Latest Updates
-
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரங்கள பணமும், அதிர்ஷ்டமும் தேடிவரப்போகுதாம்... உங்க ராசி என்ன? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க..
Heart Blockage: இதயத்தில் அடைப்பு ஏற்படக்கூடாதா? அப்ப இந்த விதைகளை தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க..
Heart Blockage In Tamil: உலகளவில் இதய நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, இளம் வயதிலேயே இறந்து வருகிறார்கள். குறிப்பாக கரோனரி தமனி நோய் என்னும் இதய அடைப்பால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதய அடைப்பு என்பது இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் தமனிகளில் இரத்த ஓட்டம் தடைபடும் நிலையாகும். இப்படி தமனிகளில் அடைப்பு ஏற்பட அதிகமான கொலஸ்ட்ரால் தான் முக்கிய காரணம்.
உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, அந்த கொலஸ்ட்ரால் இரத்தக் குழாய்களில் அப்படியே படிந்து, இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தும். இரத்தக்குழாய்களில் கொழுப்புக்கள் படிந்து, அடைப்பை ஏற்படுத்தியிருந்தால், அது ஒருசில பொதுவான அறிகுறிகளை வெளிக்காட்டும். அவை மார்பு பகுதியில் அசௌகரியம், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தீவிர நிலையில் மாரடைப்பு போன்றவை ஏற்படும்.

தற்போதைய உணவுப் பழக்கத்தில் இதய அடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளன. ஏனெனில் ஜங்க் உணவுகள் நம்மைச் சுற்றி அதிகம் உள்ளன. இந்த உணவுகளை தினமும் உட்கொண்டு வந்தாலே போதும், கொலஸ்ட்ரால் கணக்கிட முடியாத அளவில் அதிகரித்து, இதய குழாய்களில் அடைப்பை ஏற்படுத்திவிடும்.
இதய அடைப்பை சரியான நேரத்தை கவனித்து சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், அது ஆளையே கொன்றுவிடும். எனவே இதயத்தில் அடைப்பு இருப்பதை அறிந்து விட்டால், ஒருவர் தங்களின் உணவுப் பழக்கத்தில் உடனே மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். முக்கியமாக இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.
அப்படி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இதய அடைப்பைக் கட்டுப்படுத்தவும் உதவும் ஒரு அற்புதமான உணவுப் பொருள் தான் விதைகள். கீழே 5 விதமான விதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விதைகளை தினசரி உணவில் சேர்த்து வந்தால், இதய அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
1.சியா விதைகள்
சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலினுள் உள்ள வீக்த்தைக் குறைக்கவும், இதய நோயின் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவைப் பராமரிக்க உதவுகிறது. அதற்கு சியா விதைகளை நீரில் ஊற வைத்து, அவற்றை எலுமிச்சை ஜூஸ் உடன் சேர்த்து குடித்து வாருங்கள்.
2. ஆளி விதைகள்
ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தில் மாறுபாடான ஆல்பா லினோலினிக் அமிலம் அதிகளவில் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி புரிகின்றன. மேலும் இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய நோயை எதிர்த்து நல்ல பாதுகாப்பை வழங்கும். முக்கியமாக இந்த விதைகள் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவி புரிகின்றன. இப்படிப்பட்ட ஆளி விதைகளை தினசரி உணவில் சேர்த்து வர, இதய நோயைத் தடுக்கலாம்.
3. பூசணி விதைகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மற்றொரு விதை தான் பூசணி விதைகள். இந்த விதைகளில் மக்னீசியம், ஜிங்க், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் உள்ளன. இவை அனைத்தும் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி புரியும். எப்படியெனில் இதில் உள்ள மக்னீசியம் இரத்த அழுத்ததைக் கட்டுப்படுத்தி, இதய செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. எனவே இதயம் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், பூசணி விதைகளை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள்.
4. சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகளும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. ஏனெனில் இந்த விதைகளில் வைட்டமின் ஈ என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை ப்ரீ ராடிக்கல்களால் இதயத்தில் ஏற்படும் சேதத்தைத் தடுக்கின்றன. மேலும் வைட்டமின் ஈ தமனிகளில் கொழுப்புக்கள் படிவதைத் தடுக்க உதவுகின்றன. அதோடு இந்த விதைகளில் உள்ள பைட்டோஸ்டெரால்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
5. எள்ளு விதைகள்
எள்ளு விதைகளில் லிக்னன்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் உள்ளன. இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. அதுவும் இதில் உள்ள வளமான அளவிலான மக்னீசியம், இதய செயல்பாட்டிற்கு உதவுவதோடு, இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகின்றன. எனவே இதய பிரச்சனைகளைத் தடுக்க இந்த விதைகளை தினசரி உணவில் சேர்த்து வர முயற்சி செய்யுங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள விதைகள் அனைத்தும் கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தைவும், அதன் செயல்பாட்டையும் மேம்படுத்த பெரிதும் உதவி புரிவதால், இந்த விதைகளை தினசரி உணவில் சேர்த்து வருவதன் மூலம், இதயம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











