Latest Updates
-
Nag Panchami 2026: நாக பஞ்சமியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 7 அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப அது குடல்வால் புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..! -
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
வார ராசிபலன் (16 August 2026 - 22 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
காலிஃபிளவர் வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா, சூப்பரா இருக்கும்
ஆண்களே! இந்த அறிகுறிகள் இருப்பவர்களின் இதயம் பலவீனமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாம்...
நமது இதயத்தின் ஆரோக்கியத்தை சோதிக்க பல சோதனைகள் உள்ளது. கொழுப்பு, இரத்த அழுத்தம், சர்க்கரை என நமது இதயத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணங்கள் பல உள்ளது.
மனிதர்களின் உயிர் உடலுக்குள் எங்கு இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாத ஒன்றாகும். ஆனால் மனிதர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்பதை நிர்ணயிப்பது நமது இதயம்தான். நமது ஆரோக்கியத்தை தீர்மானிப்பது இதயம்தான் என்று கூட சொல்லலாம்.

நமது இதயத்தின் ஆரோக்கியத்தை சோதிக்க பல சோதனைகள் உள்ளது. கொழுப்பு, இரத்த அழுத்தம், சர்க்கரை என நமது இதயத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணங்கள் பல உள்ளது. இன்று உலக அளவில் பலரையும் பயமுறுத்தும் ஒரு நோய் மாரடைப்பு ஆகும். மாரடைப்பு ஏற்படப்போவதை சில அறிகுறிகளை வைத்து கணக்கிடலாம். உங்கள் உடலின் சில அறிகுறிகள் இதயத்துடன் தொடர்புடையவை ஆகும். அது என்னென்ன என்று இந்த பதவில் பார்க்கலாம்.

உயரம் குறைவு
இது உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே உங்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை குறிக்கிறது. உயரம் குறைவாக இருப்பது ஆர்த்தோகுளோரோசிஸ் நோயுடன் தொடர்புடையது என்பது நிரூபிக்கப்பட்டதாகும்.

வழுக்கை
வழுக்கைத்தலை இருப்பது உங்கள் இதயம் பலவீனமாக இருப்பதன் அறிகுறியாகும். வழுக்கைத்தலை அவர்களின் மரபணுக்கள் மூலமாக இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்பட்டால் அது மாரடைப்பிற்கு வழிவகுக்கும். இது ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனைப் பொறுத்தது.

கண் இமைகளில் கொழுப்பு படிவு
இது மாரடைப்பிற்கான முக்கியமான அறிகுறியாகும். ஆரோக்கியமான ஆண்களுக்கு இது ஏற்படாது. இதயம் பலவீனமானவர்களுக்கு இந்த அறிகுறி இருக்க வாய்ப்புள்ளது.

முடி நிறைந்த மார்பு
மார்பு முழுவதும் முடி இருப்பது இதய ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகும். மேலும் இது ஆண் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோனை சார்ந்துள்ளது.

காது மடல்களில் மடிப்பு
காது மடல்கள் நமது இதயத்துடன் நேரடி தொடர்பு கொண்டவையாகும். காது மடல்களில் மடிப்பு இருப்பது உங்கள் இதயம் பலவீனமாக இருப்பதற்கான அறிகுறியாகும்.

கால் வீக்கம்
கால், கணுக்கால் போன்ற இடங்களில் வீக்கம் ஏற்படுவது உங்கள் இதயம் பலவீனத்திற்கான அறிகுறியாக கூட இருக்கலாம். மேலும் இது சிறுநீரக செயலிழப்பு கல்லீரல் கோளாறு போன்றவற்றின் அறிகுறியாக கூட இருக்கலாம்.



Click it and Unblock the Notifications