Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப இந்த இலைகளை காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுங்க...
Heart Attack In Tamil: கொலஸ்ட்ரால் என்பது உடலின் ஒவ்வொரு செல்களிலும் காணப்படும் ஒரு மெழுகு போன்ற பிசுபிசுப்பான பொருள். இந்த கொலஸ்ட்ரால் ஹார்மோன்கள், வைட்டமின் டி மற்றும் செரிமானத்திற்கு தேவையானதை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கை வகிக்கிறது. இப்படிப்பட்ட உடலுக்கு தேலையான கொலஸ்ட்ராலை என்ன தான் நமது உடல் தானாகவே உற்பத்தி செய்தாலும், உண்ணும் உணவுகளின் மூலமும் இந்த கொலஸ்ட்ரால் உடலில் சேர்கிறது.
இந்த கொலஸ்ட்ரால் உடலில் இரண்டு வடிவங்களில் நகர்கிறது. ஒன்று HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால். இதில் கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாக சேரும் போது, அது இரத்தக்குழாய்களில் படிந்து இரத்த ஓட்டத்தில் இடையூறை ஏற்படுத்தி, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளைத் தூண்டிவிடுகிறது.

குறிப்பாக இந்த வகை கொலஸ்ட்ரால் உடலில் அதிகரிக்கும் போது மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றின் அபாயம் அதிகரிக்கிறது. உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது தெளிவான அறிகுறிகளை வெளிக்காட்டாது.
எனவே உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க, அந்த கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் உணவுப் பொருட்கள், பானங்கள் போன்றவற்றை மட்டுமின்றி, ஒருசில மருத்துவ குணம் நிறைந்த இலைகளை உட்கொண்டு வந்தால் போதும். இப்போது மாரடைப்பைத் தூண்டும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க எந்த இலைகளை உட்கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.
முருங்கை இலைகள்
முருங்கை இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகம் உள்ளன. இந்த முருங்கை இலைகளை பொடியாகவோ, டீயாகவோ அல்லது பச்சையாக மென்றோ சாப்பிட்டு வந்தால், அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே இதயம் தொடர்பான நோய்கள் எதுவும் வரக்கூடாது என்று விரும்பினால், இந்த முருங்கை இலைகளை தினசரி ஏதாவது ஒரு வடிவில் உட்கொண்டு வாருங்கள்.
பாகற்காய் இலைகள்
கசப்புச் சுவையைக் கொண்ட ஒரு காய் தான் பாகற்காய். இந்த பாகற்காயை மட்டுமின்றி, அதன் இலைகளை உட்கொண்டு வந்தால், அது இரத்த சர்க்கரை அளவை திறம்பட கட்டுப்படுத்தலாம். அதே வேளையில் இவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகின்றன. எனவே உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், பாகற்காய் இலைகளை உட்கொண்டு வாருங்கள்.
இஞ்சி இலைகள்
இஞ்சியின் மருத்துவ குணங்களால், ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஞ்சியில் எவ்வளவு நன்மைகள் உள்ளதோ, அதற்கு இணையான நன்மை அதன் இலைகளிலும் உள்ளது. இந்த இஞ்சியின் இலைகளை உட்கொண்டு வந்தால், செரிமானம் சிறப்பாக நடைபெறுவதோடு, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அதற்கு இஞ்சி டீயைக் குடித்தோ அல்லது இஞ்சி இலைகளை உணவில் சேரத்தோ வாருங்கள்.
வெந்தய கீரை
வெந்தய கீரை அதன் மருத்துவ பண்புகளால் ஆயுர்வேத மருத்துவத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதுவும் வெந்தய கீரை இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, செரிமானத்தை மேம்படுத்தி உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. அதற்கு வெந்தய கீரையை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வருவது சிறந்த வழியாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications