Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
மாரடைப்பு ஏன் பெரும்பாலும் பாத்ரூம்மில் இருக்கும் போது ஏற்படுகிறது என்று தெரியுமா?
Heart Attack In Tamil: தற்போது மாரடைப்பு எந்த வயதினருக்கும், எப்போது வேண்டுமானாலும் ஏற்படுகிறது. அதுவும் இதுவரை நடந்த மாரடைப்பு நிகழ்வுகளை எடுத்துக் கொண்டால், நிறைய பேருக்கு பாத்ரூம்மில் இருக்கும் போது தான் ஏற்பட்டுள்ளது. இதனால் இதய நோயாளிகளுக்கு பாத்ரூம் ஒரு ஆபத்தான பகுதி என்றே கூறலாம்.
என்ன தான் பாத்ரூம் தினசரி நாம் பயன்படுத்தும் ஒரு முக்கியமான பகுதியாக இருந்தாலும், இந்த பகுதி ஒருவருக்கு மாரடைப்பு வருவதை தூண்டுவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆகவே இதய பிரச்சனை உள்ளவர்கள் பாத்ரூம் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் இத்தகையவர்கள் பாத்ரூம் செல்லும் போது, ஒருசில நடவடிக்கைகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். சரி, ஏன் மாரடைப்பு பெரும்பாலும் பாத்ரூம்மில் இருக்கும் போது ஏற்படுகிறது என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். இப்போது அதற்கான காரணங்கள் என்னவென்பதைக் காண்போம்.
மருத்துவர்களின் கூற்றுப்படி, மாரடைப்பானது ஒருவரது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தின் இடையூறு ஏற்படும் போது வருகிறது. அதுவும் ஒருவர் குளிக்கும் போது அல்லது மலம் கழிக்கும் போது, உடலில் ஏற்படக்கூடிய அதிக அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு ஒருவருக்கு ஏற்படலாம். அது எப்படி என்பதை விரிவாக காண்போம்.
மலம் கழிக்கும் போது மாரடைப்பு ஏன் வருகிறது?
நிபுணர்களின் கூற்றுப்படி, பொதுவாக மலம் கழிக்கும் போது ஒருவர் கழிவுகளை வெளியேற்ற அழுத்தம் கொடுக்க வேண்டியிருக்கும். சில சமயங்களில் சிலர் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு அழுத்தம் கொடுக்கும் போது, அந்த அழுத்தமானது இதயத்திலும் ஏற்பட்டு மாரடைப்பை தூண்டுகிறது. எனவே தான் இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு கழிவறையில் திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது.
குளிக்கும் போது ஏன் மாரடைப்பு ஏற்படுகிறது?
ஒருவர் மிகவும் சூடான அல்லது குளிர்ச்சியான நீரில் குளிக்கும் போது, அது இதயத் துடிப்பை பாதிக்கிறது. குளிக்கும் போது நீரின் வெப்பநிலைக்கு ஏற்ப உடல் வெப்பநிலை சரிசெய்யப்பட்டு, தமனிகள் மற்றும் நுண் குழாய்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதுவும் நல்ல சூடான நீரில் குளிப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது பிற வகையான இதய நோய்களின் அபாயம் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இதய நோய் உள்ளவர்கள் பலர் தங்கள் மாத்திரைகளை குளியலறையிலும் வைத்திருப்பார்கள். அரிதான சந்தர்ப்பங்களில் இந்த மாத்திரைகளை எடுத்தவுடன் குளித்தால், அதுவும் மாரடைப்பின் அபாயத்தை தூண்டும்.
மாரடைப்பின் அறிகுறிகள்
நிபுணர்களின் கூற்றுப்படி, பாத்ரூம்மில் இருக்கும் போது பின்வரும் அறிகுறிகள் தெரிந்தால், அது மாரடைப்பின் அறிகுறிகளாகும்.
* நெஞ்சு வலி
* திடீர் மூச்சுத்திணறல்
* மயக்கம்
* வாந்தி
* மூச்சுவிடுவதில் சிரமம்
* மயக்கம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை பாத்ரூம்மில் இருக்கும் போது அனுபவித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதய பிரச்சனை உள்ளவர்கள் பாத்ரூம் செல்லும் முன் பின்பற்ற வேண்டியவைகள்:
உங்களுக்கு இதய பிரச்சனை இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் குளியலறையில் நீங்கள் இருந்தால், உங்களை சரிபார்க்குமாறு உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்துவிட்டு, பின் பாத்ரூம் செல்ல வேண்டும். முக்கியமாக குளிக்கும் போது பின்வரும் பழக்கங்களை கொள்ள வேண்டும். அவை:
* மிகவும் சூடான நீரில் குளிக்காதீர்கள்.
* குளியலறையில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்த்திடுங்கள்.
* மருந்து மாத்திரைகளை எடுத்தவுடனேயே குளிப்பதைத் தவிர்த்திடுங்கள். அதுவும் சூடான நீரில் குளிக்காதீர்கள்.
* பாத்ரூம் செல்லும்போது எப்போதும் மொபைலை வைத்திருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications