Latest Updates
-
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...
உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உடம்புல இந்த சத்து கம்மியா இருக்குன்னு அர்த்தம்...
Magnesium Deficiency Symptoms In Tamil: உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் உடலின் செயல்பாட்டிற்கு தேவையான சத்துக்கள் போதுமான அளவில் கிடைக்க வேண்டும். அப்படி உடலுக்கு வேண்டிய மிகவும் முக்கியமான சத்துக்களுள் ஒன்று தான் மக்னீசியம்.
இந்த மக்னீசியம் உடலில் 300-க்கும் அதிகமான உயிர்வேதியியல் எதிர்வினைகளுக்கு தேவைப்படுகிறது. குறிப்பாக இந்த மக்னீசியம் நரம்புகளின் ஆரோக்கியம், தசை செயல்பாடுகள், ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலம், சீரான இதயத்துடிப்பு, வலுவான எலும்புகள், இரத்த சர்க்கரை அளவை சரிசெய்யவும், ஆற்றல் மற்றும் புரோட்டீன் உற்பத்திக்கும் உதவுகிறது.

இப்படிப்பட்ட மக்னீசியம் நட்ஸ், விதைகள், பச்சை இலை காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற நாம் உண்ணும் பல உணவுகளில் நிறைந்துள்ளன. இருப்பினும் இந்த சத்து பலருக்கு போதுமான அளவு கிடைக்காமல் இருக்கலாம். இப்படி உடலுக்கு மக்னீசியம் போதுமான அளவு கிடைக்காமல் போனால், பல விளைவுகள் ஏற்படலாம்.
இவ்வாறு உடலில் மக்னீசியம் மிகவும் குறைவாக இருப்பதை மருத்துவ ரீதியாக ஹைப்போமக்னீசீமியா என்று அழைப்பர். சரி, மக்னீசியம் உடலில் குறைவாக இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்று கேட்கலாம். கீழே மக்னீசியம் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அடிக்கடி தசைப்பிடிப்புகள்
உங்களுக்கு அடிக்கடி கால்களில் தசைப்பிடிப்புகள் ஏற்படுகிறதா? அப்படியானால் உங்கள் உடலில் போதுமான மக்னீசியம் இல்லை என்று அர்த்தம். ஏனெனில் மக்னீசியம் சுருங்கிய தசைகளை தளர்வடையச் செய்து ஓய்வளிக்கிறது. இதன் அளவுகள் குறையும் போது, தசைகள் கட்டுப்பாடு இல்லாமல் சுருங்கி, கடுமையான வலியையும், பிடிப்பையும் உண்டாக்கும்.
2. மிகுந்த உடல் சோர்வு
இரவு போதுமான தூக்கத்தை மேற்கொண்ட பின்னரும் மிகுந்த சோர்வாக உணர்கிறீர்களா? அப்படியானால் உடலில் மக்னீசியம் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக உண்ணும் உணவை உடைத்து ஆற்றலை உருவாக்க இந்த மக்னீசியம் மிகவும் முக்கியமானது. ஆனால் இச்சத்து மிகவும் குறைவாக இருந்தால், உடல் ஆற்றலை உருவாக்க சிரமப்படும். இதன் விளைவாக மிகுந்த உடல் சோர்வு மற்றும் பலவீனத்தை உணரக்கூடும்.
3. சீரற்ற இதயத்துடிப்பு
ஒருவரது இதயத்துடிப்பு சீராக இருக்க வேண்டுமானால் மக்னீசியம் மிகவும் முக்கியம். இந்த மக்னீசியம் உடலில் மிகவும் குறைவாக இருந்தால், அது இதயத்துடிப்பை வேகமாகவோ அல்லது ஒழுங்கற்றதாகவோ துடிக்க வைக்கும். மோசமான சந்தர்ப்பங்களில் இது இதய பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அபாயத்தையும் அதிகரிக்கலாம். எனவே நெஞ்சு வலியுடன், ஒழுங்கற்ற இதயத்துடிப்பையும் சந்தித்தால், உடலில் மக்னீசியம் குறைவாக இருப்பதற்கான வாய்ப்புள்ளது.
4. மனநிலை மாற்றங்கள்
உடலில் மக்னீசியம் போதுமான அளவு இல்லாவிட்டால், மூளையின் செயல்பாடு குறைவதோடு, மனநிலையை சீராக வைத்துக் கொள்வதும் கடினமாக இருக்கும். இதன் விளைவாக அடிக்கடி அதிக கோபம் வருவதோடு, மந்தமாகவும் இருக்கும். ஏனெனின் இந்த மக்னீசியம் நாம் எப்படி உணர்கிறோம், மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்கிறோம் என்பதைப் பாதிக்கின்றன. ஆகவே உங்கள் மனநிலையில் மாற்றங்களை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
5. தூங்குவதில் சிரமம்
உங்களால் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ள முடியவில்லையா? இரவு நேரத்தில் நீண்ட நேரம் எழுந்துள்ளீர்களா? அப்படியானால் உடலில் மக்னீசியம் குறைவாக உள்ளது என்று அர்த்தம். ஏனெனில் மக்னீசியம் தான் தூக்கத்தை கட்டுப்படுத்தும் ஹார்மோனான மெலடோனின் உற்பத்திக்கு உதவுகிறது. இது உடலையும், மனதையும் ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதன் விளைவாக ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவுகிறது.
எனவே நண்பர்களே! மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி தவறாமல் பரிசோதனை செய்து பாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications