Latest Updates
-
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (19 July 2026-25 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது..! -
பரோட்டா கடை சிக்கன் சால்னா டேஸ்ட்டா இருப்பதன் ரகசியம் இதாங்க! -
ராகு-கேதுவின் பிடியில் இருந்து விடுபடும் 6 கிரகங்கள்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்! -
தினமும் சிறிது முருங்கை இலையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
ஆண்களே! இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடாதீங்க.. இல்ல விந்தணுக்கள் குறைஞ்சிடும்...
Male Fertility: தற்போதைய நமது மாறிவரும் வாழ்க்கை முறையின் தாக்கம் நமது ஆரோக்கியத்தில் நன்கு தெரிகிறது. அதுவும் மன அழுத்தம் நிறைந்த பணியிடம் மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறையினால், நிறைய பேர் தங்களின் ஆரோக்கியத்தில் சரியாக கவனம் செலுத்துவதில்லை.
குறிப்பாக இனப்பெருக்க ஆரோக்கியத்தை பலரும் கவனிப்பதில்லை. அதுவும் தற்போது உணவுப் பழக்கத்தில் தான் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான உணவுப் பழக்கத்தின் தாக்கம், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும், முக்கியமாக கருவுறும் திறனில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

அதுவும் தற்போது ஆண்கள் 40 வயதை எட்டுவதற்குள்ளேயே விந்தணுக்களின் எண்ணிக்கையில் குறைபாட்டை சந்திக்கின்றனர். இதற்கு ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகள் காரணமாக இருந்தாலும், உணவுகளும் முக்கிய பங்கை வகிக்கின்றன. இப்படி ஆணுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்தால், பின் அது குழந்தை பெற்றெடுப்பதில் சிக்கலை உண்டாக்கிவிடும்.
விந்தணுக்களின் எண்ணிக்கை ஏன் குறைகிறது?
விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது, போதைப் பொருள் பழக்கம், உடல் பருமன், மனநல பிரச்சனைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இது தவிர உணவுகளும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
எனவே ஒரு ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையாமல், ஆரோக்கியமான அளவில் இருக்க வேண்டுமானால், முதலில் உண்ணும் உணவுகளை கவனத்தை செலுத்த வேண்டும். அதற்கு ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்வது மட்டுமின்றி, ஒருசில உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் சில உணவுகள் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். இப்போது எந்த உணவுகளை ஆண்கள் சாப்பிட்டால் விந்தணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படும் என்பதைக் காண்போம்.
1. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் சுவையாக இருக்கும். ஆனால் அந்த இறைச்சியைப் பதப்படுத்த பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் விந்தணுக்களின் உற்பத்தியை பாதித்து, விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் மற்றும் அதன் இயக்கத்தையும் பாதிக்கும். எனவே ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையாமல் இருக்க பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
2. ட்ரான்ஸ் கொழுப்புகள்
ட்ரான்ஸ் கொழுப்புக்கள் தான் இதய நோய்க்கு முக்கிய காரணம். இந்த ட்ரான்ஸ் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும் போது, இதய நோயின் அபாயம் அதிகரிப்பது மட்டுமின்றி, விந்தணுக்களின் எண்ணியும் குறைந்து, ஆண்களின் கருவுறும் திறன் குறையும். எனவே இப்படிப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
3. சோயா பொருட்கள்
சோயா பொருட்களில் கால்சியம் அதிகம் இருக்கலாம். ஆனால் இந்த சோயா பொருட்களை ஆண்கள் அதிகம் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இந்த சோயா பொருட்களில் தாவர அடிப்படையிலான ஈஸ்ட்ரோஜென்கள் மற்றும் பைட்ரோஈஸ்ட்ரோஜென்கள் உள்ளன. இவற்றை அதிகம் உட்கொள்ளும் போது, அது ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடும்.
4. பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிஸ்பெனால் ஏ (BPA)
தற்போது காய்கறிகள் மற்றும் பழங்களில் பூச்சிக்கொல்லிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி பூச்சிக்கொல்லிகள் அடிக்கப்பட்ட உணவுப் பொருட்களை சரியாக கழுவாமல் உட்கொண்டு வந்தால், பின் அது இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கும். மேலும் நான்ஸ்டிக் பாத்திரத்தில் பூசப்பட்டிருக்கும் சில ரசாயனங்களும் ஆண்களின் கருவுறுதலை பாதிக்கும். எனவே நான்ஸ்டிக் பாத்திரங்களில் அதிகம் சமைத்து சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.
5. கொழுப்பு நிறைந்த பால்
பால் உடலுக்கு ஆரோக்கியமானது தான். ஆனால் கொழுப்பு நிறைந்த பால் தீங்கை விளைவிக்கும். அதுவும் பசுக்களுக்கு கொடுக்கப்படும் ஸ்டெராய்டுகள் உடலுக்கு தீங்கை விளைவிப்பதோடு, விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கவும் செய்கின்றன. எனவே இந்த வகை உணவுகளை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications