Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
ஒருவருக்கு 3 மாதத்திற்குள் இதய செயலிழப்பின் அபாயம் உள்ளதா என்பதை கணிக்கும் புதிய ஆப்! அதென்ன-ன்னு பாருங்க..
Heart Failure Predictor: இந்தியாவில் நாளுக்கு நாள் மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு வழக்குகள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இந்த பிரச்சனைகளால் சமீப காலமாக இளம் வயதினரே அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இந்த இதய பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு காணும் விதமாக, மருத்துவ நிபுணர்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் ஆன்லைன் ஹெல்த்கேர் தளமான FITTO டெங்கு ஷாக் சிண்ட்ரோமிற்கான DSSp என்னும் ஆப்பை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இதய செயலிழப்புக்காக AI உதவியுடன் (HAIF) இதய செயலிழப்பு முன்னறிவிப்பாளரை (HFP) உருவாக்கியுள்ளது. இதுவே உலகின் முதல் இதய செயலிழப்பு முன்னறிவிப்பாளர் (HFP) ஆகும்.

இந்த புதிய ஆப் மூலம் ஒருவருக்கு இதய செயலிழப்புக்கான அபாயம் உள்ளதா என்பதை அறியலாம். இந்த DSSp மற்றும் HFP ஆகிய இரண்டும் டாக்டர். அபிஜித் ரே தலைமையில் உருவாக்கப்பட்டதாகும். இந்த இதய செயலிழப்பு முன்னறிவிப்பாளர் குறித்து டாக்டர். அபிஜித் ரே போல்ட்ஸ்கையிடம் பகிர்ந்து கொண்டார். அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
இதய செயலிழப்பு முன்னறிவிப்பாளரை உருவாக்க வேண்டுமென்ற யோசனை எப்படி வந்தது?
இந்த HFP-யை உருவாக்க வேண்டுமென்ற யோசனை எப்படி வந்தது என்று டாக்டர். ரே-யிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது, "இதய செயலிழப்பு என்னும் நிலை மற்ற நோய்களில் இருந்து குறிப்பிடத்தக்க அளவில் வேறுபட்டது. இதை கண்டறிவதற்கு என்று எந்த ஒரு குறிப்பிட்ட அளவுகோல்களும் இல்லை. மேலும் இதய செயலிழப்பு ஒருவருக்கு ஏற்படப்போகிறது என்றால் அனைவரிடமும் அதற்கான அறிகுறிகள் தெரிவதில்லை.
சிலருக்கு அறிகுறிகள் எதுவும் தெரியாமலேயே இதய செயலிழப்பு ஏற்படுகிறது. அப்படியே அறிகுறிகள் தெரிந்தாலும், அவை அடிக்கடி ஒன்றுடன் ஒன்று சேர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தும். குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த சர்க்கரை கொண்ட நோயாளிகளிடையே இப்படியான குழப்பம் அதிகம் இருக்கும். எனவே நான் எப்போதும் இதய செயலிழப்பு நிகழ்வுகளை ஆரம்பத்திலேயே அடையாளம் காண ஒரு ஸ்கிரீனிங் சேனலை வைத்திருக்க விரும்பினேன்" என்று டாக்டர் அபிஜித் ரே கூறினார்.
இதய செயலிழப்பு முன்னறிவிப்பாளர் என்பது என்ன? எவ்வாறு செயல்படுகிறது?
டாக்டர். அபிஜித் ரே-ன் கூற்றுப்படி, இதய செயலிழப்பு முன்னறிவிப்பாளர் என்பது ஒருவரது ECG மூலம் அந்நபருக்கு இதய இழப்பு ஏற்படுவதற்கான அபாயம் அடுத்த 3 மாதத்திற்குள் உள்ளதா என்பதை கண்டறிய உதவுகிறது. அதுவும் நோயாளியின் ECG தரவு சேகரிக்கப்பட்ட பின், அது காப்புரிமை பெற்ற சூத்திரத்தின் அடிப்படையில் அல்காரிதம் மூலம் செயலாக்கப்படுகிறது. இந்த சூத்திரம் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருவருக்கு அடுத்த 3 மாத காலத்திற்குள் இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதா என்பதை கணித்து கூறுகிறது.
இதய செயலிழப்புக்கான காரணங்கள்
இதய செயலிழப்புக்கான காரணங்கள் குறித்து டாக்டர். ரே-யிடம் கேட்ட போது, இதய செயலிழப்பு ஒருவருக்கு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதில் உயர் இரத்த அழுத்தம், குடிப்பழக்கம், உயர் இரத்த சர்க்கரை, ஹைப்போ தைராய்டிசம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இது தவிர மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கும் இதன் அபாயம் உள்ளது. இவை இதயத்தின் செயல்பாட்டை நிறுத்தி, இதய செயலிழப்புக்கு வழிவகுக்கிறது. இதய செயலிழப்பு என்பது இதயத்தால் இரத்தத்தை உந்தும் செயலின் இயலாமை ஆகும்.
ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ AI எவ்வாறு உதவுகிறது?
ஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ எப்படி AI உதவுகிறது என்ற கேள்விக்கு இதய செயலிழப்பு முன்னறிவிப்பாளர் ஒரு சக்தவாய்ந்த எடுத்துக்காட்டு என்று டாக்டர் அபிஜித் கூறினார். பாரம்பரியமாக மருத்துவர்கள் நோயாளியின் நிலைமையை மதிப்பிடுவதற்கு மருத்துவ அறிவு மற்றும் கிடைக்கும் மருத்துவ கருவிகளையே நம்பியிருக்கிறார்கள்.
ஆயினும், AI மூலம் ஒருவருக்கு எதிர்காலத்தில் எந்த மாதிரியான நோய்கள் வருவதற்கான அபாயம் உள்ளது என்பதை கணிக்க முடியும். இதன் மூலம் ஒருவருக்கு வரக்கூடிய நோய்களை கண்டறிவது மட்டுமின்றி, நோயாளியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்து, திறம்பட ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
நினைவில் கொள்ள வேண்டியவை
ஒருவருக்கு இதய செயலிழப்புக்கான காரணங்களுள் ஏதேனும் ஒன்று இருந்தால், அவர்கள் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் ஒருபோதும் கட்டுப்பாட்டை மீறக்கூடாது. இதய செயலிழப்பைத் தடுக்க வேண்டுமானால், தினசரி உடற்பயிற்சி, போதுமான ஓய்வு மற்றும் நிறைய நீரை அருந்துவது ஆகியவை மிகவும் முக்கியம் என்றும் டாக்டர். ரே வலியுறுத்தினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications