Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
விந்தணு எண்ணிக்கை குறைவாக உள்ள ஆண்களுக்கு இந்த புற்றுநோய்கள் வர அதிக வாய்ப்பிருக்காம்... ஜாக்கிரதை...!
விந்தணு எண்ணிக்கைக்கும் புற்றுநோய் வருவதற்கான அபாயத்திற்கும் நேரடித் தொடர்பு உண்டு என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? தற்போது ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்தது, புற்றுநோய்க்கான குறைவாக அறியப்பட்ட ஆபத்து காரணியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, இது ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும்.
அமெரிக்காவில் உள்ள யூட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மரபணு வரிசைமுறை மூலம், விந்தணுவை உற்பத்தி செய்யாத ஆண்களின் குடும்பங்களில், எலும்பு மற்றும் மூட்டுகளில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 156 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அதே நேரத்தில் நிணநீர், மென்மையான திசு மற்றும் தைராய்டு புற்றுநோய்களை உருவாக்கும் ஆபத்து முறையே 60 சதவிகிதம், 56 சதவிகிதம் மற்றும் 54 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஒரு மில்லிலிட்டர் விந்தணுவிற்கு 1.5 மில்லியனுக்கும் குறைவான விந்தணு எண்ணிக்கையைக் கொண்ட ஆண்களின் கடுமையான ஒலிகோசூஸ்பெர்மிக் குடும்பங்கள், எலும்பு மற்றும் மூட்டுப் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் 143 சதவீதமும் மற்றும் டெஸ்டிகுலர் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் 134 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் கண்டறிந்தனர்.
ஆய்விற்காக, 1996 மற்றும் 2017 க்கு இடையில் அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் கருவுறுதல் கிளினிக்குகளில் கலந்து கொண்ட 786 ஆண்களின் விந்தணு பகுப்பாய்வு செய்யப்பட்டது. பொது மக்களில் 5674 கருவுற்ற ஆண்களின் தகவல்களுடன் அவர்கள் இந்த ஆண்களின் தகவல்களைப் பொருத்தினர்.
ஆராய்ச்சியளர்கள் இதைப்பற்றி கூறுகையில், " எங்கள் ஆய்வில், கருவுறுதல் குறைவாக உள்ள ஆண்களின் குடும்பங்களில் புற்றுநோய் அபாயத்தின் பல வடிவங்களை அடையாளம் கண்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் புற்றுநோய் ஆபத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்களுக்கு மரபணு, சுற்றுச்சூழல் அல்லது ஆரோக்கிய நடத்தைகள் பொதுவானவை என்று தெரிவிக்கிறது. மரபணு மற்றும் சுற்றுச்சூழலும் முக்கிய காரணமாக செயல்படலாம் " என்று கூறுகின்றனர்.
இந்த கண்டுபிடிப்புகள் புற்றுநோய் மற்றும் கருவுறாமை இரண்டிலும் சம்பந்தப்பட்ட உயிரியல் வழிமுறைகள் பற்றிய அவர்களின் புரிதலை மேம்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இது கருவுறாத ஆண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு புற்றுநோய் அபாயத்தை இன்னும் துல்லியமாக கணிக்க உதவும், மேலும் இது அவர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகளை மேம்படுத்தலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஆண்களுக்கான சரியான விந்தணுக்களின் எண்ணிக்கை
ஆண்களில் சரியான விந்தணு எண்ணிக்கை பொதுவாக ஒரு மில்லிலிட்டர் விந்தணுவிற்கு குறைந்தது 15 மில்லியன் விந்துகளாகக் கருதப்படுகிறது. இருப்பினும், விந்தணுக்களின் இயக்கம் மற்றும் உருவவியல் போன்ற காரணிகளைப் பொறுத்து, குறைந்த விந்தணு எண்ணிக்கையுடனும் கருவுறுதலை அடைய முடியும்.
விந்தணு எண்ணிக்கை என்பது ஆண்களின் கருவுறுதலின் ஒரு அம்சமாகும், மேலும் விந்தணுக்களின் தரம், இயக்கம் மற்றும் மரபணு ஒருமைப்பாடு போன்ற காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு சுகாதார நிபுணரால் நடத்தப்படும் ஒரு விரிவான விந்து பகுப்பாய்வு ஆண் கருவுறுதல் திறன் பற்றிய மிகவும் துல்லியமான மதிப்பீட்டை வழங்க முடியும்.
ஆண்களுக்கு மற்ற புற்றுநோய் ஏற்பட ஆபத்து காரணிகள்
ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் ஆபத்து மரபியல், வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் சுற்றுச்சூழல் வெளிப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகிறது. ஆண்களைப் பாதிக்கும் பொதுவான புற்றுநோய்களில் புரோஸ்டேட், நுரையீரல், பெருங்குடல் மற்றும் தோல் புற்றுநோய் ஆகியவை அடங்கும். ஆண்களின் வயதும் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது, புற்றுநோய் ஆபத்துகள் பொதுவாக வயதிற்கு ஏற்ப அதிகரிக்கும்.
புகைபிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல், தவறான உணவுமுறை, உடல் உழைப்பு இல்லாமை, மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் சூழலில் நீண்ட நேரம் இருப்பது போன்றவை புற்றுநோய் அபாயத்தை மேலும் அதிகரிக்கலாம்.
சீரான உணவைப் பராமரித்தல், சுறுசுறுப்பாக இருத்தல், புகையிலையைத் தவிர்த்தல் மற்றும் மது அருந்துவதைக் கட்டுப்படுத்துதல் போன்ற ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை வழக்கமான பரிசோதனைகள், முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுதல் ஆகியவை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும், ஆண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
