Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஆண்களே! உங்க கை விரல்கள் இப்படி இருக்குதா? அப்ப உடம்புல கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கு-ன்னு அர்த்தம்..
High Cholesterol Symptoms In Tamil: கொலஸ்ட்ரால் என்பது ஒரு மெழுகு போன்ற பிசுபிசுப்பான பொருள். இது இரத்தத்தில் காணப்படுகிறது. இந்த கொலஸ்ட்ரால் செல் கட்டுமானத்திற்கு மிகவும் இன்றியமையாதது. இயற்கையாகவே உடலுக்குத் தேவையான அனைத்து கொலஸ்ட்ராலையும் கல்லீரல் உருவாக்குகிறது.
இது தவிர நாம் உண்ணும் உணவுகளின் மூலமும் உடலில் கொலஸ்ட்ரால் சேர்கிறது. இந்த கொலஸ்ட்ரால் உடலில் அதிகளவு சேர்ந்தால், அதன் விளைவாக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். அதுவும் தற்போது ஆண்களிடையே மாரடைப்பின் அபாயம் அதிகரித்து வருகிறது. இதற்கு பார்ட்டி என்ற பெயரில் அவர்கள் ஹோட்டல் உணவுகளை அதிகம் உண்பது ஒரு முக்கிய காரணம்.

ஹோட்டல் உணவுகளில் கொலஸ்ட்ரால் அதிகமாக நிறைந்திருக்கும். இப்படியான கொலஸ்ட்ரால் உணவுகளை உட்கொள்ளும் போது, அதில் உள்ள கொலஸ்ட்ரால் இரத்தக்குழாய்களில் படியத் தொடங்கி, ஒரு கட்டத்தில் மாரடைப்பின் அபாயத்தை அதிகரித்துவிடுகின்றன.
ஆண்களின் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை நகங்கள் மற்றும் விரல்களில் வெளிப்படுத்தும். கீழே கொலஸ்டரால் அதிகம் இருந்தால், எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்பது குறித்த கொடுக்கப்பட்டுள்ளன.
மஞ்சள் நிற புடைப்புகள்
விரல்கள் மற்றும் கை தசைநாண்களில் மஞ்சள் நிறத்தில் புடைப்புகள் தெரிகிறதா? அப்படியானால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. கொழுப்புக்களின் தேக்கத்தால் ஏற்படும் சாந்தோமஸ் என்று அழைக்கப்படும் இந்த மஞ்சள் நிற புடைப்புகளானது, மென்மையாக இருப்பதோடு, அளவுகளில் மாறுபடலாம். எனவே இப்படி உங்கள் விரல்களில் காணப்பட்டால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
தடித்த சருமம்
உங்கள் விரல்களில் உள்ள சருமம் தடிமனாவதை நீங்கள் உணர்ந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இதுவும் உயர் கொலஸ்ட்ராலின் அறிகுறிகளுள் ஒன்றாகும். கொலஸ்ட்ரால் அதிகமாக சருமத்தில் தேங்கும் போது, அது அந்த பகுதியை தடிமனாக்குகிறது.
விரல் மற்றும் கைகள் மரத்துப் போவது
ஆண்களே! உங்கள் விரல்கள் அல்லது கைகள் அடிக்கடி மரத்துப் போவதையோ அல்லது கூச்ச உணர்வையோ அனுபவித்தால், உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக தேங்கியிருக்க வாய்ப்புள்ளது. அதுவும் தமனிகளில் கொலஸ்ட்ரால் தேக்கத்தால் இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்பட்டு, அதன் விளைவாக இந்த உணர்வை சந்திக்கலாம். எனவே சற்று கவனமாக இருங்கள்.
குளிர்ந்த கைகள் மற்றும் விரல்கள்
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், இரத்த ஓட்டம் மோசமாக இருக்கும். இதன் விளைவாக வழக்கத்திற்கு மாறாக கைகள் மற்றும் விரல்கள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இப்படி நீண்ட நாட்களாக கைகள் குளிர்ச்சியாக இருப்பதை அனுபவித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
கைகள் மற்றும் விரல்கள் பலவீனம்
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக தேங்கியிருந்தால், அது ஒருவரது செயல்திறன் மற்றும் ஆற்றலைக் குறைக்கும். அதுவும் ஆண்களின் உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பில், கைகள் பலவீனமாக இருப்பதை உணரக்கூடும். இதன் விளைவாக தினசரி வேலைகளை கூட செய்ய முடியாமல் அவதிப்படக்கூடும்.
கைகள் மற்றும் விரல்கள் வலி அல்லது அசௌகரியம்
ஒருவர் தொடர்ச்சிகள் கைகள் மற்றும் விரல்களில் கடுமையான வலி மற்றும் அசௌகரியத்தை சந்தித்தால், அதை அசால்ட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதற்கு உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருப்பது காரணமாக இருக்கலாம். எனவே கை வலியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications