Latest Updates
-
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.! -
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்.. -
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா?
உங்ககிட்ட இந்த பழக்கங்கள் இருக்கா? அப்ப உங்க கிட்னி சீக்கிரம் டேமேஜ் ஆகிரும்... ஜாக்கிரதையா இருங்க...!
சிறுநீரகம் உங்கள் கவனிப்பை எதிர்பார்த்து அழும் செல்ல குழந்தை அல்ல. அது பெரியவர்களை போல் ஆரம்பத்தில் எதையும் சொல்லாமல் உங்களை பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடும். இதில் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விஷயம் என்னவென்றால், நமது தினசரி பழக்கவழக்கங்கள் தான் கிட்னியை பெரிய பேராபத்தில் கொண்டு போய் விடுகின்றன. அவை என்னென்ன பழக்கவழக்கங்கள் என்று அறிந்து அவற்றை தவிர்க்கும் வழிகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சிறுநீரை நீண்ட நேரம் அடக்குவது
பெரும்பாலும் நீங்கள் நீண்ட அலுவலக போனில் இருக்கும் போது அல்லது போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருக்கும் போது அல்லது தொலை தூர பயணங்கள் மேற்கொள்ளும் போது அல்லது சோம்பேறியாக சோவில் இருந்து இறக்க மனமில்லாமல் உட்காந்திருக்கும் போது என பல காரணங்களால் சிறுநீரை அடக்கி வைத்திருக்கலாம். சரியான இடைவெளி எடுத்து சிறுநீர் கழிக்காமல் தாமதப்படுத்துவது சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை அதிகரிக்கும். இது காலப்போக்கில் தொற்றுகள், சிறுநீரக கற்கள் அல்லது பெரிய அளவிலான பாதிப்பிற்கு வழிவகுக்கும்.
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது அல்லது சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் அதீத வலி அல்லது துர்நாற்றம் வீசும் சிறுநீர் போன்றவை சில ஆரம்ப கால அறிகுறிகள். உங்கள் உடல் சொல்வதை கவனியுங்கள். உங்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றினால் உடனே செல்லுங்கள் தாமதிக்காதீர்கள். உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள். இதனால் சிறுநீரகங்கள் நச்சுகளை திறம்பட வெளியேற்ற முடியும்.
உணவில் உப்பை அதிகம் சேர்த்து கொள்வது
உங்கள் உணவில் அதிக அளவில் உப்பை சேர்க்காமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் சாப்பிடும் சிப்ஸ், ரெடிமேட் சூப் வகைகள், மற்றும் உடனடி நூடுல்ஸ் போன்றவற்றை அதிகமாக சாப்பிடுவது, உங்கள் சிறுநீரகங்களால் கையாள முடியாத அளவிற்கு சோடியத்தை உங்கள் உடலில் சேர்க்கும். அதிக அளவில் உணவில் உப்பை சேர்ப்பது இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு, கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கும்.
நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய ஆரம்ப அறிகுறிகள் கணுக்கால், கைகள் அல்லது முகத்தில் வீக்கம், தொடர்ச்சியான தலைவலி மற்றும் உயர் இரத்த அழுத்த அளவீடுகள் ஆகியவை. ஒரு நாளைக்கு 2,300 மி.கி.க்கும் குறைவாக அல்லது ஒரு டீஸ்பூன் உப்பை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, அதற்கு பதிலாக மூலிகைகள், எலுமிச்சை சாறு அல்லது பூண்டை உங்கள் உணவின் சுவையூட்டியாக எடுத்து கொள்ளுங்கள்.
வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்துதல்இப்யூபுரூஃபன் மற்றும் டைக்ளோஃபெனாக் போன்ற மருந்துச் சீட்டு இல்லாமல் கிடைக்கும் வலி நிவாரணிகளை அடிக்கடி அல்லது சரியான நீரேற்றம் இல்லாமல் எடுத்துக் கொண்டால் அவை உங்கள் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். அவை சிறுநீரகங்களுக்கான இரத்த ஓட்டத்தைக் குறைக்கின்றன, இது காலப்போக்கில் சேதத்தை ஏற்படுத்தக்கூடும், குறிப்பாக நீங்கள் ஏற்கனவே நீரிழப்பு அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் இது நிலையை மேலும் மோசமாக்கும்.
போதுமான உடல் உழைப்பு இல்லாமை
வீட்டிலேயே அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருப்பது ஜாலியாகத்தான் இருக்கும். ஆனால் அது உங்கள் சிறுநீரகங்களுக்கு நிச்சயம் நல்லதல்ல. குறைந்த உடல் செயல்பாடுகளுடன் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இரத்த ஓட்டத்தை மெதுவாக்குகிறது மற்றும் எடை அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கிறது, மேலும் உயர் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது - இவை இரண்டும் சிறுநீரக ஆரோக்கியத்தை பாதிக்கும் முக்கிய காரணங்களாகும். உடல் உழைப்பிற்கு ஜிம்மிற்க்குத்தான் செல்ல வேண்டுமென்று அவசியமில்லை, 30 நிமிட விறுவிறுப்பான நடை, வேலை இடைவேளையின் போது 10 நிமிட ஸ்ட்ரெச்சஸ் அல்லது சிறிய நடனம் கூட போதுமானது.
சர்க்கரை அதிகமுள்ள பானங்களை அதிகமாகக் குடிப்பது
குளிர்பானங்கள் தற்காலிக நிவாரணத்தைக் கொடுக்கலாம், ஆனால் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும். அவை உங்கள் எடையை அதிகரிப்பது மட்டுமின்றி, உங்கள் சிறுநீரகங்களையும் பாதிக்கின்றன. அதிகப்படியான சர்க்கரை உடல் பருமன் மற்றும் இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும், இது டைப் 2 நீரிழிவு மற்றும் சிறுநீரக பாதிப்புக்கான உங்கள் ஆபத்தை அதிகரிக்கும். கோடைகாலத்தில் குளிர்பானங்களுக்குப் பதிலாக தண்ணீர், எலுமிச்சை சாறு, பழச்சாறுகள் போன்றவற்றை அருந்துவது நல்லது.
ஆரம்ப கால அறிகுறிகள்
பெரும்பாலான சிறுநீரக பிரச்சினையின் அறிகுறிகள் மெதுவாகவும் அமைதியாகவும் தொடங்குகின்றன. எனவே அவற்றை சரியாக கவனிக்க வேண்டும். நுரை அல்லது குமிழி போன்ற சிறுநீர் (புரத இழப்பின் அறிகுறி), வீங்கிய பாதங்கள் அல்லது கணுக்கால், அதிகமான சோர்வு, வறண்ட அல்லது அரிக்கும் தோல் அல்லது சிறுநீர் கழிக்கும் முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. இவற்றில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை நீங்கள் தொடர்ந்து அனுபவித்தால் உங்கள் சிறுநீரகம் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
