Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
உங்க உடல் வலி அனைத்தும் பஞ்சா பறந்துபோக... சமையலறையில் இருக்கும் இந்த பொருட்கள யூஸ் பண்ணுங்க!
சில நேரங்களில் உடல் வலி ஏற்படுவது பொதுவானது. ஆனால், கழுத்து மற்றும் மூட்டு வலி உங்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கலாம். பெரும்பாலும் நம் உடலின் எந்தப் பகுதியில் வலியை உணர்ந்தாலும், உடனடி நிவாரணத்திற்கான மாத்திரையை விரைவாக எடுத்துக் கொள்ளகிறோம். வலிக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
இருப்பினும் உங்கள் சொந்த சமையலறையிலிருந்து வலியை சமாளிக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களை நீங்கள் முயற்சி செய்யலாம். ஏனெனில், மாத்திரை அதிகமா எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சில நேரங்களில் உங்களுக்கு பக்கவிளைவை ஏற்படுத்தலாம். ஆனால், இயற்கை பொருட்கள் உங்களுக்கு எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.

இயற்கை வைத்தியம் நம் உடலுக்கு அதிசயங்களைச் செய்து, நீண்ட காலத்திற்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்வதிலிருந்து நம்மைத் தவிர்க்கலாம். உங்களுக்கு உதவும் இயற்கை வலி நிவாரணப் பொருட்களைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
இஞ்சி
ஆயுர்வேத மற்றும் வீட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களில் முக்கியமானது இஞ்சி. வலி நிவாரணத்திற்குப் பயன்படுத்தப்படும் இஞ்சி, அழற்சி எதிர்ப்பு முகவராக செயல்படுகிறது. இது உடலின் ஒட்டுமொத்த வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. குமட்டல் மற்றும் இயக்க நோய்க்கு சிகிச்சையளிக்க உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செல் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இது உதவுகிறது.
இஞ்சி, பல்வலி மற்றும் மூட்டு வலிகளுக்கு நல்ல நிவாரணத்தை வழங்குகிறது. குடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செரிமான இயக்கத்தை அதிகரிக்கவும் மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது. எனவே வலியை விடுவிக்க உதவுவதோடு, உங்கள் உடல் எடையை குறைக்கவும் இஞ்சி உதவுகிறது.
மஞ்சள்
இந்திய சமையலில் மிகவும் பிரபலமான மசாலா பொருள் மஞ்சள். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ள மஞ்சள், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. மஞ்சளில் காணப்படும் முக்கிய மூலப்பொருளான குர்குமின், வலி நிவாரண பண்புகளைக் கொண்டுள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மஞ்சளை, உங்கள் அன்றாட சமையலில் பயன்படுத்த மறக்காதீர்கள்.
அழற்சி எதிர்ப்பு உணவாக இருப்பதால், முடக்கு வாதம், அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் அழற்சி, கிரோன் நோய், அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் வயிற்றுப் புண்களுக்கு சிகிச்சையளிக்க மஞ்சள் உதவுகிறது. மேலும், இது கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது மற்றும் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
புளிப்பு செர்ரி
பைட்டோநியூட்ரியண்ட்ஸ், ஆர்கானிக் அமிலங்கள் மற்றும் பல கரோட்டினாய்டுகளின் சக்தியாக இருப்பதால், செர்ரிகளில் அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் உள்ளது. மேலும், இதில் பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் மெலடோனின் உள்ளது. செர்ரிகளை உட்கொள்வது கழுத்து வலி மற்றும் மூட்டு வலிகளைப் போக்க உதவுகிறது. இரவில் தூங்குவதற்கு இதன் செர்ரி சாற்றை உட்கொண்டால், நல்ல தூக்கத்தைப் பெறலாம்.
காரவே விதைகள்
காரவே விதைகள் செரிமானத்தை மேம்படுத்தவும், அஜீரணம், வீக்கம் மற்றும் வாய்வு காரணமாக ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த விதைகளை கொண்டு தயாரிக்கப்படும் தேநீர், சிறு குடல் பாக்டீரியா வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பலனை அளிக்கிறது.
புதினா எண்ணெய்
எரிச்சல் கொண்ட குடல் நோய்குறியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிறந்த வலி நிவாரணியாக புதினா எண்ணெய் இருக்கும். ஆனால், உங்களுக்கு ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனை இருந்தால் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், உங்களுக்கு மூட்டு, கழுத்து வலி இருந்தால் புதினா எண்ணெயை தாராளமாக பயன்படுத்தலாம்.
ஆர்கனோ எண்ணெய்
ஆர்கனோ எண்ணெய் ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பு முகவர். செரிமான பிரச்சனைகளுக்கு நன்றாக வேலை செய்யும் ஆர்கனோ எண்ணெய், ஒரு அற்புதமான சப்ளிமெண்ட்டாக பயன்படுத்தலாம். இது வீக்கம், தசைப்பிடிப்பு மற்றும் இரைப்பை பிரச்சனைகளால் ஏற்படும் வலியை நீக்குகிறது. நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, வலி நிவாரணியாகவும் ஆர்கனோ எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய்
லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய் இயற்கையாகவே வலியைக் குறைக்க உதவுகிறது. வலி நிவாரணம் வழங்கவும், நன்றாக தூங்கவும் மற்றும் கவலையின் எந்த அறிகுறிகளையும் எளிதாக்க லாவெண்டர் எண்ணெயைப் பயன்படுத்தலாம். லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெயை உள்ளிழுப்பது ஒற்றைத் தலைவலியுடன் தொடர்புடைய வலியைப் போக்க உதவுகிறது.
மேற்கூறிய அனைத்து பொருட்களும் இயற்கையானவை. வலி நாள்பட்டதாக இருந்தால் மற்றும் நீண்ட நேரம் நீடித்தால், உடனே மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது நல்லது. வலியைக் குறைக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். சாதாரணமாக வலி ஏற்படும்போது, இந்த இயற்கை வைத்தியங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

