Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
இந்த 5 வைரஸ் தொற்றுகள் இதயத்தை கடுமையாக சேதப்படுத்தும் தெரியுமா?
Heart Damage In Tamil: பொதுவாக நமது உடலில் ஏதேனும் கிருமிகள் நுழைந்துவிட்டால், அதை எதிர்த்து போராடும் போது, அப்பகுதியில் அழற்சி அல்லது காயம் ஏற்படும். அதுவும் நமது உடலில் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண் கிருமிகள் நுழைந்துவிட்டால், அது உடலின் பல்வேறு உறுப்புக்களை சேதப்படுத்தும்.
முக்கியமாக இந்த கிருமிகள் இதயத்தைத் தாக்கவும் முயற்சிக்கும். அப்படி கிருமிகள் இதயத்தை தாக்கும் போது, அதை எதிர்த்துப் போராடும் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தால் அப்பகுதியில் அழற்சி/வீக்கம் ஏற்படும். இந்த வீக்கம் நீண்ட காலம் நீடித்திருந்தால், அது இதயத்தை பலவீனப்படுத்தி சேதப்படுத்தும். இதன் விளைவாக இதய பிரச்சனைகள் ஏற்படலாம்.

இதயத்தில் வீக்கம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று வைரஸ் தொற்றுகள். இந்த வைரஸ் தொற்றுகள் மயோகார்டிடிஸை உண்டாக்கும். அதாவது, எப்போது வைரஸ் தொற்று ஏற்படுகிறதோ, அப்போது அது இதயத்தில் அழற்சியை உண்டாக்கினால், அதை வைரல் மயோகார்டிடிஸ் என்று அழைப்பர். அதாவது, இதை வைரல் இதய நோய் என்றும் அழைப்பர்.
மயோகார்டிடிஸ் என்பது இதயத்தின் மயோகார்டியம் பகுதியில் ஏற்பட்டுள்ள வீக்கம்/அழற்சியை குறிப்பிடுகிறது. இந்த மயோகார்டியம் இதய சுவரின் நடுத்தர தசை அடுக்கு ஆகும். பல நேரங்களில் இதய வீக்கத்திற்கான சரியான காரணம் தெரிவதில்லை. இருப்பினும் ஒருசில வைரஸ் தொற்று உடலில் ஏற்படும் போது, அது மயோகார்டிடிஸை ஏற்படுத்தலாம். இப்போது எந்த வைரஸ் தொற்றுகள் வைரல் மயோகார்டிடிஸை உண்டாக்கும் என்பதைக் காண்போம்.
1. கோவிட்-19
உலகெஙகிலும் பரவி மில்லியன் கணக்கான மக்களின் உயிரைப் பறித்த கோவிட்-19 வைரஸ் இதய தசைகளில் வீக்கத்தை ஏற்படுத்தலாம். அதுவும் கொரோனாவிற்கான தடுப்பூசியை பெற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிலருக்கு மயோகார்டிடிஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் வழக்குகளும் பதிவாகியுள்ளன.
2. எச்.ஐ.வி
எச்.ஐ.வி வைரஸ்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை முதலில் குறி வைத்து பலவீனப்படுத்தும் ஒரு மோசமான வைரஸ்களாகும். இந்த வைரஸ் உடலினுள் நுழைந்தால், அது முதலில் இரத்த வெள்ளையணுக்களை தாக்கி, உடலின் எதிர்க்கும் ஆற்றலைக் குறைத்துவிடும். எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மயோகார்டிடிஸை அனுபவிக்கலாம் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன.
3. மனித ஹெர்பீஸ் வைரஸ் 6 (HHV-6)
HHV-6 என்பது HHV-6A மற்றும் HHV-6B எனப்படும் ஹெர்பெஸ் வைரஸ்களின் தொகுப்பாகும். இந்த வைரஸால் ரோசோலா சொறி ஏற்படலாம். மேலும் இந்த HHV-6 மயோகார்டிடிஸை உண்டாக்கலாம் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
4. ஹெபடைடிஸ் சி வைரஸ் (HCV)
ஹெபடைடிஸ் சி வைரஸ் ஹெபடைடிஸ் சி என்னும் கல்லீரல் நோயை உண்டாக்கலாம். இந்த கல்லீரல் நோய் இரத்தத்தில் பரவும் வைரஸ் தொற்றாகும். இது சிரோசிஸ், கல்லீரல் செயலிழப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆனால் இந்த ஹெபடைடிஸ் சி வைரஸ் மயோகார்டிடிஸ் உட்பட பல இதய பிரச்சனைகளுக்கும் வழிவகுப்பதாக 2021 ஆம் ஆண்டின் மதிப்பாய்வில் கூறப்பட்டுள்ளது.
5. இன்ஃப்ளூயன்ஸா
இன்ஃப்ளூயன்ஸா அல்லது ப்ளூ ஒரு பொதுவான வைரஸ் தொற்றால் ஏற்படக்கூடிய ஒரு சுவாச நோயாகும். இதில் 4 வகைகள் உள்ளன. அதில் இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பி ஆகிய இரண்டும் பொதுவானவை. இந்த இன்ஃப்ளூயன்ஸா ஒருவருக்கு சுவாச பிரச்சனைகளை மட்டுமின்றி, மயோகார்டிடிஸையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications