Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை!
உங்களுக்கு படர்தாமரை பிரச்சனை இருக்கா? அப்ப அது தீவிரமாகாமல் இருக்க இத ஃபாலோ பண்ணுங்க...
Ringworm During Summer In Tamil: கோடைக்காலத்தில் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் படர்தாமரை. இந்த படர்தாமரையானது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய தன்மையுடையது மற்றும் கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்தக்கூடியது. இது ஒரு பூஞ்சை தொற்று மற்றும் இது உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம். பெரும்பாலும் இது உச்சந்தலை, பாதம், நகம் போன்ற பகுதிகளில் காணப்படும். முக்கியமாக இந்த படர்தாமரையானது கோடைக்காலத்தில் அதிகம் வருவதற்கு வாய்ப்புள்ளது.
ஏனெனில் கோடைக்காலத்தில் அதிகப்படியான வெப்பத்தால் அதிகமாக வியர்க்கும். எப்போதும் சருமத்தில் ஈரப்பசை இருந்தால், பூஞ்சைகளானது சருமத்தில் நன்கு வளர்ச்சி அடையும். ஆரம்பத்திலேயே படர்தாமரையை அறிந்து, அதை சரிசெய்ய முயற்சிகளை மேற்கொண்டால், விரைவில் அதை சரிசெய்யலாம். காலம் தாழ்த்தும் போது, அதை சரிசெய்யவும் காலம் அதிகம் எடுக்கும்.

உங்களுக்கு படர்தாமரை பிரச்சனை இருந்தால், அதுவும் கோடையில் இந்த சரும பிரச்சனை தீவிரமாகாமல் இருக்க வேண்டுமானால் ஒருசிலவற்றைப் பின்பற்ற வேண்டும். கீழே கோடையில் படர்தாமரை பிரச்சனையைக் கையாள்வதற்கான சில பயனுள்ள குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்
ஒருவருக்கு படர்தாமரை பிரச்சனை வரக்கூடாதெனில், முதலில் சருமத்தை சுத்தமாகவும், அதிக ஈரப்பதத்துடன் இல்லாதவாறும் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் படர்தாமரையை உண்டாக்கும் பூஞ்சை ஈரப்பதமான சூழலில் நன்கு வளரும். இதனால் தான் கோடையில் படர்தாமரை தீவிரமாக வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க கோடையில் இரண்டு வேளை குளித்து, சருமத்தை நன்கு உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
தளர்வான பருத்தி ஆடைகள்
கோடைக்காலத்தில் இறுக்கமான ஆடைகளை அணிந்தால், அதிகம் வியர்க்கும். மேலும் இந்த வகையான ஆடையானது காற்று புகாதவாறு தடிமனாக இருந்தால், அந்த ஆடை அதிக வெப்பத்தை உறிஞ்சி, வியர்வையை அதிகமாக வெளியேற்றும். இதன் விளைவாக பூஞ்சைகளின் வளர்ச்சி சருமத்தில் அதிகரிக்கும். எனவே கோடையில் நல்ல தளர்வான பருத்தி, லெனின் ஆடைகளை அணிய வேண்டும்.
மற்றவர்களுடன் பொருட்களை பகிராதீர்கள்
படர்தாமரையானது வேகமாக பரவக்கூடியது. அதுவும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் துணிகள் மற்றும் பிற பொருட்களைப் பயன்படுத்தும் போது, அது இன்னும் வேகமாக பரவும். எனவே எப்போதுமே மற்றவர்களின் தனிப்பட்ட பொருட்களான துணிகள், சீப்பு, துண்டு போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள்.
சுகாதாரத்தை கடைப்பிடிக்கவும்
எந்த ஒரு நோய்த்தொற்றும் ஒருவரை தாக்காமல் இருக்க மிகச்சிறந்த வழி சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது தான். குறிப்பாக படர்தாமரையைக் கொண்டவர்கள் எப்போதும் தங்களை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். செல்லப் பிராணிகளை தொட்ட பின் மற்றும் உடலின் பிற பகுதிகளை தொட்டுவிட்டு முகத்தைத் தொடும் போது, கைகளைக் கழுவாமல் தொடக்கூடாது.
பாதிக்கப்பட்ட செல்லப் பிராணிகளை சரிசெய்யவும்
உங்கள் வீட்டில் படர்தாமரை கொண்ட செல்லப் பிராணி இருந்தால், அதற்கு சரியான சிகிச்சைகளை எடுத்து, அவற்றை சரியான முறையில் தனியாக வைத்து பராமரியுங்கள். இல்லாவிட்டால், அந்த படர்தாமரையானது வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் பரவிவிடும். எனவே இந்த விஷயத்தை சற்று அதிக கவனமாக இருங்கள்.
பூஞ்சை எதிர்ப்பு க்ரீம்களைப் பயன்படுத்தவும்
படர்தாமரையை சரிசெய்ய பூஞ்சை எதிர்ப்பு க்ரீம்கள் பெரிதும் உதவி புரியும். எனவே மருத்துவர் பரிந்துரைத்த பூஞ்சை எதிர்ப்பு க்ரீம்களை வாங்கி, அவற்றை சரியான முறையில் குறைந்தது 2 வாரம் தொடர்ந்து பயன்படுத்துங்கள். இதனால் பூஞ்சை தொற்றானது கொஞ்சமாக சரியாவதைக் காணலாம்.
மருத்துவரை அணுகவும்
நீங்கள் பூஞ்சை எதிர்ப்பு க்ரீம்களைப் பயன்படுத்தியும், படர்தாமரையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல் இருந்தால் அல்லது அந்த படர்தாமரை உடலின் பிற பகுதிகளுக்கும் பரவுவதைக் கண்டால், உடனே தோல் மருத்துவரை அணுகுங்கள். இதனால் அவர்கள் இன்னும் சக்தி வாய்ந்த பூஞ்சை எதிர்ப்பு க்ரீம்களை பரிந்துரைப்பார் அல்லது வேறு ஏதேனும் சிகிச்சைகளை மேற்கொள்வார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


