Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
உங்க எலும்புகளை இரும்பு மாதிரி மாத்தணுமா? இந்த 5 பழங்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியமான ஒன்று. எலும்புகளின் ஆரோக்கியத்தில் எப்போதுமே நாம் சாப்பிடும் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 1000 மில்லி கிராம் கால்சியம் தேவைப்படுகிறது.

பால் பொருட்களே கால்சியத்தின் முதன்மை ஆதாரமாக இருக்கின்றன. ஆனால் சிலருக்கு பால் பிடிக்காமலோ அல்லது அதனால் அலர்ஜியோ ஏற்படலாம். இந்த சூழலில் அவர்களுக்கு போதுமான கால்சியம் கிடைக்காமல் போகலாம்.
இதனை சமாளிக்க பல பழங்கள் வியக்கத்தக்க வகையில் கால்சியம் நிறைந்தவையாகவும் எலும்புபின் வலிமைக்கும் முக்கிய பங்காற்றுபவையாகவும் இருக்கின்றன. இந்த பதிவில் எந்தெந்த பழங்கள் இயற்கையாகவே எலும்பின் வலிமையை அதிகரிக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.
உலர் அத்திப்பழம்
உலர்ந்த அத்திப்பழங்கள் கால்சியத்தின் சிறந்த ஆதாரமாகும். 100 கிராம் உலர் அத்திப்பழத்தில் 160 மி.கி. கால்சியம் இருக்கிறது. இது ஒரு சுவையான தின்பண்டமாக இருப்பதோடு எலும்புகளுக்கு தேவையனான கால்சியம் சத்தையும் வழங்குகிறது. மேலும், சர்க்கரை சேர்க்காமலேயே இனிப்பு சுவையையும் வழங்குகின்றன. அமெரிக்க ஆய்வு முடிவுகள், உலர்ந்த அத்திப்பழத்தில் இருக்கும் அதிக கால்சியம் ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களுக்கு போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன என்று கூறுகிறது.
ஆரஞ்சு
ஆரஞ்சு என்றாலே வைட்டமின் சி கொண்ட பழம் என்பது நாம் அறிந்ததே. இது குறிப்பிட்ட அளவு கால்சியத்துடன், எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கான சிறந்த தேர்வாக அமைகிறது. ஒவ்வொரு 100 கிராம் ஆரஞ்சுப் பழமும் சுமார் 45 முதல் 50 மில்லிகிராம் கால்சியத்தை கொண்டிருக்கிறது. ஆரஞ்சுகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவசியமாகின்றன. ஆய்வு முடிவுகளின் படி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை தொடர்ந்து உட்கொள்வது எலும்பு தாது அடர்த்தியை மேம்படுத்தவும் மூட்டுவலி அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
கிவி
கிவிகள் அதிக வைட்டமின் சி உள்ள பழங்களில் முக்கிய இடத்தில் உள்ளது. 100 கிராம் கிவி பழத்தில் சுமார் 34 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. சப்போட்டா பழத்தின் ஒரு வகையாக தோற்றமளிக்கும் இந்த பழம் உணவில் போதுமான கால்சியத்துடன் எலும்புகளின் ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது.
சமீபத்திய ஆய்வுகளின் படி, கிவி பழத்தில் இருக்கும் கால்சியம் மற்றும் வைட்டமின் கே உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் எலும்பு அடர்த்தி மற்றும் ஒட்டுமொத்த எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பப்பாளி
பப்பாளி கால்சியம் நிறைந்த நமக்கு எளிதில் கிடைக்க கூடிய பழ வகைகளில் ஒன்று, இது 100 கிராமுக்கு சுமார் 20 மி.கி. என்ற அளவில் கால்சியத்தை கொண்டிருக்கிறது. மேலும் பப்பாளியில் வைட்டமின்கள் மற்றும் பப்பைன் போன்ற நொதிகள் நிரம்பியுள்ளன. அவை செரிமானத்திற்கு உதவுவதோடு கால்சியம் உட்பட சிறந்த ஊட்டச்சத்து உறிஞ்சுவதில் முக்கிய பங்களிக்கின்றன.
பப்பாளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் எலும்புத் தொடர்பான நோய்களிலிருந்து பாதுகாப்பதிலும் முக்கியமானதாக இருக்கின்றன. பப்பாளியை பல்வேறு வடிவங்களில்நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
எலுமிச்சை
எலும்புகளின் ஆரோக்கியத்தில் எலுமிச்சையின் பங்கு மிகவும் முக்கியமானது. எலுமிச்சை எலும்புகளை வலுப்படுத்தும் என்பது நம்மில் பலரும் அறியாதது, ஆனால் 100 கிராம் எலுமிச்சை 33 மில்லிகிராம் கால்சியத்தைக் கொண்டுள்ளது.
இந்த புளிப்பு சுவையுடைய பழங்களில் கால்சியம் சத்து மட்டுமின்றி, வைட்டமின் சி மற்றும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. ஆராய்ச்சிகளின் படி, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை உட்கொள்வது எலும்பின் அடர்த்தியை பராமரிக்கவும், எலும்பு முறிவு அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.
இந்த கட்டுரையின் போட்டோ, முன்னுரை, தலைப்பு மற்றும் Tags மாற்றப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
