்டன், சிக்கன் என இரண்டிலும் 400-500 மிகி உள்ளது. மேலும் வைட்டமின் பி12 என்று பார்த்தால் மட்டன் ஈரலில் 85 மிகி/100கி, சிக்கன் ஈரலில் 16 மிகி/100கி உள்ளது.
இது தவிர ஒரு நாளைக்கு வேண்டிய 5000 யூனிட் வைட்டமின் ஏ சத்தில், 100 கிராம் மட்டன் ஈரலில் 6000 யூனிட்டும், அதுவே சிக்கன் ஈரலில் சுமார் 16000 யூனிட் வைட்டமின் ஏவும் உள்ளது. அதாவது கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாக வைட்டமின் ஏ சிக்கன் ஈரலில் உள்ளது. இது மிகவும் முக்கியமான விஷயம்.
ஒருவர் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ சத்தை எடுத்துக் கொண்டால், அதன் விளைவாக ஹைப்பர்வைட்டமினோசிஸ் ஏ என்று சொல்லக்கூடிய மூளை தொடர்பான பாதிப்புகள் அல்லது கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது" என்று கூறினார்.
ஒருவர் எவ்வளவு ஈரல் சாப்பிடலாம்?
ஒருவர் ஒரு வாரத்திற்கு எவ்வளவு ஈரல் சாப்பிடலாம் என்றால், பெரியவர்கள் தாராளமாக வாரத்திற்கு 100-200 கிராம் மட்டன் அல்லது சிக்கன் ஈரலை சாப்பிடலாம். குழந்தைகள் என்றால் வாரம் ஒருமுறை மட்டன் அல்லது சிக்கன் ஈரலை சுமார் 50 கிராம் கொடுக்கலாம். அதுவும் அவர்களின் சத்து குறைபாடு நிலையைப் பொறுத்து கொடுக்கலாம்.
அதுவே கர்ப்பிணி பெண்களாக இருந்தால், முதல் மூன்று மாதங்களில் வாரம் ஒரு முறை மட்டன் ஈரலை, அதுவும் 50 கிராமிற்கு மேல் எடுக்க வேண்டாம். சிக்கன் ஈரலில் வைட்டமின் ஏ அதிகம் என்பதால், அதை தவிர்த்து மட்டன் ஈரலை மட்டும் சாப்பிடுவது நல்லது என்று டாக்டர் அருண்குமார் கூறினார்.
என்ன நண்பர்களே! உங்களின் மனதில் நீண்ட நாட்களாக இருந்த கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டதா? மட்டன் ஈரல், சிக்கன் ஈரல் என இரண்டுமே நல்லது தான். ஆனால் மட்டன் ஈரலை விட சிக்கன் ஈரலில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், சிக்கன் ஈரலை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications