Latest Updates
-
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்! -
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க.. -
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை! -
கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை குறையும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க..
உங்க வயிறு கடமுடங்குதா? தண்ணி தண்ணியா மலம் வெளியேறுதா? அப்ப வீட்டுல இத பண்ணுங்க...உடனே சரியாகிடுமாம்!
வயிற்றுப்போக்கு என்பது குடலில் ஏற்படும் ஓர் பொதுவான பிரச்சனை. இது அடிக்கடி தளர்வான அல்லது தண்ணீருடன் மலம் வெளியேறுவதைக் குறிக்கிறது. வயிற்றுப்போக்கு மிகவும் சங்கடத்தையும் அசெளகரியத்தையும் உங்களுக்கு ஏற்படுத்தும்.
நமது அன்றாடப் பணிகளில் தலையிடக்கூடிய ஒரு சுகாதார நிலை இருந்தால், அது எதிர்பாராத வயிற்றுப்போக்குதான். பாக்டீரியா, வைரஸ், மருந்துகள், உணவுகள் அல்லது பல்வேறு செரிமான பிரச்சனைகளால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இது பெரும்பாலும் இரைப்பை குடல் அமைப்பு தொந்தரவுகளுக்கு உடலில் ஏற்படும் பிரதிபலிப்பாகும்.

உங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உங்கள் குடல் அசைவுகள் அல்லது மலம் தளர்வாகவோ அல்லது தண்ணீராகவோ மாறும். பொதுவாக கழிப்பறைக்கு அடிக்கடி மற்றும் அவசரமாக செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும். இதனுடன், வீக்கம், காய்ச்சல், நீர்ப்போக்கு, மனக் கவலை மற்றும் வயிற்றுப் பிடிப்புகள் உள்ளிட்ட கூடுதல் அறிகுறிகளையும் நீங்கள் உணரலாம்.
எனவே, இந்த நிலையை நீங்கள் எவ்வாறு கையாள்வீர்கள் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பது பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், இக்கட்டுரையில் சில தீர்வுகள் கொடுத்துள்ளோம்.
வயிற்றுப்போக்கு சிகிச்சைக்கு வீட்டு வைத்தியம்
வயிற்றுப்போக்கு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், நம்மில் பெரும்பாலோர் அதைப் பற்றி பேச வெட்கப்படுகிறோம். இருப்பினும், வாழைப்பழம் சாப்பிடுவது வயிற்றுப்போக்கை எவ்வாறு நிர்வகிக்க உதவும் என்பதைப் பற்றி நீங்கள் நிறைய கேள்விப்பட்டிருக்கலாம்.
சில நேரங்களில் சில பிரச்சனைகளுக்கு வீட்டு வைத்தியம் நல்ல பலனை கொடுக்கலாம். அந்த வகையில், வயிற்றுப்போக்கை தடுக்க உதவும் மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியங்களை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
வயிற்றுப்போக்கிற்கு சிகிச்சையளிக்க, உங்கள் செரிமான அமைப்பில் சமநிலையை நிறுவுவது அவசியம். ஆயுர்வேதத்தில், இந்த நிலை அதிசரா என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் பொதுவான உடல்நலப் பிரச்சினையாகும். வயிற்றுப்போக்கு பிரச்சனை வயதைப் பொருட்படுத்தாமல் யாரை வேண்டுமானலும் பாதிக்கலாம். புறக்கணிக்கப்பட்டால், இது வலிமிகுந்ததாகவும் உங்கள் ஆரோக்கியத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
தயிர் மற்றும் மோர்
இந்த கோடைகாலத்திற்கு ஏற்ற ஓர் குளிர்ச்சியான பானமான மோர், உங்கள் வயிற்றுப்போக்கு பிரச்சனையை தீர்க்க உதவும். மோரில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் ஏராளமாக இருப்பதால், அவை செரிமான அமைப்பை நிலைநிறுத்தவும், அசௌகரியத்தை எளிதாக்கவும் உதவுகின்றன.
மோர் என்பது தயிரின் திரவக் கூறு ஆகும். தயிரும் உங்கள் வயிற்றை குளிர்விக்கவும், நல்ல செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றை மிதமான அளவுகளில் இடைவெளி விட்டு அடிக்கடி எடுத்துக்கொள்ளுங்கள். விரைவில் வயிற்றுபோக்கு நின்றுவிடும்.
வாழைக்காய்
அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் நிறைந்த பச்சையான வாழைக்காய் வயிற்றுப்போக்கை தடுக்க உதவும் சிறந்த உணவாக பரிந்துரைக்கப்படுகின்றன. வாழைக்காயை மூன்று துண்டுகளாக வெட்டி, ஒரு பிரஷர் குக்கரில் போதுமான தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். பின்னர், தண்ணீரை வடிக்கட்டி, வேக வைத்த வாழைக்காயை நன்கு பிசைந்து கொள்ளவும்.
சிறிய அளவு கசகசாவை வாணலியில் பொன்னிறமாகும் வரை வறுத்து, பின்னர் அரைத்து பொடியாக்க வேண்டும். அந்த வாழைக்காய் கூழில் சிறிது உப்பு மற்றும் அரைத்த கசகசாப் பொடியைச் சேர்த்து சாப்பிட வேண்டும். இந்த செய்முறையின் அஸ்ட்ரிஜென்ட் குணங்கள் வயிற்றுப்போக்கைத் தடுக்கின்றன. இது சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
மாதுளை தோல்
உலர் மாதுளை தோல் வயிற்றுப்போக்குக்கு ஒரு சிறந்த சிகிச்சையாகும். மாதுளை பழத்தோலை நன்றாக தூள் செய்து, ஒரு நாளைக்கு 1 கிராம் என இரண்டு வேளை சாப்பிடுங்கள். குடல் அசைவுகளின் அதிர்வெண்ணைக் குறைக்க, மோரில் இந்த பொடியை சேர்த்தும் அருந்தலாம்.
இஞ்சி மற்றும் தேன்
ஒரு ஸ்பூன் நன்றாக துருவிய இஞ்சியுடன் சிறிது தேன் சேர்த்து சாப்பிட வேண்டும். பிறகு, 10 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும். வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி, வயிற்றுப் பிடிப்பு போன்ற பிற அறிகுறிகளை போக்க இஞ்சி உங்களுக்கு உதவும்.
சீரக நீர்
பொதுவாக சீரகம், வயிற்று மற்றும் குடல் பிரச்சனைகளுக்கு உதவுகிறது. வறுத்த சீரகத்தைப் பொடி செய்து நைசாக அரைக்க வேண்டும். இதை ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தேன் சேர்த்து அருந்தவும். இந்த சீரக நீரை குடிப்பதால் வயிற்றுப்போக்கை உடனே தடுத்து நிறத்தலாம்.
மக்களே, வயிற்றுப்போக்கு பிரச்சனை இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் தானாகவே சரியாகிவிடும். ஆனால், அப்படி சரியாகாமல் நீண்ட காலம் நீடித்தால், உடனே மருத்துவ உதவியை நாடுவது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

