Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா?
ஆண்களே! உங்க ஆண்குறியில் பருக்கள் இருக்கா? வலியால் அவதிப்படுறீங்களா? அப்ப இந்த ட்ரை பண்ணுங்க...!
Pimple On Penis In Tamil: ஆண்குறியில் பருக்கள் ஏற்படுவது ஆண்களிடையே நடக்கும் ஒரு பொதுவான நிகழ்வாகும். மேலும் இது மிகவும் சங்கடமாகவும் தொந்தரவாகவும் வலியாகவும் இருக்கும். பொதுவாக அந்தரங்க பகுதியில் இருக்கும் சருமம் சற்று உணர்திறன் வாய்ந்ததாக இருக்கலாம்.
சருமத்தின் உணர்திறன் எல்லாருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. ஆண், பெண் இருவருமே தங்கள் அந்தரங்க பகுதியை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். ஏனெனில், இது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். தொற்றுநோய்கள், பருக்கள் மற்றும் ஆண்குறி வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஆண்களுக்கு எழலாம்.

மோசமான சுகாதாரம், உராய்வு அல்லது பாலியல் செயல்பாடு போன்ற பல்வேறு காரணிகளால் இது ஏற்படலாம். பருக்கள் பொதுவாக பாதிப்பில்லாதது என்றாலும், நீங்கள் அதை ஒருபோதும், உடைக்கக்கூடாது. மேலும், மேலும் வலி, அசௌகரியம் அல்லது சிக்கல்களைத் தவிர்க்க, சிக்கலை விரைவில் தீர்க்க வேண்டியது அவசியம். ஆண்குறியில் உள்ள பருக்களுக்கான சிறந்த வீட்டு வைத்திய தீர்வுகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
பகுதியை சுத்தமாக வைத்திருங்கள்
ஒவ்வொரு ஆணும் தங்கள் அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், உங்கள் பிறப்புறுப்பு பகுதி சுகாதாரமாக இல்லையென்றால், நோய்தொற்றுகளுக்கு ஆளாக நேரிடலாம். அத்துடன் உங்கள் ஆண்குறியில் பருக்களும் ஏற்படலாம். அப்படி உங்கள் ஆண்குறியில் பருக்கள் ஏற்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தமாக வைத்திருப்பதே முதல் மற்றும் முக்கிய தீர்வு.
ஒரு நாளைக்கு இரண்டு முறை லேசான சோப்பு கொண்டு வெதுவெதுப்பான நீரில் உங்கள் பிறப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். இரசாயனம் அதிகம் இல்லாத சோப்பை பயன்படுத்துங்கள். இது மேலும் தொற்றுநோயைத் தடுக்கவும், பருக்களின் அளவைக் குறைக்கவும், உங்களை சுகாதாரமாகவும் வைத்திருக்க உதவும்.
சூடான ஒத்தடம் பயன்படுத்தவும்
பருக்கள் உள்ள பகுதியில் சூடான ஒத்தடத்தைப் பயன்படுத்துவது வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவும். ஒரு சுத்தமான துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து, 10-15 நிமிடங்கள் பருக்கள் மீது வைத்து எடுக்க வேண்டும். இந்த செயல்முறையை ஒரு நாளைக்கு பல முறை செய்யவும். பருக்கள் விரைவில் குறைய வாய்ப்புள்ளது.
தேயிலை மர எண்ணெய்
தேயிலை மர எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை பருக்களின் அளவைக் குறைக்கவும் மேலும் தொற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது. பருத்தி துணியைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறிய அளவு தேயிலை மர எண்ணெயைப் பயன்படுத்துங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம்.
அலோ வேரா ஜெல்
பொதுவாக உங்கள் சரும பராமரிப்பில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், உங்கள் ஆண்குறியில் உள்ள பருக்களை குறைக்க கற்றாழை உதவுமா? என்று நீங்கள் யோசிக்கலாம். கற்றாழையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை வீக்கம் மற்றும் சிவப்பைக் குறைக்க உதவும். சிறிதளவு கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யவும்.
பென்சாயில் பெராக்சைடு
பென்சாயில் பெராக்சைடு என்பது ஆணுறுப்பில் உள்ள பருக்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு மருந்தாகும். பருக்கள் உள்ள இடங்களில் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பென்சாயில் பெராக்சைடு கிரீம் பயன்படுத்த வேண்டும். அதுவும் சிறிய அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும்போது, ஏதேனும் அரிப்பு அல்லது எரியும் உணர்வு உங்களுக்கு ஏற்பட்டால், உடனே குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
பிறப்புறுப்பில் உங்களுக்கு வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், உடனே மருத்துவரை நாட வேண்டும். மேலும், இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு முன்பு, நீங்கள் மருத்துவ ஆலோசனை கட்டாயம் பெற வேண்டும். அவர்களின் பரிந்துரையின் பேரில் இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம்.
இறுதிக் குறிப்பு
ஆண்குறியில் பருக்கள் இருப்பது உங்களை சங்கடமாகவும் வேதனையாகவும் உணர வைக்கலாம். ஆனால், அவற்றிற்கு சரியான வைத்தியம் மூலம் சிகிச்சையளிக்கப்படலாம். அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்திருத்தல், சூடான கம்ப்ரஸ், தேயிலை மர எண்ணெய், கற்றாழை மற்றும் பென்சாயில் பெராக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்துவது பருக்களின் அளவைக் குறைப்பதற்கும் மேலும் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் உதவும் பயனுள்ள வழிகள். இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்த பின்னும், பருக்கள் வளர்ந்தால் மற்றும் வலி அதிகமாக இருந்தால், உடனே மருத்துவரை சந்தியுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
