Latest Updates
-
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது..
உங்க ஆயுளில் 10 ஆண்டுகளை அதிகரிக்கணுமா? அப்ப இந்த பழக்கங்களை பாலோ பண்ணுங்க...!
நீண்ட காலம் வாழ வேண்டுமென்பது அனைவருக்கும் இருக்கும் ஆசையாகும், ஆனால் அது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. நீண்ட வாழ்க்கை என்னும் வரம் கிடைக்க அதிக கட்டுப்பாடும், அதிக தியாகங்களும் அவசியம். இப்போது நாம் வாழும் இந்த அவசர உலகில் ஆரோக்கியம் என்பதே ஆடம்பரமாகி விட்டது.
எனவே நீண்ட ஆயுளை அடைவதற்கு சில பழக்கங்களை தவிர்க்க வேண்டியதும், சில பழக்கங்களை கடைபிடிக்க வேண்டியதும் அவசியம். சமீபத்தில் நடத்திய ஆய்வுகளின் படி சில பழக்கங்களை கடைபிடிப்பதன் மூலமா நம் ஆயுளில் 10 ஆண்டுகளை அதிகரிக்கலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்
புகைபிடிப்பவர்களின் ஆயுட்காலம் புகைபிடிக்காதவர்களை விட குறைந்தது 10 ஆண்டுகள் குறைவாக உள்ளது என்று ஆய்வுகள் கூறுகிறது. சமீபத்திய ஆய்வின் படி நீங்கள் 40 வயதிற்கு முன் புகைபிடிப்பதை விட்டுவிட்டால், புகைபிடித்தல் தொடர்பான நோயால் இறக்கும் அபாயத்தை சுமார் 90% குறைக்கலாம்.
வழக்கமாக மது அருந்துவதை குறைப்பது
புகைபிடித்தல் போலவே மது அருந்துவதும் ஆரோக்கியத்தையும் கடுமையாகப் பாதிக்கும். மது அருந்துதலை கட்டுப்படுத்துவது அல்லது முற்றிலும் தவிர்ப்பது உங்களை சிறுநீரக கோளாறு, கல்லீரல் பிரச்சினைகள் போன்ற உயிர்கொல்லி நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருத்தல்
ஆய்வின் படி ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் மிதமான அல்லது தீவிரமான உடல் செயல்பாடுகளை மேற்கொண்டவர்கள் உடல்ரீதியாக சுறுசுறுப்பானவராகக் கருதப்படுகின்றனர். ஆய்வின் முடிவுகளின் படி, அத்தகையவர்கள் அவர்களின் ஆயுளில் சில ஆண்டுகளை அதிகரிக்கலாம்.
சீரான தூக்க சுழற்சி கொண்டவர்கள்
சராசரியாக, ஒரு இரவில் ஏழு முதல் ஒன்பது மணிநேரம் வரை தூங்குபவர்கள் நல்ல தூக்க சுழற்சி கொண்டவர்களாகக் கருதப்படுகின்றனர். தூக்கமின்மை பின்வரும் அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைக் கொண்டிருப்பதாக வரையறுக்கப்படுகிறது: தூக்கத்தைத் தொடங்குவதில் சிரமம், தூக்கத்தைப் பராமரிப்பதில் சிரமம் அல்லது அதிகாலையில் எழுந்திருத்தல், புத்துணர்ச்சி தராத அல்லது அதிக பகல்நேர தூக்கம் போன்றவை தூக்கத்தில் சிக்கல்இருப்பதற்கான அறிகுறியாகும்.
ஆரோக்கியமான டயட்
நம் ஆரோக்கியத்திற்கான அடிப்படை புள்ளியாக இருப்பது நம் உணவுதான். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரோட்டின் நிறைந்த உணவுகள் சீரான டயட்டில் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான கொழுப்புக்களை உள்ளடக்கிய சீரான டயட்டை பின்பற்றுபவர்கள் மாரடைப்பு, சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நீண்ட கால நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.
சமூக உறவுகளை கடைபிடித்தல்
புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் போலவே தனிமையும் விரைவான மரணத்திற்கான ஒரு பெரிய ஆபத்து காரணி என்று சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஆய்வுகளின் அப்டி, ஒரு நாளின் 50% நேரமாவது பேசவோ, கட்டிப்பிடிக்கவோ அல்லது தொடர்பு கொள்ளவோ இருந்தால், அவர்கள் நேர்மறையான சமூக உறவுகளைக் கொண்டவர்களாகக் கருதப்படுகின்ற்னர். அப்படிப்பட்டவர்களின் ஆயுட்காலம் மற்றவர்களை விட சில ஆண்டுகள் அதிகரிக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
