Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
High Cholesterol In Tamil: தற்போதைய மார்டன் உலகில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் காரணமாக ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதில் ஒன்று தான் உயர் கொலஸ்ட்ரால். நமது உடலுக்கு கொலஸ்ட்ரால் மிகவும் இன்றியமையாதது.
கொலஸ்ட்ரால் என்பது கொழுப்பு போன்ற, மெழுகு போன்ற பொருளாகும். இது உடல் சவ்வுகள், செல்கள், பல ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் டி போன்றவற்றை உருவாக்க உதவுகிறது. இந்த கொலஸ்ட்ரால் இரத்தத்திற்கு இரண்டு மூலங்களில் இருந்து வருகிறது. அதில் ஒன்று நாம் உண்ணும் உணவுகள், மற்றொன்று கல்லீரல்.

என்ன தான் கொலஸ்ட்ரால் உடலின் செயல்பாடுகளுக்கு இன்றியமையாததாக இருந்தாலும், இந்த கொலஸ்ட்ரால் அளவுக்கு அதிகமானால், அதன் விளைவாக மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதயம் தொடர்பான நோய்களை வரத் தூண்டும். இந்த கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வைட்டமின் பி12 பெரிதும் உதவி புரிகிறது. எனவே இந்த வைட்டமின் பி12 சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம், கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். இப்போது வைட்டமின் பி12 அதிகம் நிறைந்த உணவுகள் எவையென்பதைக் காண்போம்.
வைட்டமின் பி12 எப்படி கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது?
வைட்டமின் பி12 ஒரு நீரில் கரையக்கூடிய சத்து மற்றும் இது இரத்த சிவப்பணுக்கள் மற்றும் டிஎன்ஏ தொகுப்பு என பல முக்கியமான உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கை வகிக்கிறது. முக்கியமாக இச்சத்து உடலின் கொலஸ்ட்ரால் அளவை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது.
எப்படியெனில் இந்த வைட்டமின் பி12 இரத்தத்தில் ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைக்கிறது. இது தான் இதய நோய் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் போன்றவற்றின் அபாயத்தை குறைக்கிறது. எனவே கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து வாருங்கள். இப்போது வைட்டமின் பி12 அதிகம் நிறைந்த காய்கறிகள் எவையென்பதைக் காண்போம்.
பசலைக்கீரை
கீரைகளில் பசலைக்கீரை ஏராளமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. முக்கியமாக இதில் வைட்டமின் பி12 உடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.
கேல் கீரை
பசலைக்கீரைக்கு அடுத்தப்படியாக உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க அல்லது கட்டுப்படுத்த உதவும் மற்றொரு உணவுப் பொருள் தான் கேல் கீரை. இந்த கீரையில் வைட்டமின் பி12 மட்டுமின்றி, வைட்டமின் சி, வைட்டமின் கே, கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துக்களும் அதிகம் உள்ளன. எனவே கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், இந்த கீரை கிடைத்தால், அவற்றை அடிக்கடி வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.
ப்ராக்கோலி
காய்கறிகளில் ப்ராக்கோலி மிகவும் சுவையானது மட்டுன்றி, வைட்டமின் பி12 அதிகம் நிறைந்த காய்கறியும் கூட. இந்த ப்ராக்கோலியை அடிக்கடி உட்கொள்டு வந்தால், அது கல்லீரல் செயல்பாட்டை சீராக்கி, ஆரோக்கியமான அளவில் கொலஸ்ட்லை உற்பத்தி செய்ய உதவி புரிவதுடன், கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.
அஸ்பாரகஸ்
வைட்டமின் பி12 நிறைந்த மற்றொரு காய்கறி தான் அஸ்பாரகஸ். இந்த அஸ்பாரகஸில் ஃபோலேட் அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதுடன், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் ஏராளமான சத்துக்களும் நிறைந்துள்ளன. முக்கியமாக இந்த அஸ்பாரகஸ் இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
பச்சை பட்டாணி
பச்சை பட்டாணி சுவையானது மட்டுமின்றி, வைட்டமின் பி12 அதிகம் நிறைந்த காய்கறியும் கூட. இந்த பச்சை பட்டாணியை வாங்கி அடிக்கடி சமைத்து சாப்பிடும் போது, இதய ஆரோக்கியம், குடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு மட்டுமின்றி, உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.
அவகேடோ
வைட்டமின் பி12 அதிகம் நிறைந்த மற்றொரு உணவுப் பொருள் தான் அவகேடோ. இந்த அவகேடோ பழம் ஆரோக்கியமான கொழுப்புக்கள், நார்ச்சத்து, வைட்டமின் பி12 போன்றவற்றை அதிகம் கொண்டுள்ளது. இச்சத்துக்கள் அனைத்தும் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுவதோடு, நல்ல கொலஸ்ட்ரால் அளவை கணிசமாக அதிகரிக்க உதவுகிறது. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் இந்த பழத்தை கண்டால் வாங்கி சாப்பிட தவறாதீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications