Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
பெண்களே! மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கடுமையான வலியைக் குறைக்கணுமா? இந்த தேநீர்களில் ஒன்றை குடிங்க...!
Menstrual Hygiene Day 2025: மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் உடலில் சில தொந்தரவுகள் ஏற்படும். அதில் பெரும்பாலான பெண்களை பாதிப்பது மாதவிடாய் கால வயிற்று வலி தான். மாதவிடாய் கால வலிக்கு ஒரு சில பெண்கள் மாத்திரை மருந்துகளை எடுத்து கொள்வார்கள், ஆனால் சிலரோ இதற்கு பலவகையான பக்கவிளைவில்லாத வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்வார்கள். அப்படி வீட்டு வைத்தியங்களை முயற்சிப்பவர்கள் இந்த டீ வகைகளையும் முயற்சி செய்து பாருங்கள்.

சிவப்பு ராஸ்பெர்ரி இலை தேநீர்
ராஸ்பெர்ரி தாவரங்களின் இலைகளிலிருந்து சிவப்பு ராஸ்பெர்ரி இலை தேநீர் தயாரிக்கப்படுகிறது. இது பிளாக் டீ போன்ற லேசான சுவை கொண்டது. ஆனால் இதில் ராஸ்பெர்ரி போன்ற சுவையை கொண்டிருக்காது.
பெண்களின் உடல் ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கருப்பை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சுருக்கங்களுக்கு இவை நல்ல தீர்வாக இருக்கின்றன.
இது கருப்பை பிரச்சனைகளை சீராக்கவும், கருப்பையை வலுப்படுத்தவும் உதவுகின்றன. ஆனால் இவற்றை நிரூபிக்க எந்த அறிவியல் காரணங்களும் இல்லை. ஆனால் இதனால் தங்கள் பிரச்சனை சரியானதாக பல பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இஞ்சி தேநீர்
இஞ்சி தேநீர் காரமான இஞ்சி வேரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இஞ்சி நாம் எப்போதும் நமது சமையலில் பயன்படுத்தும் இது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. பல வகையான வீட்டு வைத்தியங்களுக்கு இவை நல்ல பலன் அளிக்கின்றன. இதில் மாதவிடாய் பிரச்சனைகளும் அடங்கும்.
இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் இருப்பதால், இது வலி மற்றும் வீக்கம் என இரண்டிற்கும் நல்ல பலன் அளிக்கிறது. மாதவிடாயின் முதல் 3-4 நாட்களில் 750-2,000 மி.கி இஞ்சிப் பொடியை உட்கொள்வது மாதவிடாய் வலியைக் குறைக்க உதவுவதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கெமோமில் தேநீர்
உலர்ந்த கெமோமில் பூக்களால் கெமோமில் தேநீர் தயாரிக்கப்படுகிறது. இது லேசானது மற்றும் மலர் சுவை கொண்டது.
இது மாதவிடாய் பிடிப்பு வலிகளுக்கு நிவாரணம் தருகிறதா என தெரியவில்லை என்றாலும், இது நல்ல தூக்கத்தை கொடுத்து சோர்வை குறைக்க உதவுகிறது. ஒரு ஆய்வில் தொடர்ந்து கெமோமில் தேநீர் எடுத்து கொண்டவர்களுக்கு அதிக ரத்தபோக்கு குறைந்ததாக தெரிய வந்துள்ளது.
பெப்பர்மின்ட் தேநீர்
பெப்பர்மின்ட் செடியின் இலைகளிலிருந்து பெப்பர்மின்ட் தேநீர் தயாரிக்கப்படுகிறது. பெப்பர்மின்ட் இலைகளில் மெந்தால் நிறைந்துள்ளது. இது ஒரு வலுவான மணம் கொண்ட கலவையாக இருக்கிறது. இது குளிர்ச்சியான பண்புகளுடன் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.
பெப்பர்மின்ட் எண்ணெயில் உள்ள மெந்தால் மென்மையான தசை பிடிப்புகளைக் குறைக்க உதவுவதோடு, வலிமிகுந்த வயிற்றுப் பிடிப்புகளைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது மாதவிடாய் பிடிப்பு வலியை குறைப்பதாக எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றாலும், சில பெண்கள் இந்த வலி அனுபவ ரீதியாக குறைவதாக சில ஆதாரங்கள் இருக்கின்றன.
இலவங்கப்பட்டை தேநீர்
உலர்ந்த இலவங்கப்பட்டையிலிருந்து இலவங்கப்பட்டை தேநீர் தயாரிக்கப்படுகிறது. இது லேசான காரம் கலந்த இனிப்பான சுவையுடன் சூடாக தயாரிக்கப்படுகிறது.
சில ஆதாரங்கள் இலவங்கப்பட்டை வீக்கத்தைக் குறைக்க உதவுவதாக கூறுகின்றன, இது மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கலாம். பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் கருப்பை நீர்கட்டி பிரச்சனைக்கும் இலவங்கப்பட்டை உதவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
