Latest Updates
-
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
உங்க கண்ணில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்பில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
High Cholesterol Symptoms In Tamil: உலகில் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை நிறைய பேர் சந்தித்து வருகிறார்கள். கொலஸ்ட்ரால் என்பது பிசுபிசுப்பாக இருக்கும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது இயற்கையாக நமது உடலிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் இந்த கொலஸ்ட்ரால் உடலில் அளவுக்கு அதிகமாகும் போது, அது உயிரைப் பறிக்கும் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தின் அபாயத்தை அதிகரிக்கின்றன.
தற்போதைய ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள் மற்றும் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையினால், உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து, இரத்த குழாய்களின் சுவர்களில் படிந்து, இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, மாரடைப்பை வரத் தூண்டுகின்றன.

ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், அது அந்நபருக்கு குறிப்பிட்ட சில ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் தூண்டிவிட்டு, அவற்றை அறிகுறிகளாக வெளிக்காட்டத் தொடங்கும். அந்த அறிகுறிகளை கவனித்து மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டால், இதய நோயின் அபாயத்தைத் தடுக்கலாம். முக்கியமாக கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாக இருந்தால், அது கண்கள் மற்றும் முகத்தில் ஒருசில எச்சரிக்கை அறிகுறிகளை வெளிக்காட்டும். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
1. மஞ்சள் நிற திட்டுகள்
சருமத்தில் குறிப்பாக கண் இமைகளைச் சுற்றி மஞ்சள் நிறத்தில் திட்டுக்கள் காணப்பட்டால், அது உயர் கொலஸ்ட்ராலின் எச்சரிக்கை அறிகுறியாகும். இவை பெரும்பாலும் தீங்கற்றவை. இருப்பினும் இப்படியான திட்டுக்கள் இதய நோயின் அபாயம் அதிகம் இருப்பதைக குறிக்கிறது. எனவே உங்கள் கண்களில் இப்படியான மஞ்சள் நிற திட்டுகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யுங்கள்.
2. கார்னியாவில் மாற்றங்கள்
கண்களின் கருவிழியின் விளிம்பைச் சுற்றி ஏதேனும் வித்தியாசமான நிறத்தில் வளையங்கள் தெரிகிறதா? அதுவும் வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் வளையங்கள் தெரிந்தால், அது கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதற்கான அறிகுறியாகும். ஆகவே உங்கள் கருவிழியில் மாற்றங்களை கண்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
3. கார்னியாவைச் சுற்றியுள்ள வளையம்
பொதுவாக 40 வயதிற்குட்பட்டவர்களின் கண்களில் கார்னியல் ஆர்கஸ் காணப்படுகிறது. இந்த கார்னியல் ஆர்கஸ் என்பது கருவிழியைச் சுற்றியுள்ள வெள்ளை அல்லது சாம்பல் நிற வளையமாகும். இது ஆர்கஸ் செனிலிஸைப் போன்றே இருக்கும். இப்படி கண்களின் கருவிழியைச் சுற்றி வளையங்களானது நன்கு தென்பட்டால், அது உயர் கொலஸ்ட்ராலின் எச்சரிக்கை அறிகுறியாகும்.
4. மஞ்சள் நிற தோல்
எப்போது ஒருவரது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளதோ, அப்போது சருமமானது மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதை ஹைப்பர்லிபிடெமியா என்று அழைப்பர். பெரும்பாலும் இது முகத்தில் தான் தென்படும். அதுவும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெரியும். எனவே உங்கள் முகத்தில், அதுவும் கண்களைச் சுற்றியுள்ள சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது உயர் கொலஸ்ட்ராலின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். இந்நிலையில் மருத்துவரை அணுகி உடனே பரிசோதனை செய்ய வேண்டும்.
5. மஞ்சள் நிற பிம்பிள்
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், சருமத்தின் மேற்பரப்பிற்கு அடிப்பகுதியில் உள்ள செல்களில் கொலஸ்ட்ரால் தேங்கி, சாந்தோமாஸ் எனப்படும் தீங்கற்ற கட்டிகளை உருவாக்கும். இவை பார்ப்பதற்கு பிம்பிள் போன்று மஞ்சள் நிறத்தில் காணப்படும். அதுவும் இந்த பிம்பிள் கன்னங்கள், கண் இமைகள் மற்றும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரும். இந்த மாதிரியான பிம்பிள் வலிக்காவிட்டாலும், அவை அதிக கொலஸ்ட்ராலின் எச்சரிக்கை அறிகுறியாகும். எனவே இந்த அறிகுறியை சந்தித்தால், அசால்ட்டாக இருக்காதீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications