Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
சிறுநீரகங்களை சுத்தம் செய்யணுமா? அப்ப வாரம் 2 முறை காலையில் இந்த ஜூஸை குடிங்க...
Kidney Cleansing Drinks: நமது உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமான உறுப்புக்களில் ஒன்றாகும். இந்த சிறுநீரகங்கள் இரத்தத்தை வடிகட்டுவது, திரவம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையில் பராமரிப்பது, கழிவுகளை நீக்குவது மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்குவது போன்ற பல முக்கியமான பணிகளை செய்கின்றன.
உடலை சுத்தப்படுத்தும் முக்கியமான வேலையை செய்வதால், சிறுநீரகங்களில் நச்சுக்கள் அதிகம் தேங்குவதற்கான வாய்ப்புள்ளது. சிறுநீரகங்களில் சேரும் நச்சுக்களை அவ்வப்போது முழுமையாக வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால், அந்த நச்சுக்கள் அப்படியே தேங்கி சிறுநீரக நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரித்துவிடும்.

சிறுநீரகங்களில் தேங்கும் நச்சுக்களை அகற்றி, அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள நிறைய நீரைப் பருகி வந்தாலே போதும் தான். இருப்பினும், இன்னும் திறம்பட சிறுநீரகங்களை சுத்தம் செய்ய நினைத்தால், ஒருசில ஜூஸ்கள் அல்லது பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்போது சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவும் ஜூஸ்களைக் காண்போம்.
1. பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட்டானது சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பெரிதும் உதவி புரியும். பீட்ரூட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் பீட்ரூட்டை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தம் அதிகம் ஊறும் மற்றும் அது இரத்தத்தை சுத்திகரித்து சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவி புரியும். இப்படிப்பட்ட பீட்ரூட்ருடன் கேரட் மற்றும் சிறிது இஞ்சியை சேர்த்து அரைத்து வடிகட்டி சாறு எடுத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், சிறுநீரகங்கள் சுத்தமாகும்.
2. ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் கல்லீரலை சுத்தம் செய்ய பெரிதும் உதவி புரிவதோடு, உடலில் pH அளவை சமநிலையில் பராமரிக்கவும் உதவி புரிகிறது. மேலும் ஆப்பிள் சீடர் வினிகர் செரிமானத்தை மேம்படுத்தி, சிறுநீரகங்களின் செயல்பாட்டையும் ஊக்குவிக்கின்றன. இந்த ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டீஸ்பூன் எடுத்து, 1 டம்ளர் நீரில் கலந்து, அத்துடன் 1 சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து கலந்து, காலையில் குடித்து வந்தால், சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேறிவிடும்.
3. கேரட் மற்றும் இஞ்சி ஜூஸ்
கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. இது சிறுநீரகங்களையும், கல்லீரலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அவசியமான சத்தானும். மேலும் இஞ்சி செரிமானத்தை மேம்படுத்துகிறது. இந்த கேரட்டை அரைத்து வடிகட்டி சாறு எடுத்து, அத்துடன் சிறிது இஞ்சி ஜூஸை கலந்து காலையில் குடித்து வர, சிறுநீரகங்கள் சுத்தமாகிவிடும்.
4. செலரி ஜூஸ்
செலரி ஒரு மிகச்சிறந்த டையூரிக் பண்பு நிறைந்த காய். இந்த செலரியை உணவில் சேர்த்து வருவதன் மூலம், உடலில் இருந்து நச்சுக்களை சிறுநீரகங்கள் திறம்பட வெளியேற்றும். மேலும் இந்த செலரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், இதை சிறிது மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் ஒரு சிறிய துண்டு இஞ்சியை சேர்த்து அரைத்து வடிகட்டி, சாறு எடுத்து எலுமிச்சை சாற்றினை கலந்து குடித்து வர, சிறுநீரகங்களின் மூலைமுடுக்குகளில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும்.
5. எலுமிச்சை ஜூஸ்
எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ன. இவை கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை ஆதரிக்கின்றன மற்றும் நச்சுக்களை திறம்ட வெளியேற்ற உதவுகின்றன. அதுவும் எலுமிச்சை ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி சிறுநீரகங்களின் செயல்பாட்டை தூண்டி, சிறுநீர் உற்பத்தியை அதிகரித்து, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதுவும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸை போட்டுக் குடித்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications