Latest Updates
-
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க...
Heatwave: எச்சரிக்கை! அடுத்த 5 நாட்கள் இந்த பகுதிகளில் கடுமையான வெப்பஅலை வீசும்.. இதெல்லாம் செய்யாதீங்க..
Heatwave Alert: கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், இந்தியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை சதமடித்து வருகிறது. அதோடு வெப்பஅலையும் கடுமையாக வீசிக் கொண்டிருக்கிறது. வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளுக்கு வெப்ப அலை நிலைமைகள் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே வேளையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வடகிழக்கு இந்தியாவில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 21 முதல் 23 வரை விதர்பா; ஏப்ரல் 24 வரை தெற்கு உத்தரபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம்; ஏப்ரல் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் மற்றும் தெற்கு ஹரியானா ஆகிய பகுதிகளில் வெப்ப அலையை அனுபவிக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு, சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை மூன்று டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வெளியே செல்லும் போது மிகுந்த அசௌகரியங்களை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இருப்பினும் வெப்பநிலை வழக்கத்தை விட 5°F (சுமார் 3°C) அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலை 28°C-37°C வரை இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
வெப்ப அலையின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள்
வெப்ப அலை உடலில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். வெப்ப அலையின் போது ஒருவர் தங்களை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், அது மரணத்தையே ஏற்படுத்திவிடும்.
* முக்கியமாக குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் வெளியே செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
* தாகம் எடுக்காவிட்டாலும், நாள் முழுவதும் நிறைய தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
* நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
* குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதை அறவே தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.
* தினமும் குறைந்தது 2-3 முறை குளிர்ச்சியான நீரில் குளிக்க வேண்டும்.
* தளர்வான மற்றும் வெளிரிய நிற ஆடைகளை அணிய வேண்டும்.
* வெப்ப அலை வீசும் காலத்தில் கடுமையான வேலைகள் மற்றும் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* காபி, ஆல்கஹால், சர்க்கரை பானங்கள் போன்றவற்றை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துங்கள். ஏனெனில் அவை நீரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
* எண்ணெயில் பொரித்த, கொழுப்பு நிறைந்த மற்றும் காரமான உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க முயற்சிக்கவும். ஏனெனில் இவை உடலில் வெப்பத்தை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











