Latest Updates
-
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்..
100 வயதுக்கு மேல் அதிகமான மக்கள் வசிக்கும் அதிசய ஜப்பானிய கிராமம்...இவங்களோட நீண்ட ஆயுளின் ரகசியம் இதுதான்!
வயதாவது என்பது நீண்ட காலமாக மனித குலத்திற்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. மாறிவரும் வேகமான வாழ்க்கை முறையாலும், உணவு முறையாலும் மக்களின் ஆயுட்காலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. தற்போது உலகில் மக்களின் சராசரி ஆயுட்காலம் 72 ஆக உள்ளது, இந்தியாவில் இது 70 ஆக உள்ளது.
ஆனால் சில அதிசய இடங்களில் மக்கள் இப்போதும் 90 வயதிற்கும் மேலாக வாழ்கிறார்கள். பல தலைமுறைகளாக, ஜப்பானில் உள்ள ஒகினாவா மாகாண மக்கள் இந்த கிரகத்தில் அதிக காலம் வாழ்ந்த மனிதர்கள் என்ற பெயருடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த தீவு 'நீண்ட ஆயுள் கொண்ட தீவு' என்று அழைக்கப்படுகிறது.

மருத்துவ நிபுணர்கள் தெற்கு ஜப்பானில் உள்ள இந்த அரை வெப்பமண்டல தீவுகளில் உள்ள உள்ளூர் மக்களின் நீண்ட ஆயுளுக்கான ரகசியத்தை நீண்ட காலமாக தேடி வருகின்றனர், பெரும்பாலான முடிவுகளில் இது சத்தான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் குடும்பம் மற்றும் பரந்த சமூகத்தின் ஆதரவின் கலவை என்று கூறப்படுகிறது.
ஒகினாவின் சிறப்பு
ஒகினா உள்ளூர்வாசிகள் இறக்க மறுக்கின்றனர். இந்த தீவில் வசிப்பவர்கள் குறைந்த அளவிலான இதய நோய், புற்றுநோய் மற்றும் டிமென்ஷியா ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர், மேலும் ஒகினாவான்களின் வலுவான சமூக வாழ்க்கை மற்றும் இகிகையின் வலுவான உணர்வு (வாழ்க்கையில் ஒரு தனித்துவமான நோக்கம்) அவர்களை 100 வயதைக் கடந்தும் உயிருடனும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது.
நீண்ட ஆயுளுக்கான உலகின் ஐந்து "நீல மண்டலங்களில்" ஒன்றாக, ஒகினாவாவும் தனித்துவமாக உள்ளது, அதற்கு காரணம் இங்கு வசிப்பவர்களுக்கு இடையே உள்ள நெருக்கமான பிணைப்புகள்.
பெரும்பாலானவர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மோவாயில்(Moai) சேருகிறார்கள், இது தவறாமல் அடிக்கடி சந்திக்கும் நண்பர்கள் மற்றும் சகாக்களின் முறைசாரா குழுவாகும். இந்த குழு ஒரே மாதிரியான ஆர்வங்கள் கொண்ட குழுவை உறுப்பினர்களை இணைப்பதுடன், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு உதவ அல்லது பொதுப் பணிகளுக்கு ஆதரவளிக்க மாதாந்திர பங்களிப்புகளை சேகரிக்கிறது.
நீண்ட ஆயுளுக்கான ரகசியம்
ஹெக்டர் கார்சியா மற்றும் பிரான்செஸ்க் மிரல்லெஸ் எழுதிய Ikigai: The Japan Secret to a Long and Happy Life என்ற புத்தகத்தின்படி, ஒகினாவான்கள் காய்கறிகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற உணவுகள் நிறைந்த உணவை உண்கின்றனர், ஜப்பானியர்களின் சராசரி சர்க்கரை உட்கொள்ளலில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே உட்கொள்கின்றனர் மற்றும் சிறிய தட்டுகளில் தங்கள் உணவை சாப்பிடுகிறார்கள்.
அவர்கள் தொடர்ந்து குறைந்த தீவிரம் கொண்ட உடற்பயிற்சியில் தங்கள் உடலை ஈடுபடுத்துகிறார்கள் மற்றும் 80% நிரம்பியதாக உணரும் வரை மட்டுமே சாப்பிடுகிறார்கள், இது அதிகப்படியான உணவு உண்பதைத் தவிர்க்கிறது. ஒகினாவாவின் கிடனககுசுகு கிராமம் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் போட்டியை நடத்துகிறது.
ஒகினாவாவில் வசிப்பவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு 97 வயதிலும் சுதந்திரமாகச் செயல்படுகிறார்கள், அவர்கள் உயிரோடு இருப்பதுடன் ஆரோக்கியமாகவும் இருக்கின்றனர். அதாவது அவர்கள் தங்கள் சொந்த வீடுகளில், தங்கள் சொந்த உணவை சமைத்து, தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்கின்றனர்.
இகிகை
'இகிகை'யின் தத்துவம் பண்டைய ஹெயன் காலத்தைச் சேர்ந்தது, ஆனால் கடந்த தசாப்தத்தில் ஜப்பானுக்கு வெளியேயும் இது வேகமாக பிரபலமடைந்துள்ளது. இந்தக் கருத்தைப் பின்தொடர்வது சற்று கடினமாக இருந்தாலும், அது சுய-ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் இந்த தருணத்தில் வாழக் கற்றுக்கொள்வதை உள்ளடக்கியது.
நிபுணர்களின் கருத்துப்படி, "ஓகினாவாவில், ஓய்வு பெறுவது என்ற வார்த்தை கூட இல்லை. அதற்குப் பதிலாக, 'இகிகை' உள்ளது, அதாவது 'நீங்கள் காலையில் எழுவதற்கான காரணம்'.
ஒகினாவான்கள் நீண்ட காலம் வாழ்வதற்கான ஆராய்ச்சியாளர்கள் நம்பும் முக்கிய காரணங்களில் ஒன்றாக, படுக்கையில் இருந்து எழுந்திருப்பது உள்ளது, ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வது போலவே இதுவும் முக்கியமானது.
உண்மையில், 2008 ஆம் ஆண்டு 43,000 ஜப்பானியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இகிகை பயிற்சி செய்த பங்கேற்பாளர்கள் இதய நோய் மற்றும் இறப்பு விகிதத்தை வளர்ப்பதற்கான குறைந்த வாய்ப்புகளுடன் இருப்பதை நிபுணர்கள் கண்டறிந்தனர்.
எளிமையான அன்றாட இன்பங்களைப் பாராட்டுவதன் மூலமும், மனதையும் உடலையும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்கான பொறுப்புணர்வு உணர்வைப் பேணுவதன் மூலமும், ஒகினாவான்கள் வாழ்க்கையில் ஒரு நோக்கத்தைக் கொண்டிருப்பதில் பெரும் திருப்தியைப் பெறுகிறார்கள்.
சைவ உணவுகள்
ஒகினாவோ மக்களின் நீண்ட ஆயுளைக் கருத்தில் கொண்டு, உள்ளூர்வாசிகள் பெரும்பாலானவர்களை விட அதிக ஊட்டமளிக்கும் உணவை சாப்பிடுவதில் ஆச்சரியமில்லை. முற்றிலும் தாவர அடிப்படையிலானதாக இல்லாவிட்டாலும், பாரம்பரிய ஒகினாவோ மக்களின் உணவில் பழங்கள், காய்கறிகள், நட்ஸ்கள் மற்றும் தானியங்கள் போன்ற 90% முழு தாவர உணவுகள் உள்ளன. கூடுதலாக, ஒகினாவோ மக்கள் ஆண்டு முழுவதும் குறைந்த அளவு மீன், இறைச்சி, பால் மற்றும் முட்டைகளை மட்டுமே உட்கொள்கின்றனர்.
ஜப்பானின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது ஒகினாவோ உணவின் மிகவும் வரையறுக்கப்பட்ட அம்சங்களில் ஒன்று அதன் சிறிய அளவிலான அரிசி ஆகும்.
மாறாக, சுவையான ஊதா நிற இனிப்பு உருளைக்கிழங்கைக் கொண்டு பல உணவை சமைப்பதுடன், ஒகினாவான்கள் அதிக ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் குறைந்த கலோரிகளுடன் தங்கள் உணவுகளை பேக் செய்கிறார்கள். உண்மையில், ஒரு பொதுவான ஒகினாவன் சராசரி ஜப்பானிய நபரை விட 70% குறைவான சர்க்கரையை உட்கொள்கிறார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
