Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
எலுமிச்சையை அதிகமாக உபயோகிக்கிறீங்களா? அது உடலுக்கு நல்லதுதானா? உண்மை என்ன தெரியுமா?
வெயில் காலம் வந்து விட்டது. இந்த நாட்களில் நாம் அடிக்கடி குடிக்கும் ஜூஸ்களில் ஒன்று லமன் ஜூஸ். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒன்று. இப்படி எலுமிச்சை ஜூஸிற்கு மட்டும்மல்லாது பல்வேறு வகையில் உணவாகளாகவும் உட்கொள்கிறோம். மற்றும் அதனை வெளிபுற சரும பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பதிற்கு வீட்டு வைத்திய முறையிலும் உபயோகித்து வருகின்றோம்.
எலுமிச்சையில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் தெளிவாக யோசிப்பதற்கும் பொட்டாசியம் மிக அவசியம். எலுமிச்சை சாற்றுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வாயை சுத்தம் செய்வதால் வாயில் உள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்கள் அழித்து வாய் துர்நாற்றம் அடிக்காமல் பாதுகாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலில் அதிகரிக்கவும் எலுமிச்சை உதவி செய்கிறது.

வாருங்கள் இப்போது அந்த எலுமிச்சை பற்றிய வேறு சில உண்மைகளைப் பற்றி நாம் தெரிந்துக் கொள்வோம்.
உண்மை #1
எலுமிச்சை ஒரு அற்புதமான பழம். எலுமிச்சையின் பழம் மட்டுமல்ல அதன் தோல் கூட சிறந்த மருத்துவ குணம் உடையது. இது பலருக்குத் தெரிவது இல்லை. அதனால் தான் எலுமிச்சைத் தோலை பலர் குப்பை தொட்டியில் போட்டு விடுகின்றனர்.
உண்மை #2
எலுமிச்சை ஜூஸ் குடிப்பதனால் கிடைக்கும் சத்துக்களை விட அதனை தோலுடன் திண்பதால் கிடைக்கும் சத்துக்கள் அதிகம் என்று சில ஆராயச்சி முடிவுகள் கூறுகிறன்றன.
உண்மை #3
எலுமிச்சை சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள் - வைட்டமின் ஏ, ஈ, சி, பி6, ரிபோப்லாவின், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம்.
உண்மை #4
எலுமிச்சையை தோலுடன் சாப்பிட ஒரு சிறந்த வழி அதனை பிரிட்ஜில் வைத்து உறைய செய்து சாப்பிடுவது தான். அதை பிரிட்ஜில் வைக்கும் முன் கழுவ மறந்து விடாதீர்கள்.
உண்மை #5
அப்படி உறையச் செய்த எலுமிச்சையை எடுத்து அதன் இரு முனையையும் சீவி விட்டு அரைத்து வைத்து கொள்ள வேண்டும். இதனை சூப், சாலட் மற்றும் பாஸ்தா போன்றவற்றில் சேர்த்துச் சாப்பிடலாம்.
உண்மை # 6
அந்த உறைந்த எலுமிச்சையை தோலுடன் துருவி வைத்துக் கொள்ளலாம். அதனை ஜூஸ், டீ அல்லது மில்க் சேக்ஸ் போன்றவற்றில் கலந்து குடிக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
