Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
உங்க பற்களில் இந்த பிரச்சனை இருந்தால் சாதாரணமா நினைக்காதீங்க... அது ஆபத்தான நோயாகவும் இருக்கலாமாம்!
வாயில் பாக்டீரியாக்கள் இருப்பது, அடிக்கடி ஸ்நாக்ஸ் சாப்பிடுவது, இனிப்பு பண்டங்கள் மற்றும் பானங்களை உட்கொள்வது மற்றும் பற்களை சரியாக சுத்தம் செய்யாதது போன்ற பல்வேறு காரணிகளால் பல் சிதைவுகள் ஏற்படுகின்றன
பெரும்பாலும் நாம் அனைவரும் வாய் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், அது பல ஆபத்தான உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். வாய்வழி ஆரோக்கியம் பெரும்பாலும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான அடையாளமாகக் குறிப்பிடப்படுகிறது.
மோசமான வாய் ஆரோக்கியத்தின் தாக்கத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. அதை நீங்கள் உணர்ந்து கொள்வது மிகவும் முக்கியம். உங்கள் வாய் ஆரோக்கியம் உங்கள் பற்களை மட்டும் பாதிக்காது, அது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். உண்மையில், உணவு உண்பதில் சிரமம் ஏற்படுவது மோசமான பல் சுகாதாரம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

நம் ஆரோக்கியத்தை பாதிக்கும் பொதுவான வாய் நோய்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
வாய்வழி நோய்களுக்கான காரணங்கள்
இனிப்பு உணவுகளை அதிகமாக சாப்பிடும்போது, வாய்வழி நோய்கள் ஏற்படுகின்றன மற்றும் பற்களின் வெளிப்புற அடுக்கு அரிக்கத் தொடங்கும். இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் பல் சிதைவு ஆழமாக பரவக்கூடும். இது பற்களின் நிறம் மாறுதல், உணர்திறன் அல்லது வலிக்கு வழிவகுக்கும். சரியாக பல் துலக்காமல் இருந்தால், இறுதியில் உணவு மற்றும் தகடு பற்களில் குவிந்துவிடும். இது பல் சொத்தைக்கு வழிவகுக்கும். இதைத் தொடர்ந்து, உணர்திறன், ஈறுகளில் இரத்தப்போக்கு, ஈறுகளில் வீக்கம் மற்றும் சிவத்தல், பற்கள் தளர்த்தப்படுதல் அல்லது வாய் துர்நாற்றம் ஏற்படலாம்.
பல் சொத்தை
வாயில் பாக்டீரியாக்கள் இருப்பது, அடிக்கடி ஸ்நாக்ஸ் சாப்பிடுவது, இனிப்பு பண்டங்கள் மற்றும் பானங்களை உட்கொள்வது மற்றும் பற்களை சரியாக சுத்தம் செய்யாதது போன்ற பல்வேறு காரணிகளால் பல் சிதைவுகள் ஏற்படுகின்றன. இது பற்களின் கடினமான மேற்பரப்பில் நிரந்தர சேதத்தை ஏற்படுத்துகிறது. பல் சொத்தை குழந்தைகள், பதின்வயதினர் மற்றும் வயதானவர்கள் என அனைவருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனை. இவற்றிற்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அவை பற்களின் ஆழமான அடுக்குகளை பாதிக்கலாம். இது தொற்று, கடுமையான பல்வலி மற்றும் பல் இழப்புக்கு வழிவகுக்கும்.
ஈறு நோய்
ஈறு நோய் ஒரு தீவிர ஈறு தொற்று ஆகும். இது பற்களைச் சுற்றியுள்ள மென்மையான திசுக்களுக்கு சேதம் விளைவிக்கும். ஈறு தொற்றுக்கான சிகிச்சையில் நீங்கள் தாமதித்தால், அவை பற்களை ஆதரிக்கும் எலும்பை பாதிக்கக்கூடும் மற்றும் பல் இழப்புக்கு வழிவகுக்கும். ஈறு தொற்றைத் தடுக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் துலக்க வேண்டும். தினமும் ஃப்ளோஸ் செய்வது மற்றும் வழக்கமான பல் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம்.
பற்கள் இழப்பு
வளரும் வயதில் குழந்தைகளுக்கு பற்கள் உதிர்வது பொதுவானது. அதேபோல வயது அதிகரிப்பின் காரணமாக பெரியவர்களுக்கும் இது ஏற்படலாம். ஆனால், குழந்தைகளுக்கு மீண்டும்பல் முளைத்துவிடும், பெரியவர்களுக்கு அவை மீண்டும் முளைக்காது மற்றும் பற்களை மாற்றுவதன் மூலம் மட்டுமே சிகிச்சையளிக்க முடியும். ஈறு நோய்கள், பல் சிதைவு மற்றும் அதிர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பல் இழப்பு ஏற்படலாம்.
பல் தேய்மானம்
பொதுவாக பல் தேய்மானம் என்பது பல்லின் கட்டமைப்பின் மீளமுடியாத இழப்பு ஏற்படுவது ஆகும். இது பெரும்பாலும் வலி மற்றும் விரும்பத்தகாததாக இருக்கும். இந்த சேதத்தை சரிசெய்ய கடினமாகவும் இதற்கான சிகிச்சை மிக உயர்ந்ததாகவும் இருக்கும். பற்களின் அரிப்புக்கு வழிவகுக்கும் அமில உணவுகள் அல்லது பானங்கள் காரணமாகக்கூட பல் தேய்மானம் ஏற்படலாம். பல்லில் இருந்து பல் உராய்வு, முறையற்ற வகையில் பல் துலக்குதல், டூத்பிக்கை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல் மற்றும் பற்களுக்கு இடையில் ஹேர்பின்களைப் பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் பற்களின் கட்டமைப்பில் சேதம் ஏற்படலாம்.
வாய்வழி சப்மியூகஸ் ஃபைப்ரோஸிஸ்
வாய்வழி சப்மியூகஸ் ஃபைப்ரோஸிஸ் (OSMF) என்பது புகையிலைக்கு அடிமையாவதால் ஏற்படும் ஒரு நாள்பட்ட நிலை. இது வாய்வழி குழியின் பின்புறத்தில் இருந்து வளரும் மற்றும் மெதுவாக வெளிப்புறமாக பரவுகிறது. இந்த நிலை நோயாளி உணவு உட்கொள்ளும் திறனைத் தடுக்கிறது. ஆரம்ப கட்டத்தில் கவனிக்காமல் விட்டால், அது வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். இந்த நோயை முன்கூட்டியே கண்டறிந்து, சிகிச்சை பெறுவது மிக முக்கியம்.
வாய்வழி நோய்களைத் தடுப்பது எப்படி?
ஃவுளூரைடு கலந்த பற்பசையைக் கொண்டு தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும். பல் சொத்தையைத் தடுக்க, சர்க்கரை உணவுகளுக்குப் பதிலாக காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். தினமும் பல் துலக்குவதுடன் ஃப்ளோஸ் செய்வது பற்களுக்கு இடையில் பிளேக் படிவதைத் தடுக்கும்.
ஆரோக்கியமான பற்களை பெறுவதற்கான மற்றொரு முக்கியமான காரணி, அனைத்து வகையான புகையிலையையும் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதாகும். இது பற்களில் கறை, வாய் துர்நாற்றம், ஈறு நோய், பல் சிதைவு மற்றும் வாய்வழி சப்மியூகஸ் ஃபைப்ரோஸிஸ் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும்.
ஆண்டுக்கு ஒருமுறை பல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இது வாய்வழி நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்க உதவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



