Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை!
உடலின் இந்த 5 பகுதிகளில் வலிக்குதா? அப்ப உங்க சிறுநீரகம் படுமோசமான நிலையில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
Kidney Damage Symptoms In Tamil: நமது உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமான உறுப்புகளாகும். இந்த சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து கழிவுகள், அதிகப்படியான திரவங்கள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி, உடலை சுத்தப்படுத்தும் முக்கியமான பணியை செய்கின்றன. இப்படிப்பட்ட சிறுநீரகங்கள் நமது ஒருசில பழக்கங்களான புகைப்பிடித்தல், அதிகமாக மது அருந்துதல் போன்றவற்றால் மட்டுமின்றி, உடல் பருமன் அதிகமாக இருந்தாலும், அதன் செயல்பாடு பாதிக்கப்படும்.
அதுவும் ஒருவருக்கு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், தொற்றுகள், மரபணு நோய்கள் மற்றும் சிறுநீரக கற்கள் போன்றவை இருந்தால், சிறுநீரகங்களில் கடுமையான சேதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த சிறுநீரக சேதத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், பின் அது நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கும்.

அதுவும் சிகிச்சை எதுவும் மேற்கொள்ளாமல் இருந்தால், பின் அதில் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும். ஒருவரது சிறுநீரகங்களில் பிரச்சனையோ அல்லது தீவிர சேதமோ ஏற்பட்டிருந்தால், அது ஒருசில அறிகுறிகளை நமக்கு தெரியப்படுத்தும். குறிப்பாக உடலின் சில பகுதிகளில் மிகுந்த வலி அல்லது அசௌகரியத்தை சந்திக்க நேரிடும். இப்போது சிறுநீரக சேதத்தை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகளைக் காண்போம்.
1. கீழ் முதுகு வலி
சிறுநீரக சேதம் ஏற்பட்டிருந்தால் தெரியும் மிகவும் பொதுவான அறிகுறி தான் கீழ் முதுகு வலி. ஆனால் இந்த முதுகு வலியை பலரும் சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் ஒருவருக்கு ஒரு பக்கத்தில் மட்டும் கீழ் முதுகு வலித்தால், சிறுநீரங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளது என்று அர்த்தம். அதுவும் இந்த வலி ஒரு தசை வலி போன்று இல்லாமல், வலியானது மிகவும் கூர்மையாக, குமட்டல், காய்ச்சல் போன்றவற்றுடன் சேர்ந்து வரும்.
2. நெஞ்சு வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம்
இதயத்தில் பிரச்சனை இருந்தால் மட்டும் தான் நெஞ்சு வலி மற்றும் நெஞ்சு பகுதியில் அசௌகரியத்தை சந்திக்க நேரிடும் என்பதில்லை, சிறுநீரகங்களில் சேதம் ஏற்பட்டிருந்தாலும், நெஞ்சு வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். முக்கியமாக இந்த அறிகுறியானது சிறுநீரக நோய் முற்றிய நிலையில் காணப்படும்.
3. அடிவயிற்று வலி மற்றும் குமட்டல்
அடிவயிற்றுப் பகுதியில் வலி, குமட்டல் போன்றவற்றை சந்தித்தால் பலரும் அதை செரிமான பிரச்சனைகளாக கருதி விட்டுவிடுகின்றனர். ஆனால் இந்த செரிமான பிரச்சனைகளுக்கும், சிறுநீரக நோய்க்கும் தொடர்பு உள்ளது. எனவே காரணமின்றி அடிவயிற்றுப் பகுதியில் வலியை அனுபவித்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
4. தலை வலி மற்றும் தலைச்சுற்றல்
தலை வலி மற்றும் தலைச்சுற்றல் போன்றவை சிறுநீரக செயல்பாடுகளுடன் தொடர்பில்லாதது போன்று காணப்படலாம். ஆனால் இவை சிறுநீரக சேதத்தின் எச்சரிக்கை அறிகுறிகளாகும். சிறுநீரகங்கள் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகின்றன. ஆனால் எப்போது சிறுநீரகங்களால் சரியாக செயல்பட முடியவில்லையோ, இரத்த அழுத்தம் அதிகரித்து, அதன் விளைவாக அடிக்கடி தலைவலியை உண்டாக்கும். எனவே இந்த அறிகுறிகளையும் அசால்ட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
5. கால் மற்றும் பாதங்களில் வீக்கம், வலி
கால்களில் மற்றும் பாதங்களில் விவரிக்க முடியாத வலி அல்லது வீக்கத்தை சந்திக்கிறீர்களா? அப்படியானால் அது ஒருவகையான சிறுநீரக சேதத்தின் அறிகுறியாகும். ஏனெனில் எப்போது ஒருவரது சிறுநீரகங்களால் உடலில் இருந்து நச்சுக்களை வடிகட்டி வெளியேற்ற முடியவில்லையோ, அப்போது அந்த நச்சுக்கள் உடலில் தேங்கி வீக்கத்தை உருவாக்கும். எனவே உங்கள் கால்களில் வீக்கத்தை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications