Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
உணவில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கணுமா? அப்ப இந்த தந்திரங்களை ஃபாலோ பண்ணுங்க போதும்...
தற்போது இளம் வயதிலேயே மாரடைப்பால் நிறைய பேர் இறந்து வருகிறார்கள். உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், அது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே 30 வயதை எட்டிய ஒவ்வொருவரும் தாங்கள் உண்ணும் உணவில் அதிக கவனத்தை செலுத்த வேண்டியது முக்கியம். குறிப்பாக எண்ணெய் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
ஆனால் உணவின் ருசிக்காக பலர் சமைக்கும் போது உணவில் எண்ணெயை அதிகம் சேர்க்கிறார்கள். அதோடு நிறைய பேர் எண்ணெயில் பொரித்த பூரி, வடை, பஜ்ஜி போன்றவற்றை அடிக்கடி உட்கொண்டு வருகிறார்கள். இப்படி எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்வதால், உடலில் கலோரிகள் அதிகரிப்பதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.

நிறைய பேர் எண்ணெய் தான் உணவிற்கு சுவையைத் தருவதாக தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எண்ணெய் சேர்க்காமலேயே உணவுகளை சுவையாக சமைக்கலாம். நீங்கள் உங்கள் உணவில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்க வேண்டுமானால், பின்வரும் குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். முக்கியமாக இந்த குறிப்புகள் உணவில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்குவதோடு, உணவிற்கு கூடுதல் சுவையையும் தரும்.
பேப்பர் டவலை பயன்படுத்தலாம்
எண்ணெயில் பொரித்த உணவுகளை சமைத்த பின், ஒரு பேப்பர் டவலில் வையுங்கள். இப்படி வைக்கும் போது, அதில் உள்ள அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சப்படும். எனவே வடை, பூரி, சமோசா, பஜ்ஜி, சிக்கன் 65 போன்றவற்றை சமைத்த பின், பேப்பர் டவலில் வையுங்கள்.
பேக்கிங் செய்யலாம்
உணவுப் பொருட்களை எண்ணெயில் பொரிப்பதற்கு பதிலாக, பேக்கிங் செய்து சாப்பிடலாம். பேக்கிங் செய்வதற்கு குறைவான அளவிலேயே எண்ணெய் தேவைப்படும் மற்றும் பேக்கிங் செய்யும் போது உணவுகள் நன்கு மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
நாண்-ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்
உங்களின் சமையலில் குறைவான அளவில் எண்ணெய் பயன்படுத்த விரும்பினால், நல்ல தரமான நாண்-ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள். நாண்-ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்க குறைவான எண்ணெயே போதுமானது மற்றும் உணவுகளும் அடிப்பிடிக்காமல் இருக்கும்.
க்ரில் செய்யலாம்
உணவுகளில் எண்ணெய் அதிகம் சேர்க்க வேண்டுமென நினைத்தால், இறைச்சிகள் மற்றும் காய்கறிகளை க்ரில் அல்லது நெருப்பில் வாட்டி சாப்பிடலாம். இம்மாதிரி சமைத்து சாப்பிடும் போது, அதில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து வெளியேற்றப்படுவதோடு, உணவுகளும் நன்கு சுவையாக இருக்கும். அதுவும் சமைக்கும் உணவுப் பொருட்கள மசாலாக்கள் சேர்த்து பிரட்டி ஊற வைத்து, பின் நெருப்பில் வாட்டும் போது, அதன் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.
வேக வைத்து சாப்பிடலாம்
சமைக்கும் முறைகளிலேயே ஆவியில் உணவுகளை வேக வைத்து சாப்பிடுவதன் மூலம், அந்த உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் அப்படியே இருக்கும் மற்றும் அந்த உணவுப் பொருட்களின் அமைப்பும் மாறாமல் இருக்கும். முக்கியமாக இந்த முறையில் சமைக்கும் போது சிறிது கூட எண்ணெய் தேவைப்படாது.
காய்கறி அல்லது இறைச்சி வேக வைத்த நீர் மற்றும் நீரை பயன்படுத்தலாம்
சமையலில் எண்ணெயை பயன்படுத்துவதற்கு பதிலாக, காய்கறி அல்லது இறைச்சி வேக வைத்த நீர் மற்றும் நீரை பயன்படுத்தலாம். இப்படி காய்கறிகள் மற்றும் இறைச்சிகளை வேக வைக்க இவற்றைப் பயன்படுத்தும் போது, அந்த உணவு இன்னும் சுவையாக இருக்கும்.
கொழுப்புக்களை நீக்கும் மற்றொரு எளிய வழி
சூப், குழம்பு போன்றவற்றை சமைக்கும் போது, அதில் எண்ணெய் சேர்க்கப்பட்டிருந்தால், அந்த எண்ணெயை நீக்க, உணவுகளை சமைத்த பின் ஃப்ரிட்ஜ்ஜில் சிறிது நேரம் வையுங்கள். இப்படி வைக்கும் போது, அதில் உள்ள கொழுப்புக்கள் அப்படியே மேலே மிதக்கும். அந்த கொழுப்புக்களை அப்படியே கரண்டியால் வெளியேற்றிவிட்டு, சூடேற்றி சாப்பிடுங்கள். இப்படி செய்யும் போதும், அதில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை எளிதில் நீக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications