Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
நைட் டைம்-ல் கால்களில் இந்த பிரச்சனையை சந்திக்குறீங்களா? அப்ப கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கு-ன்னு அர்த்தம்..
High Cholesterol Symptoms In Tamil: இந்தியாவில் சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை சந்திக்கிறார்கள். உயர் கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதாகும். இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, இரத்தத்தின் அடர்த்தி அதிகரித்து இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.
ஒரு கட்டத்தில் இந்த கொலஸ்ட்ரால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றின் அபாயத்தையும் அதிகரித்துவிடும். எனவே கொலஸ்ட்ராலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

கொலஸ்ட்ரால் பிரச்சனை எந்த வயதிலும் ஒருவருக்கு வரலாம். குறிப்பாக 30 வயதை தாண்டிவிட்டால், ஒவ்வொருவரும் தங்கள் ஆரோக்கியத்தை தவறாமல் கண்காணித்து வர வேண்டும். அதற்கு உடல் பரிசோதனைகளை வழக்கமாக கொள்ள வேண்டும்.
கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு என்று தனி அறிகுறி இல்லை. ஆனால் கொலஸ்ட்ரால் உடலில் அதிகமானால், உடலின் குறிப்பிட்ட பகுதிகளில ஒருசில பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். கீழே உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் கால்கள் மற்றும் விரல்களில் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
1. அசாதாரண கால் பிடிப்புகள்
அடிக்கடி கால் பிடிப்பு பிரச்சனையை சந்திக்கிறீர்களா? அதுவும் இரவு நேரங்களில் கால்களில் கடுமையான வலி மற்றும் அசௌகரியத்தை சந்திக்கிறீர்களா? அப்படியானால் கால்களில் இரத்த ஓட்டம் மிகவும் மோசமாக உள்ளது என்று அர்த்தம். இதற்கு உயர் கொலஸ்ட்ரால் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
2. கால்கள் மற்றும் விரல்கள் மரத்துப் போவது
கால்கள் மற்றும் விரல்கள் அடிக்கடி மரத்துப் போவதோடு, கால்களில் கூச்ச உணர்வை சந்திக்கிறீர்களா? அதுவும் இரவு நேரங்களில் இந்த பிரச்சனை தீவிரமாக உள்ளதா? அப்படியானால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதன் காரணமாக நரம்புகள் சேதமடைந்து, இரத்த ஓட்டம் குறைந்து, இப்படியான உணர்வுகளுக்கு வழிவகுக்கிறது.
3. குளிர்ச்சியான கைகள் மற்றும் பாதங்கள்
கால்கள் மற்றும் கைகள் எந்நேரமும் மிகுந்த குளிர்ச்சியாக இருந்து, அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வெதுவெதுப்பாக இருந்தால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதன் விளைவாக இரத்த குழாய்களில் அந்த கொலஸ்ட்ரால் படிந்து, இரத்த ஓட்டத்தில் இடையூறை ஏற்படுத்தி, வழக்கத்திற்கு மாறாக கால்கள் மற்றும் கைகளை ஜில்லென்று உண்டாக்கலாம்.
4. கால்கள் மற்றும் கைகளில் வீக்கம்
கால்கள் மற்றும் கைகளில் எதிர்பாராத விதமாக வீக்கம் ஏற்பட்டால், அதுவும் இரவு நேரங்களில் இப்படியான வீக்கம் ஏற்பட்டால், அது உயர் கொலஸ்ட்ராலின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கும் போது, அது இரத்தக்குழாய்களில் அடைப்புக்களை ஏற்படுத்துவதோடு, திரவங்களை வடிகட்டும் பணியில் இடையூறை ஏற்படுத்தி, கால் பகுதியில் நீர்த்தேக்கத்தை உண்டாக்கி, வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
5. சரும நிற மாற்றம்
கால்கள் மற்றும் விரல்களில் உள்ள சருமத்தின் நிறம் சற்று நிறம் மாறி தென்படத் தொடங்குகிறதா? அப்படியானால் உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்ழு அர்த்தம். எனவே உங்கள் சரும நிறத்தில் மாற்றங்களை கண்டால், அதை லேசாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
6. மிகுதியான சோர்வு
எந்த ஒரு வேலையும் செய்யாமல் அல்லது உடலுக்கு எவ்வித கடினமான வேலையும் கொடுக்காமல், மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், குறிப்பாக இரவு நேரத்தில் இம்மாதிரியான உடல் சோர்வு மற்றும் பலவீனத்தை உணர்ந்தால், கொலஸ்ட்ரால் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக தசைகளில் இரத்த ஓட்டம் குறையும் போது, இப்படியான சோர்வு மற்றும் பலவீனத்தை சந்திக்க நேரிடும்.
உயர் கொலஸ்ட்ராலை குறைப்பது எப்படி?
உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை ஒருவர் கவனிக்காமல் விட்டுவிட்டால், அதன் விளைவாக மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயம் அதிகரித்துவிடும். எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி, அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுப்பதோடு, ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டு, தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அதோடு சீரான இடைவெளியில் மருத்துவரை அணுகி, கொலஸ்ட்ரால் அளவை பரிசோதித்து, வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்களையும் செய்ய வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications