Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? அது காய்ச்சலோட அறிகுறி இல்லையாம்... மாரடைப்போட அறிகுறியாம்!
சோம்பல் அல்லது பொதுவான சோர்வு உணர்வுக்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், சோர்வுக்குப் பின்னால் உள்ள மிக முக்கியமான காரணம் மாரடைப்பு. மாரடைப்பு உங்கள் இதயத்தில் கூடுதல் அழுத்தத்தின் காரணமாக சோர்வை ஏற்படுத்த
காய்ச்சல் தொற்றுக்கும் மாரடைப்புக்கும் இடையே கிட்டத்தட்ட எந்த தொடர்பும் இல்லை. அப்படித்தான் உங்களுக்கு தோன்றியிருக்கும். காய்ச்சல் மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் உள்ளிட்ட உங்கள் சுவாச மண்டலத்தைத் தாக்கும் வைரஸ் தொற்று என்றாலும், மாரடைப்பு இதய நிலை, இது இதய தசையின் ஒரு பகுதிக்கு போதுமான இரத்தம் கிடைக்காதபோது ஏற்படுகிறது. இருப்பினும், காய்ச்சல் என்று முதலில் தவறாகக் கருதப்பட்ட அறிகுறிகள், மாரடைப்புக்கான அறிகுறிகளாக இருப்பாதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் (ஏஎச்ஏ) ஆய்வு கூறுவது, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு இல்லாத ஒருவர் இதய நோய் அறிகுறிகளை திடீரென அனுபவித்தார்.

அது காய்ச்சல் என்று நினைத்தபோது, பல பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்கு மாரடைப்பு இருப்பது தெரியவந்தது. இதுபோன்ற பல வழக்குகள் கடந்த காலங்களில் வெளிவந்துள்ளன. காய்ச்சல் போன்ற அறிகுறிகளை லேசாக எடுத்துக்கொள்வதற்கு எதிராக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக அவை தொடர்ந்தால், அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். அவை என்னென்ன அறிகுறிகள் என்று இக்கட்டுரையில் காணலாம்.

குமட்டல்
காய்ச்சல் வரும்போது குமட்டல் மற்றும் பிற இரைப்பை குடல் பிரச்சினைகள் வருவது பொதுவானது. அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் தலைச்சுற்றல், இருமல், தொண்டை புண் மற்றும் சோர்வு உள்ளிட்ட பிற அறிகுறிகளுடன் காய்ச்சல் இருக்கலாம். இதேபோல், மாரடைப்பு வரும்போது குமட்டல் ஏற்படுவது பொதுவான அறிகுறியாகும். குறிப்பாக பெண்களிடையே இந்த அறிகுறி அதிகமாக காணப்படுகிறது. ஏனென்றால், இன்ஃபார்க்டட் பகுதிகளிலிருந்து வரும் நெக்ரோடிக், இஸ்கிமிக் மற்றும் காயமடைந்த கார்டியோமயோசைட்டுகள் லாக்டிக் அமிலம், பைருவிக் அமிலம் மற்றும் பிற வளர்சிதை மாற்றங்களை வெளியிடுகின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தலைச்சுற்றல்
தலைச்சுற்றல் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்கலாம். இது காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். ஒருவர் தங்கள் உறுப்புகளில் என்ன நடக்கிறது என்பதை உணராமல் இருக்கலாம் மற்றும் தொடர்ந்து தலைவலி இருக்கலாம். ஆனால் காய்ச்சலை வீட்டிலேயே நிர்வகிக்க முடியும் என்றாலும், இது மாரடைப்புக்கான அறிகுறியாக நீங்கள் உணர்ந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள். மீண்டும், மூச்சுத் திணறல், மூட்டுகளில் வீக்கம், அடிக்கடி சோர்வு அல்லது மார்பு வலி போன்ற மாரடைப்புக்கான பிற அறிகுறிகளைக் கவனிப்பதே வித்தியாசத்தை புரிந்து கொள்வதற்கான சிறந்த வழி.

குளிர் அல்லது அதிக வியர்வை
அதிக வியர்வை அல்லது குளிரை உணர்வது மாரடைப்பின் முதல் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம். கடுமையான மார்பு வலி, மூச்சுத் திணறல் மற்றும் இதயத் துடிப்பு போன்றவற்றுக்குப் பிறகு இவை உடனடியாக ஏற்பட்டால், உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடுவது நல்லது. இருப்பினும், குளிர் வியர்வை இருப்பது காய்ச்சலைக் குறிக்கும். காய்ச்சல் வந்து போகும் போது உங்களுக்கு தசை வலிகள் மற்றும் குளிர் மற்றும் வியர்வை ஏற்படும்.

மூச்சு திணறல்
காய்ச்சல் நோய்த்தொற்றின் மிகவும் தீவிரமான நிகழ்வுகளில், மார்பு வலி, தலைச்சுற்றல் மற்றும் வலிப்பு ஆகியவற்றுடன் மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவை அரிதானவை. மூச்சுத் திணறல் ஏற்படுவது மாரடைப்பின் முக்கியமான அறிகுறியாகும். மேலும், இது மார்பு வலி, தலைசுற்றல் மற்றும் மயக்கத்தையும் ஏற்படுத்தலாம்.

சோர்வு அல்லது சோம்பல்
சோம்பல் அல்லது பொதுவான சோர்வு உணர்வுக்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், சோர்வுக்குப் பின்னால் உள்ள மிக முக்கியமான காரணம் மாரடைப்பு. மாரடைப்பு உங்கள் இதயத்தில் கூடுதல் அழுத்தத்தின் காரணமாக சோர்வை ஏற்படுத்தும். குறிப்பாக இரத்தத்தை பம்ப் செய்ய கடினமாக முயற்சிக்கும் போது, உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். மறுபுறம், திடீர், அதிகப்படியான சோர்வு காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும். இது மற்ற அறிகுறிகளுக்கு முன் தோன்றும். மாரடைப்புடன் தொடர்புடைய பிற அறிகுறிகள் இருந்தால், உங்கள் மருத்துவரை அணுகுமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வழக்கமான இதய ஆரோக்கிய பரிசோதனை
இருதய நோய் அபாயத்தைக் குறைப்பதற்கான முக்கிய அம்சங்கள், உணவுத் தரம், உடல் செயல்பாடு, புகைபிடித்தலை நிறுத்துதல், உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ), கொலஸ்ட்ரால், இரத்தம் போன்ற சுகாதார நடத்தைகள் மற்றும் ஆபத்து காரணிகளை நிர்வகிப்பது. ஆனால் உங்கள் வாழ்க்கை முறையைக் கண்காணிப்பதுடன், வழக்கமான பரிசோதனையை செய்வதும் முக்கியம். மேலும், உங்கள் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து பரிசோதிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications