Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
இந்த 4 பழக்கங்களை உடனே கைவிடுங்க.. இல்ல கல்லீரல் புற்றுநோய் சீக்கிரம்வந்துடும்.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்
Liver Cancer: உலகில் இதய நோய்க்கு அடுத்தபடியாக ஏராளமானோரின் உயிரைப் பறிக்கும் நோய் என்றால் அது புற்றுநோய் தான். இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. இவை புற்றுநோய் செல்கள் வளரும் இடத்தைப் பொறுத்து வேறுபடும். அதில் உலகளவில் 6 ஆவது மிகவும் பொதுவான புற்றுநோய் தான் கல்லீரல் புற்றுநோய். இது ஆண்களில் 5 ஆவது மிகவும் பொதுவான புற்றுநோயாகவும், பெண்களில் 9 ஆவது பொதுவான புற்றுநோயாகவும் உள்ளது.
இந்த புற்றுநோய் ஒருவருக்கு வருவதற்கு உணவுப் பழக்கங்களும், வாழ்க்கை முறையும், சுற்றுச்சூழல் காரணிகளும் தான் முக்கிய காரணங்களாகும். இதில் மரபணுக்களால் வரக்கூடியதை நம்மால் தடுக்க முடியாவிட்டாலும், ஒருசில பழக்கங்களால் வரக்கூடியதை நம்மால் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க மாற்றங்களின் மூலம் தடுக்க முடியும்.

கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க வேண்டுமானால், ஒருவர் தவிர்க்க வேண்டிய 4 மோசமான விஷயங்கள் குறித்து இரைப்பை குடல் நிபுணரான டாக்டர். சௌரப் சேத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவை என்னவென்பதைப் படித்து தெரிந்து, அந்த பழக்கங்களை உடனே கைவிட முயற்சி செய்யுங்கள்.
1. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
கல்லீரல் புற்றுநோய் வரக்கூடாதெனில், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளான பேகன், சாசேஜ், ஹாட் டாக்ஸ் போன்றவற்றை முதலில் ஒருவர் தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் சேத்தி கூறினார். ஏனெனில் இந்த வகை உணவுகளில் நைட்ரேட்டுகள் மற்றும் பதப்படுத்தும் கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. இவை காலப்போக்கில் கல்லீரலில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி, கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரித்துவிடும். எனவே இந்த வகை இறைச்சிகளை முதலில் தவிர்த்திடுங்கள்.
2. ஆல்கஹால்
தற்போது ஆல்கஹால் அருந்துவது ஒரு சாதாரணமான விஷயமாகிவிட்டது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் ஆல்கஹாலை அருந்துகின்றனர். ஆனால் மிதமான அளவில் ஆல்கஹாலை அருந்தினாலும், கல்லீரல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் கல்லீரல் அழற்சி மற்றும் கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்று டாக்டர் எச்சரித்தார். முக்கியமாக ஆரோக்கியம் என்று நினைக்கும் ரெட் ஒயின் கூட ஆபத்தானது என்று கூறினார். எனவே கல்லீரல் புற்றுநோய் வரக்கூடாதெனில் ஆல்கஹால் அருந்துவதை தவிர்த்திடுங்கள்.
3. சர்க்கரை பானங்கள்
சர்க்கரை பானங்களை அருந்துவதும் கல்லீரல் புற்றுநோயை வரவழைக்கும் என்று டாக்டர் சேத்தி கூறியுள்ளார். ஏனெனில் சர்க்கரை பானங்களான சோடா, எனர்ஜி பானங்கள் மற்றும் பிற சர்க்கரை பானங்களில் ஃபுருக்டோஸ் உள்ளது. இது கல்லீரலில் சுமையை அதிகரித்து, கொழுப்பு கல்லீரல் அபாயத்தை அதிகரித்துவிடும். காலப்போக்கில் இந்த கொழுப்பு கல்லீரல் பிரச்சனையானது, கல்லீரல் புற்றுநோயாக மாறலாம். எனவே சர்க்கரை பானங்களை குடிப்பதை அறவே தவிர்த்திடுங்கள்.
4. வறுத்த உணவுகள்
எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளான பிரெஞ்சு ப்ரைஸ், சிப்ஸ், ப்ரைடு சிக்கன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் சேத்து கூறுகிறார். இந்த வகை உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், அது நாள்பட்ட கல்லீரல் வீக்கத்தை உண்டாக்கி, நாளடைவில் கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரித்துவிடும் என்றும் கூறினார்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை இதுவரை நீங்கள் உட்கொண்டு வந்தால், இனிமேல் அந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள். இதன் மூலம் கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

