உங்க சருமத்தில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்..

Lung Cancer Symptoms In Tamil: சமீப காலமாக இதய நோயால் மட்டுமின்றி, புற்றுநோயாலும் நிறைய பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புற்றுநோய் ஒரு கொடிய நோய். ஆரம்ப காலத்தில் இந்த புற்றுநோயை குணப்படுத்த முடியாத காரணத்தினால், இந்நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமானோருக்கு மரணம் தான் ஒரே வழியாக இருந்தது. ஆனால் தற்போது மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை மேற்கொண்டால், குணப்படுத்திடலாம்.

இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அது பாதிக்கப்பட்ட பகுதியைப் பொறுத்தது. அதில் உலகளவில் அதிகமானோர் பாதிக்கப்படும் ஒரு வகை தான் நுரையீரல் புற்றுநோய். இந்த வகை புற்றுநோயால் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் உலகில் சுமார் 2.5 மில்லியன் புதிய வழக்குகளும், 1.8 மில்லியன் மரணங்களும் பதிவாகி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட நுரையீரல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், குணப்படுத்திவிடலாம்.

Lung Cancer Symptoms Top 5 Skin Problems That Could Signal Lung Cancer

ஆனால் இந்த புற்றுநோய் செல்கள் உடலில் பரவ ஆரம்பித்துவிட்டால், நிச்சயம் மரணம் ஏற்படும். இந்த நுரையீரல் புற்றுநோய் ஒருவருக்கு இருந்தால், அது சருமத்தில் ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளை கவனித்தால், ஆரம்பத்திலேயே இந்த நுரையீரல் புற்றுநோயை கண்டறிந்து, குணப்படுத்தலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.

1. சருமத்தில் கட்டிகள்

நுரையீரல் புற்றுநோய் செல்கள் இரத்த நாளங்களின் வழியே ஊடுருவி, சருமத்திற்கு அடியில் ஆங்காங்கி தங்கி, கட்டிகளை அல்லது வீக்கத்தை உண்டாக்கலாம். இந்த வகை கட்டிகள் கடினமாகவோ அல்லது ரப்பர் போன்றோ இருக்கலாம். மேலும் இந்த வகை கட்டிகள் மார்பு, முதுகு, கழுத்து அல்லது உச்சந்தலையில் காணப்படலாம். முக்கியமாக இந்த கட்டிகள் வலியற்றவையாக இருக்கும். அதோடு சருமத்தின் நிறம் சிவந்தோ அல்லது நீல நிறமாகவோ காணப்படலாம். எனவே இப்படியான கட்டிகளை உங்கள் சருமத்தில் கண்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

2. தொடர் அரிப்பு

நுரையீரல் புற்றுநோயானது நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டி, சருமத்தில் விசித்திரமான வெடிப்புக்கள் அல்லது தொடர் அரிப்புக்களை உண்டாக்கும். அதுவும் இந்த வெப்புகள் முதுகு அல்லது மார்பில் அசாதாரண வடிவங்களான வளையங்கள் போன்று காணப்படும். எனவே உங்கள் சருமத்தில் காரணமின்றி இப்படியான வீக்கத்துடன் தொடர் அரிப்புக்களை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

3. மஞ்சள் நிற சருமம்

நுரையீரல் புற்றுநோய் கல்லீரல் வரை பரவி இருந்தால், அது பித்த நாளங்களை பாதித்து, அதன் விளைவாக சருமம் அல்லது கண்களின் நிறம் மஞ்சள் நிறத்தில் மாறும். மஞ்சள் காமாலை பொதுவாக சோர்வு மற்றும் எடை இழப்பு உள்ளிட்ட பிற அறிகுறிகளுடன் தொடர்புடையது. இந்த மஞ்சள் நிறமாற்றத்தை முன்கூட்டியே கண்டறிவது நுரையீரல் புற்றுநோயால் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவதைக் கண்டறிவதற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கலாம்.

4. விரல்கள் மற்றும் நகங்கள் உடைவது

நுரையீரல் புற்றுநோய் உட்பட நாள்பட்ட நுரையீரல் நோய்களில் விரல் நகங்கள் வளைந்திருக்கும். எனவே உங்கள் விரல் நுனிகள் மற்றும் நகங்கள் வட்டமாகவும், குண்டாகவும், வளைந்தும் இருந்தால், நுரையீரலில் பெரிய பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இரத்தத்தில் நீண்டகாலமாக குறைந்த ஆக்ஸிஜன் அளவுகள் இருப்பதாலும், விரல் நுனியில் உள்ள திசுக்களில் அதன் விளைவுகள் இருப்பதாலும் இது நிகழ்கிறது.

5. சரும மாற்றங்கள்

உள்ளங்கையில் வழக்கத்திற்கு மாறாக காணப்படும் தடித்த, மென்மையான தோல் திட்டுகள், கழுத்து மற்றும் மடிப்பு பகுதிகளில் இருக்கும் கருமையான திட்டுகள் போன்றவை நுரையீரல் புற்றுநோயுடன் தொடர்புடையவை. ஏனெனில் இவ்விரண்டும் நுரையீரல் புற்றுநோயால் உற்பத்தி செய்யப்படும் சில பொருட்கள் அல்லது குறிப்பிட்ட ஹார்மோன்களால் ஏற்படக்கூடியவை. எனவே இப்படியான சரும மாற்றங்களைக் கண்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

எனவே நண்பர்களே! மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை உங்கள் சருமத்தில் கண்டால், அவற்றை புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள். இதனால் நுரையீரல் புற்றுநோயால் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, January 5, 2026, 14:00 [IST]
Desktop Bottom Promotion