இதய அடைப்பு இருப்பதை வீட்டில் இருந்தே இந்த சின்ன சோதனை மூலம் தெரிஞ்சுக்கலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க..

Heart Blockage: இதய ஆரோக்கியம் என்பது மிகவும் அவசியம். இதயத்தில் உள்ள பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கொண்டால், உயிரிழப்பைத் தடுக்கலாம். இதய பிரச்சனைகளானது எப்போது ஒருவரது இரத்தக்குழாய்களில் கொழுப்புக்கள் படிந்து அடைப்பை ஏற்படுத்துகிறதோ, அப்போது இதய பிரச்சனைகள் ஏற்படத் தொடங்குகின்றன.

என்ன தான் தற்போது மருத்துவ துறையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், இதயத்திற்கு செலலும் இரத்தக்குழாயில் உள்ள அடைப்பை வீட்டில் இருந்தவாறே கண்டறியலாம் என்று போர்டு சான்றிதழ் பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜெர்மி கூறியுள்ளார். இதுக்குறித்து டாக்டர் ஜெர்மி தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

Heart Blockage Doctor Reveals How To Find If You Have A Heart Blockage With A Single Test

இதய பிரச்சனைகளை வீட்டில் இருந்தவாறே கண்டறிய ஒருவர் தங்கள் உடலை கூர்மையாக கவனிக்க வேண்டும். பொதுவாக நமது உடலில் ஏதேனும் தவறு பிரச்சனை இருந்தால், நமது உடல் ஒருசில சிக்னல்களை அடிக்கடி அனுப்பும். அந்த சிக்னல்களை கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இப்படி கவனிப்பதன் மூலம் இதயத்தில் உள்ள அடைப்புக்களை வீட்டில் இருந்தவாறே கண்டறியலாம்.

இதயத்தில் பிரச்சனை இருந்தால் நெஞ்சு பகுதியில் இறுக்கம், மூச்சுத்திணறல், தாடைல் அல்லது கைகளில் வலியை அனுபவிக்கக்கூடும். இந்த அறிகுறிகள் வேறு சில ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியும் கூட. ஆனால் இதயத்தில் பிரச்சனை இருப்பதை கண்டறிய நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில், இந்த அறிகுறிகளை ஓய்வு எடுக்கும் போதும் சந்திக்கிறீர்களா இல்லையா என்பது தான். இப்படி ஓய்வின் போது இந்த அறிகுறிகள் தற்காலிகமாக குறைந்தால், இதயத்தில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.

அறிகுறிகள் எதுவும் தெரியாமல் இருந்தால், இதயம் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தமா?

இதயத்தில் பிரச்சனை இருந்தால், அது அனைவருக்குமே அறிகுறிகளை வெளிக்காட்டும் என்று கூற முடியாது. சிலருக்கு எந்த அறிகுறிகளும் தெரியாமல் இருக்கலாம். இப்படி அறிகுறிகள் தெரியாமல் இதய அடைப்புக்களை கொண்டிருக்கும் நிலை தான், சைலன்ட் இஸ்கிமியா.

இத்தகையவர்கள் வழக்கமான ஆரோக்கிய பரிசோதனைகளை செய்ய வேண்டியது அவசியம். முக்கியமாக உயர் கொலஸ்ட்ரால், புகைப்பழக்கம், சர்க்கரை நோய், இதய நோய்க்கான குடும்ப வரலாறு கொண்டவர்கள், சீரான இடைவெளியில் உடல் பரிசோதனைகளை கட்டாயம் செய்ய வேண்டும்.

இதய ஆரோக்கியம் சிறப்பாக இருப்ப பின்பற்ற வேண்டியவைகள்:

* இதயம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டிடுமானால், கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மெலிந்த புரோட்டீன்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

* இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். உடற்பயிற்சியானது உடல் முழுதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. எனவே வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

* மன அழுத்தமானது இதயத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எனவே மன அழுத்தத்தைக் குறைக்க தினமும் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றை செய்ய வேண்டும்.

* புகைப்பழக்கம் முதலில் நுரையீரலுடன், இரத்த நாளங்களையும் சேதப்படுத்தி, இதயத்தில் அடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே இதய பிரச்சனைகளைத் தவிர்க்க, முதலில் புகைப்பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும்.

* ஓருவர் வழக்கமான பரிசோதனைகளை சீரான இடைவெளியில் மேற்கொண்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றின் அபாயத்தை கண்டறியலாம். ஆரம்பத்திலேயே இவற்றிற்கு சிகிச்சை மேற்கொண்டு வந்தால் இதய நோயைத் தடுக்கலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion