For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களோட அந்த இடத்துல வர்ற அரிப்புக்கு ஆப்பிள் சீடர் வினிகரை எப்படி பயன்படுத்தணும்?

ஆப்பிள் சீடர் பெண்கள் எப்படி பயன்படுத்த வேண்டும். அவர்களுக்கு என்னென்ன மாதிரி நன்மைகளைத் தரும் என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம். அது பற்றிய விரிவான தொகுப்பு தான் இது.

|

ஆப்பிள் சிடார் வினிகர் நம் எல்லா வசதிகளுக்கும் பயன்படும் மிகச்சிறந்த பொருள். இந்த ஓரே ஒரு பொருளைக் கொண்டு பருக்களை சரி செய்தல், மூட்டுவலி போன்ற எண்ணற்ற பயன்பாடுகளுக்கு பயன்படுகிறது. இது நாவிற்கு புளிப்பு சுவையுடன் இருக்க கூடியது. அதிலும் இதன் சிறப்பு பெண்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மதர் ஆப்பிள் சிடார் வினிகர்

மதர் ஆப்பிள் சிடார் வினிகர்

அதிலும் பழுத்த ஆப்பிள் சிடார் வினிகரில் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன. இந்த ஆர்கானிக் வினிகரில் நல்ல பாக்டீரியா, என்சைம் போன்ற பொருட்கள் உள்ளன.

இந்த வினிகரை இரண்டு வகைகளில் தயாரிக்கிறார்கள். முதலில் ஆப்பிளை நன்றாக நசுக்கி சர்க்கரை ஆல்கஹால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு நல்ல பாக்டீரியா, மற்றும் நறுமணப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இது அப்படியே அசிட்டிக் அமிலமாக மாற்றப்படுகிறது.

MOST READ: உங்களுக்கு 100% செட் ஆகுற மாதிரி ஆளை எப்படி கண்டுபிடிக்கிறது? இந்த 10 விஷயம் இருந்தா போதும்

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

ஆப்பிள் சிடார் வினிகரில் அசிட்டிக் அமிலம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

இதில் காலிக் அமிலம், கேட்சின், எஃபி கேட்சின், குளோரோஜெனிக் அமிலம், கேஃபிக் அமிலம், பி-கொர்மெரிக் அமிலம், ஃபெரூலிக் அமிலம் போன்ற பொருட்கள் உள்ளன.

ஆன்டி ஆக்ஸிட்டிவ், ஆன்டி பயாடிக், ஆன்டி மைக்ரோபியல், ஆன்டி டியூமர், ஆன்டி ஒபிசிட்டி, ஆன்டிஹைபர்டென்ஷிவ் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்கும் பொருட்கள் உள்ளன.

இந்த பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்துகளை கொண்டு இருப்பதால் இதன் பலன்கள் எண்ணிலடங்காததது.

பருக்களை குணப்படுத்துதல்

பருக்களை குணப்படுத்துதல்

பருக்கள் என்பது பெண்களுக்கு ஏற்படும் பெரிய தொந்தரவு. அமெரிக்கன் டெர்மட்டாலஜி அகாடமி படி 20-29 வயதை உடை 50% பெண்கள் மற்றும் 40-49 வயதை உடைய 25% பெண்கள் இந்த பருக்கள் தொல்லையால் பாதிப்படைகின்றனர்.

ஆப்பிள் சிடார் வினிகர் பருக்களுக்கு குட் பை சொல்லுகிறது. இதிலுள்ள ஆல்பா ஹைட்ராக்ஸிஅமிலம் துளைகளில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. சருமத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு, பாக்டீரியா போன்றவற்றை சரி செய்து சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. இது சருமத்தின் pHஅளவை சரி சமமாக வைக்கிறது.

பயன்படுத்தும் முறை

பயன்படுத்தும் முறை

ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் தண்ணீரை எடுத்து சமபங்கு கலந்து கொள்ளவும். அதனுடன் கொஞ்சம் தேன் சேர்த்து கொள்ளுங்கள். இதை சருமத்தில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு தண்ணீர் கொண்டு கழுவுங்கள்.

ஆப்பிள் சிடார் வினிகர் பானம்

ஆப்பிள் சிடார் வினிகர் பானம்

1-2 டீ ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து கொள்ளவும். இதை தினமும் 1-2 முறை என குடித்து வாருங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

MOST READ: இந்த 6 காய்களை சாப்பிட்டா தொப்பை போடுமாம்? அதுல முட்டைகோசும் ஒன்னு... அத சாப்பிடாதீங்க

மூட்டுவலி (ஆர்த்ரிட்டீஸ்)

மூட்டுவலி (ஆர்த்ரிட்டீஸ்)

ஆர்த்ரிட்டீஸ் என்பது ஒரு மூட்டுவலி பிரச்சினை. இதில் ஏகப்பட்ட அழற்சியை ஏற்படுத்தும் பொருட்கள் உள்ளன. 100 விதமான மூட்டுவலி பிரச்சினைகள் உள்ளன.

நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கருத்துப் படி 50 வயதிற்கு பின்னால் ஆண்களுக்கு வரும் ஆஸ்டியோஆர்த்ரிட்டீஸ் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.

ஆர்த்ரிட்டீஸ் அறிகுறிகளான வலி, அழற்சி, வீக்கம், சிவத்தல், மூட்டுவலி போன்ற அறிகுறிகளை குறைக்கிறது.

இதன் அழற்சி எதிர்ப்பு பொருள், அல்கலைன் பொருட்கள் மூட்டுகளில் உள்ள வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.

பயன்படுத்தும் முறை

1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர், கொஞ்சம் தேன், வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் சிறுதளவு பட்டை தூள் சேருங்கள். ஒரு முறை அல்லது ஒரு நாளைக்கு இரு முறை என குடித்து வாருங்கள்.

மற்றொரு முறை

ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் சம அளவு வெதுவெதுப்பான நீரை கலந்து கொள்ளவும். அதை பஞ்சில் நனைத்து மூட்டுகளில் தடவிக் கொள்ளுங்கள். அப்படியே சில மணி நேரம் வைத்து பேண்டேஜ் போட்டு கொள்ளுங்கள். இதை 2-3 தடவை என ஒரு நாளைக்கு செய்து வாருங்கள்.

உடல் எடை குறைதல்

உடல் எடை குறைதல்

உடல் பருமன் பெண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்னை ஆகும். அதிலும் அர்பன் லத்தீன் அமெரிக்க மற்றும் கரேபியன் மக்கள் உடல் பருமனை அதிகளவில் கொண்டுள்ளனர். இதன் பிஎம்ஐ>=25,பிஎம்ஐ>=30, என்ற அளவில் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய பசிபிக் மக்கள் அதிகளவில் உடல் எடை குறியீட்டு எண்ணை கொண்டுள்ளனர்.

இந்த மாதிரியான உடல் உடை அதிகளவில் இருப்பது நமது உடல் நலனை பாதிக்கும்.

பயன்படுத்தும் முறை

2 டீ ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் 1 கிளாஸ் தண்ணீர் எடுத்து கலந்து கொள்ளுங்கள்.

இதை தினமும் காலையில் மாலையில் எடுத்து வாருங்கள்

உடல் எடை வெகு சீக்கிரமாக பெண்களுக்கு குறைந்து விடும்.

பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம்

பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம்

பெண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினை இந்த பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம் என்பது. அதிலும் குறிப்பாக 18-44 வயதை அடைந்த பெண்கள் இதனால் அதிகளவில் பாதிப்படைகின்றனர். இது பெண்களுக்கு கருவுறுதல் பிரச்சினையை உண்டு பண்ணும் முக்கியமான ஒன்றாகும். 6-12% பெண்கள் இதனால் பாதிப்படைகின்றனர் என்று அமெரிக்க ஆராய்ச்சி ரிப்போர்ட் கூறுகிறது.

இந்த பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம்யை போக்க ஆப்பிள் சிடார் வினிகர் பெருமளவில் பயன்படுகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல், இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இன்சுலின் சுரப்பு குறையும் டெஸ்ட்டோஸ்டிரான் என்ற ஹார்மோன் சுரப்பு குறைகிறது. இதனால் பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம் பிரச்சினையும் குறையும்.

பயன்படுத்தும் முறை

2 டீ ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து கொள்ளவும்

இதை தினமும் காலையில் சாப்பிடுவதற்கு முன்னால் சாப்பிட்டு வாருங்கள்.

இதை தொடர்ந்து சில வாரங்கள் செய்து வந்தால் நல்ல முன்னேற்றத்தை நீங்கள் காணலாம். அப்படியே உங்கள் அளவை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டி கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 2-3 தடவை என ஒரு கிளாஸில் 2 டேபிள் ஸ்பூன் கலந்து குடித்து வாருங்கள்.

MOST READ: மூக்குகிட்ட உங்களுக்கும் இப்படி இருக்கா? இதோ இத தேய்ங்க உடனே வெளிய வந்துடும்...

கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்தல்

கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்தல்

பெண்களுக்கு அதிகமான கொலஸ்ட்ரால் இருந்தால் பெரிய பிரச்சினை ஏற்படும். மாதவிடாய் பிறகு காலங்களில் இந்த அதிக கொலஸ்ட்ரால் காரணமாக ஏகப்பட்ட பிரச்சினை உண்டாகும். இது ஹார்மோன் சமநிலையின்மையை உண்டாக்கும். ஏன் இந்த மாதவிடாய் பிரச்சினை இதய நோய்கள் வரக் கூட காரணமாக அமைகிறது.

2009 ல் அமெரிக்க கார்டியோலஜி நாளிதழ் படி கெட்ட கொலஸ்ட்ரால் மாதவிடாய் நின்ற பிறகு ஏகப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

எனவே பெண்கள் எப்பொழுதும் தங்கள் கொலஸ்ட்ரால் அளவை கண்காணித்து வருவது முக்கியம். இந்த எல்டிஎல் கொலஸ்ட்ரால் இதய நோய்கள் மற்றும் பக்க வாதத்தை ஏற்படுத்தும். எனவே இந்த எல்டிஎல் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த ஆப்பிள் சிடார் வினிகரை பயன்படுத்தலாம்.

1 டீ ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து கொள்ளவும்

இதை ஒரு நாளைக்கு 2-3 முறை என ஒரு மாதம் வரை குடித்து வாருங்கள்

அப்படியே 2 டேபிள் ஸ்பூன் வரை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி கொள்ளுங்கள்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. பெண்களுக்கு கர்ப்ப கால நீரிழிவு நோய் ஏற்படுவது பின்னாளில் டைப் 2 டயாபெட்டீஸ் வர வாய்ப்புள்ளது.

டைப் 2 டயாபெட்டீஸ் என்பது இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல், இன்சுலின் சுரப்பு ஏற்படாமல் இருப்பது போன்ற எண்ணற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதற்கு ஆப்பிள் சிடார் வினிகர் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதன் ஆன்டி கிளைசெமிக் விளைவு இன்சுலின் சென்ஸ்டிவ்விட்டியை அதிகரிக்கிறது.

ஆப்பிள் சிடார் வினிகர் நமது உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி அதிக இரத்த போக்கு மற்றும் இரவில் வியர்த்தல் போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது. உடம்பில் உள்ள ஆல்கலைன் அளவை சமநிலை படுத்தி தலைவலி மற்றும் மாதவிடாய் அறிகுறிகளை சரி செய்கிறது. பொட்டாசியம் மூட்டு வலி போன்றவற்றிற்கு உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

1-2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சேர்க்கவும். அதனுடன் சிறுதளவு தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்

இதை தினமும் இரண்டு தடவை குடித்து வந்தால் மாதவிடாய் அறிகுறிகள் நின்று விடும்.

யோனி பகுதி அரிப்பு

யோனி பகுதி அரிப்பு

யோனி பகுதியில் அரிப்பு என்பது எல்லா வயது பெண்களையும் தாக்க கூடியது. இது நோய்த்தொற்று, உடலுறவு மூலம் பரவும் நோய்கள், கெமிக்கல் அரிப்பு இவற்றால் உண்டாகிறது.

அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவை உங்களை அசாதாரணமாக உணர வைக்கும். இதை ஆப்பிள் சிடார் வினிகர் வைத்து சரி செய்யலாம்.

இதன் ஆன்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மை அரிப்பை ஏற்படுத்தும் தொற்றுக் கிருமிக்கு எதிராக செயல்படுகிறது. இது யோனி சரும பகுதி pH அளவை சமநிலையில் வைக்கிறது.

இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்,குடலில் மற்றும் யோனி பகுதியில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்தல் போன்ற செயல்கள் மூலம் அரிப்பை போக்குகிறது.

வெளியே பயன்படுத்தும் முறை

2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும். அந்த நீரைக் கொண்டு தினமும் யோனி பகுதியை அலசி வாருங்கள்.

மற்றொரு முறை

2 கப் ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு டப் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும். அந்த டப்பில் 15 நிமிடங்கள் காலை மடக்கி உட்கார்ந்து இருங்கள். இப்படி தினமு‌ம் யோனி பகுதியை ஆப்பிள் சிடார் வினிகர் கொண்டு அலசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எடுத்துக் கொள்ளும் அளவு

1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் 1 டீ ஸ்பூன் தேன் மற்றும் -1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும். இதை தினமும் இரண்டு தடவை குடித்து வாருங்கள்.

மாதவிடாய் முன் அறிகுறிகள்

மாதவிடாய் முன் அறிகுறிகள்

75% பெண்களுக்கு ஒவ்வொரு மாதமு‌ம் மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் சில பிரச்சனைகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் என்னவென்றால் வயிறு மந்தம், நீர்த்தேக்கம், தலைவலி, வயிறு பிடிப்பு, மனநிலையில் மாற்றம், எரிச்சல், பசி, மலச்சிக்கல், தலைவலி, பருக்கள், மார்பகம் பெரிதாகுதல், சோர்வு போன்றவை ஏற்படும்.

ஆப்பிள் சிடார் வினிகர் இந்த மாதிரியான அறிகுறிகளை குணப்படுத்துகிறது.

பயன்படுத்தும் முறை

1-2 டீ ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து கொள்ளவும்

அதனுடன் கொஞ்சம் தேன் சேர்த்து கொள்ளுங்கள். இதை தினமும் இரண்டு வேளை குடித்து வாருங்கள்.

MOST READ: இன்னைக்கு உங்க ராசிக்கு எந்த திசையில இருந்து அதிர்ஷ்டம் வரப் போகுதுனு தெரிஞ்சிக்கணுமா?

கூந்தல் ஆரோக்கியம்

கூந்தல் ஆரோக்கியம்

பெண்களுக்கு கூந்தல் அழகு கூடுதல் அழகை சேர்க்க கூடியது. அதற்கு ஆப்பிள் சிடார் வினிகர் பெரிதும் பயன்படுகிறது. எனவே ஆப்பிள் சிடார் வினிகரை கொண்டு கூந்தலை அலசும் போது சாம்பு மற்றும் ஸ்டைலிங் பொருட்கள் தங்கி விடாமல் சுத்தம் செய்கிறது. இதனால் அதன் கெமிக்கல் விளைவுகள் ஏற்படுவதில்லை.

மேலும் கூந்தலின் pH அளவை சமமாக வைத்து இருப்பதால் கூந்தல் உதிர்தல், கூந்தல் பிளவு மற்றும் வறண்டு போதல் ஏற்படாமல் தடுக்கிறது.

இதன் ஆன்டி மைக்ரோபியல் தன்மை தலையில் உள்ள பூஞ்சை மற்றும் பாக்டீரியாவை அழிக்கிறது. இதனால் பொடுகு தொல்லை இருப்பதில்லை.

பயன்படுத்தும் முறை

1/4 கப் ஆப்பிள் சிடார் வினிகர் உடன் 2 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்

சாம்பு தேய்த்த பிறகு அந்த நீரை தலையில் ஊற்றுங்கள்.

அதைக் கொண்டு மசாஜ் செய்து 5 நிமிடங்கள் உட்கார்ந்து இருங்கள்.

பிறகு அலசி விடுங்கள்

இதை வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Apple Cider Vinegar Benefits for Women

pple cider vinegar popularly known as ACV has a myriad of benefits to women. Have you been looking for a healthy natural tonic that will cater for your skin, hair, teeth and aid your weight loss? Then ACV is your answer. Here are 10 things that apple cider vinegar does for women
Story first published: Monday, March 11, 2019, 17:57 [IST]
Desktop Bottom Promotion