Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
காலையில் இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கிட்டா.. மாரடைப்பைத் தூண்டும் கொலஸ்ட்ரால் ஒரே மாசத்துல குறையுமாம்..
High Cholesterol: தற்போது கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விரு பிரச்சனைகளையும் கொண்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இவை இரண்டுமே ஒருவரது உயிரைப் பறிக்கும் அளவில் மோசமானவை. இந்த பிரச்சனைகளை கவனித்து அதற்கு சரியான சிகிச்சையை சரியான நேரத்தில் மேற்கொள்ளாமல் விட்டுவிட்டால், அதன் விளைவாக மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றின் அபாயம் அதிகரித்துவிடும்.
அதற்கு முதலில் உண்ணும் உணவில் கவனத்தை செலுத்த வேண்டும். அதுவும் காலை வேளையில் உண்ணும் உணவானது சத்தானதாக, உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் நிறைந்த மற்றும் கொலஸ்ட்ராலை சமநிலையில் பராமரிக்க உதவும் உணவாக இருக்க வேண்டும்.

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க வேண்டுமானால் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். உதாரணமாக, ஒரு கப் ஓட்ஸில் நற்பதமான பழங்களை சேர்த்து உட்கொள்ளலாம். ஆய்வுகளின் படி, தினமும் 5-10 கிராம் கரையக்கூடிய நார்ச்சத்தை எடுக்கும் போது, அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை 5 சதவீதம் வரை குறைக்க உதவுகிறது.
காலை உணவைத் தவிர, காலையில் ஒருசில பழக்கங்களை தவறாமல் மேற்கொண்டு வரும் போது, அது கொலஸ்ட்ரால் அளவையும், இரத்த அழுத்த அளவையும் சமநிலையில் பராமரித்து, ஆரோக்கியத்தை நீண்ட நாட்கள் சிறப்பாக வைத்துக் கொள்ளும். இப்போது கொலஸ்ட்ரால் அளவு குறைய வேண்டுமானால் எந்த மாதிரியான பழக்கங்களை ஒருவர் கொண்டிருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
1. காலை நேர வாக்கிங்
உடலுழைப்பு ஒருவருக்கு மிகவும் இன்றியமையாதது. அதுவும் காலையில் எழுந்ததும் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைப்பதோடு, உடலும் நன்கு ஃபிட்டாக இருக்கும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளும் சமநிலையில் பராமரிக்கப்படும். அதற்கு காலையில் செய்ய ஏற்ற மிகச்சிறந்த மற்றும் எளிய உடற்பயிற்சி தான் வாக்கிங். அதுவும் வாரத்திற்கு 3 நாட்கள் குறைந்தது 5 கிமீ நடைப்பயிற்சி, அடுத்த 2 நாட்கள் 30 நிமிட மிதமான தீவிர உடற்பயிற்சி மற்றும் 1 நாள் ரெஸ்ட் என வழக்கமாக கொண்டிருந்தால், அது உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் அளவை 5 சதவீதம் அதிகரிக்கும்.
2. க்ரீன் டீ குடிப்பது
காலையில் எழுந்ததும் சூடாக ஏதாவது குடித்தால் தான் பலருக்கும் அந்நாள் சிறப்பாக இருப்பதை உணர்வார்கள். அதற்கு காலையில் பால், காபி என்று குடிப்பதற்கு பதிலாக க்ரீன் டீயைக் குடிப்பது நல்லது. க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகின்றன. எனவே க்ரீன் டீ குடிக்கும் வழக்கத்தை கொள்வது நல்லது.
3. தியானம் செய்வது
எவ்வளவு தான் உடற்பயிற்சிலும், உணவிலும் கவனத்தை செலுத்தினாலும், மனம் ரிலாக்ஸாக இருந்தால் தான் எதுவும் வேலை செய்யும். அப்படி மனதை ரிலாக்ஸாக வைத்திருக்க தினமும் காலையில் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட வேண்டும். மருத்துவர்களின் கூற்றுப்படி, உடலில் மனஅழுத்தம் அதிகரிக்கும் போது, அது இரத்த குழாய்களை சேதடையச் செய்யும். அதுவே ரிலாக்ஸாக வைத்திருக்க தியானத்தில் ஈடுபட்டால், அது கொலஸ்ட்ரால் அளவை 14 mg/dL வரை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே தியானத்தில் ஈடுபடுங்கள்.
4. வால்நட்ஸ் சாப்பிடவும்
நட்ஸ்கள் மிகச்சிறந்த ஸ்நாக்ஸ்கள். அதுவும் மூளையின் தோற்றத்தைக் கொண்ட வால்நட்ஸ் ஒருவரது கொலஸ்ட்ரால் அளவை கணிசமாக குறைக்க உதவக்கூடியவை. ஏனெனில் இவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகின்றன. ஆய்வுகளில் தினமும் வால்நட்ஸை உட்கொண்டு வந்தவர்களின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே தினமும் காலை உணவில் வால்நட்ஸை சேர்த்து வாருங்கள்.
5. ஆளி விதைகளை உட்கொள்ளவும்
நட்ஸ்களுக்கு அடுத்ததாக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்களை உள்ளடக்கியவை தான் விதைகள். அதுவும் ஆளி விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை அதிகமாக உள்ளன. இவை இரண்டுமே கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கணிசமாக குறைக்கக்கூடியவை. அதற்கு ஆளி விதைகளை காலை உணவில் சேர்க்கலாம் அல்லது ஒரு டீஸ்பூன் வறுத்த ஆளி விதையை அப்படியே மென்று சாப்பிடலாம். ஆளிவிதையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இதை உட்கொள்ளும் போது மலச்சிக்கல் தடுக்கப்படுவதோடு, இரத்த சர்க்கரையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றை காலையில் தவறாமல் மேற்கொண்டு வருவதன் மூலம், மாரடைப்பை வர தூண்டும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications