Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
மாரடைப்பு ஏற்படக்கூடாதா? அப்ப இந்த 5 நட்ஸ்களை ஊற வெச்சு காலையில சாப்பிடுங்க...
Heart Attack In Tamil: கடந்த சில ஆண்டுகளாகவே மாரடைப்பால் ஏராளமானோர் மரணமடைந்து வருகிறார்கள். ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பது ஒரு முக்கியமான காரணியாகும். இந்த கொலஸ்ட்ராலை ஒருவர் கட்டுப்பாட்டில் வைத்து வந்தாலே, மாரடைப்பின் அபாயத்தைத் தடுக்கலாம்.
ஆனால் தற்போது ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ரால் நிறைந்த ஜங்க் உணவுகள் நம்மைச் சுற்றி அதிகம் இருப்பதால், அப்படியான உணவுகளை அதிகம் சாப்பிட நேரிடுகிறது. இதன் விளைவாக உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்து, கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவது என்பது சற்று கடினமான ஒன்றாக உள்ளது. இருப்பினும், மாரடைப்பு வரக்கூடாதெனில் உணவில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

அதுவும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை ஒருசில உணவுகளின் மூலமே குறைக்கலாம். ஆய்வுகளில் கூட குறிப்பிட்ட நட்ஸ்களை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், கெட்ட கொலஸ்ட்ரால் இயற்கையாகவே குறைவதாக தெரிய வந்துள்ளது. இப்போது உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க எந்த வகையான நட்ஸ்களை ஒருவர் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பதைக் காண்போம்.
பாதாம்
நட்ஸ்களிலேயே பாதாமில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாக உள்ளன. இவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றன. இது தவிர இந்த நட்ஸில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் இதயம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. அதற்கு பாதாமை வெறுமனே சாப்பிடுவதற்கு பதிலாக, 5-6 பாதாமை இரவு தூங்கும் போதே ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இப்படி உட்கொள்வதனால் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின் ஈ போன்றவை கிடைத்து, இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
வால்நட்ஸ்
வால்நட்ஸில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பண்புகள் அதிகமாக உள்ளன. அதுவும் இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், உடலினுள் உள்ள அழற்சியைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. அதற்கு 3 வால்நட்ஸை இரவு நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவி புரியும்.
பிஸ்தா
நட்ஸ்களில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் மற்றொரு நட்ஸ் தான் பிஸ்தா. பிஸ்தாவில் பைட்டோஸ்டெரால்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-.ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற கெட்ட கொலட்ஸட்ராலைக் குறைக்கும் பண்புகள் அதிகமாக உள்ளள. அதற்கு பிஸ்தாவை இரவு தூங்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.
முந்திரி
நட்ஸ்களில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய நட்ஸ் தான் முந்திரி. இந்த முந்திரியை வெறுமனே சாப்பிடுவதற்கு பதிலாக, நீரில் ஊற வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் அதில் உள்ள மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், தாவர வகை ஸ்டெரால்கள் போன்றவை கிடைத்து, உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும். அதோடு, இதில் மக்னீசியம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று.
பிரேசில் நட்ஸ்
பிரேசில் நட்ஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, அதில் உள்ள செலினியம் என்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் அழற்சியைக் குறைத்து, இதய நோய்க்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது. இந்த பிரேசில் நட்ஸை அப்படியே சாப்பிடுவதை விட, ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை இயற்கையாகவே குறைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications