Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
இளநீருடன் இந்த 3 பொருட்களை கலந்து குடிச்சா.. இரட்டிப்பு நன்மைகள் கிடைக்குமாம்.. அது எதுலாம்-ன்னு பாருங்க...
Coconut Water Benefits In Tamil: பொதுவாக இளநீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த பானமாக கருதப்படுகிறது. அதுவும் இளநீரை கோடைக்காலத்தில் குடித்தால், உடல் சூடு குறைவதோடு, உடலும் நீரேற்றத்துடன் இருக்கும். இதற்கு இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், எலக்ட்ரோலைட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை தான் காரணம்.
இவை உடலுக்கு ஆற்றலையும், வலிமையையும் தருவதோடு, வேறு பல நன்மைகளையும் வழங்குகின்றன. முக்கியமாக இளநீரில் கலோரிகள் குறைவு, கொழுப்புக்கள் மற்றும் கொலஸ்ட்ரால் இல்லை என்பதால் டயட்டில் இருப்போரும் குடிக்க ஏற்ற பானமாகும். இப்படிப்பட்ட இளநீரை ஒருவர் கோடையில் தினமும் குடித்து வந்தால், கோடைக்காலத்தில் சந்திக்கும் பலவிதமான பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

அதுவும் இந்த இளநீரை வெறுமனே குடித்து போரடித்துவிட்டால், அத்துடன் ஒருசில பொருட்களை சேர்த்து கலந்து குடிக்கலாம். இதனால் இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும். இப்போது இளநீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் மற்றும் அவற்றை எந்த பொருட்களுடன் கலந்து குடித்தால் டபுள் நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
இரத்த அழுத்தம் குறையும்
பெரும்பாலான மக்கள் போதுமான அளவு பொட்டாசியத்தைப் பெறுவதில்லை. இந்த பொட்டாசியம் உடலில் இருந்து அதிகப்படியான சோடியத்தை சிறுநீரின் வழியே வெளியேற்ற உதவுகிறது. மேலும் இளநீர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே உயர் இரத்த அழுத்த நோயாளிகள் இளநீரை அடிக்கடி வாங்கி குடித்து வருவது நல்லது. அறுவை சிகிச்சை செய்வதற்கு 2 வாரத்திற்கு முன்பு முதல் இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
எடை குறைவுக்கு நல்லது
மற்ற பழச்சாறுகளில் சர்க்கரை, கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை அதிகமாக இருக்கும். ஆனால் இளநீரில் கலோரிகள் குறைவு மற்றும் இதில் இயற்கை சர்க்கரை இருப்பதால், பழச்சாறுகளுக்கு சிறந்த மாற்றாகும். இளநீரில் 94 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது மற்றும் இதில் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு குறைவு. எனவே உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர் இந்த பானத்தை தேர்ந்தெடுத்து குடிப்பது நல்லது.
சிறுநீரக கல்லை தடுக்கும்
தற்போது சிறுநீரக கல் பிரச்சனையால் நிறைய பேர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சிறுநீரக கல்லை தடுக்க வேண்டுமானால், உடல் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். அதற்கு நீரை அதிகம் குடிப்பது மட்டுமின்றி, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை மற்றும் பானங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதுவும் சிறுநீரக கல் பிரச்சனையைக் கொண்டவர்கள் மற்றும் சிறுநீரக கல் வரக்கூடாதெனில், இளநீரைக் குடித்து வருவது நல்லது.
இளநீருடன் எந்த பொருட்களை கலந்து குடிக்கலாம்?
எலுமிச்சை
இளநீருடன் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிப்பது நல்லது. இவ்விரண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளன. இது உடலில் எலக்ட்ரோலைட்டுக்களை சமநிலையில் வைத்திருக்க உதவும். மேலும் இப்படி இளநீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிக்கும் போது, உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேற்றப்படுவதோடு, உடல் எடையையும் குறைக்க உதவும்.
சப்ஜா விதைகள்
இளநீரில் கலந்து குடிக்க ஏற்ற மற்றொரு பொருள் என்றால் அது சப்ஜா விதைகள். இந்த சப்ஜா விதைகளை நீரில் ஊற வைத்து, இளநீரில் கலந்து குடிக்கும் போது, செரிமான பிரச்சனைகள் நீங்கி, செரிமானம் சீராக நடைபெறும். இது தவிர, சப்ஜா விதைகள் உடல் சூட்டைக் குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.
சோம்பு
இளநீருடன் சோம்பு விதையை ஊற வைத்து உட்கொள்வது மிகவும் நல்லது. இப்படி கோடைக்காலத்தில் குடிக்கும் போது, அது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். அதோடு செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும்.
எனவே, கோடைக்காலத்தில் வெறும் இளநீரைக் குடிப்பதற்கு பதிலாக, மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த பொருட்களை சேர்த்து குடித்து வந்தால், டபுள் நன்மைகளைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications