Latest Updates
-
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா?
வயிறு முட்ட சாப்பிட்டு செரிமான பிரச்சனையை சந்திக்குறீங்களா? இந்த பழங்களை சாப்பிடுங்க.. சட்டுன்னு சரியாகும்...
Fruits For Digestion In Tamil: பொதுவாக மதிய வேளையில் வயிறு நிறைய சாப்பிடுவோம். அதுவும் அசைவ உணவுகள் என்றால் சொல்லவே வேண்டாம், ஒரு கட்டு கட்டிடுவோம். ஆனால் எப்பவும் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் செரிமான மண்டலத்தால் உணவுகளை ஜீரணிக்க முடியாமல் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பெரும்பாலும் செரிமான பிரச்சனைகளின் போது தயிர் சாப்பிடுவோம். ஏனெனில் தயிரில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவி புரியும். ஆனால் தயிரைத் தவிர, ஒருசில பழங்களும் செரிமான பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கும் என்பது தெரியுமா?

ஆம், ஒருசில பழங்களில் இயற்கையாகவே செரிமான நொதிகள் நிறைந்துள்ளன. இப்படி செரிமான நொதிகளைக் கொண்ட பழங்களை அஜீரண கோளாறு, மலச்சிக்கல், வயிற்று உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகளை சந்திக்கும் போது சாப்பிட்டால், உடனடி நிவாரணத்தைப் பெறலாம். மேலும் இந்த பழங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, குடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கவும் செய்கின்றன. இப்போது செரிமான நொதிகளைக் கொண்ட அந்த பழங்கள் எவையென்பதைக் காண்போம்.
1. அன்னாசி
செரிமான பிரச்சனைகளை சந்திக்கும் போது அன்னாசிப்பழத்தை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இப்பழம் புரோட்டீனை எளிதில் உடைத்தெறிந்து ஜீரணிக்க உதவுகிறது. முக்கியமாக இந்த பழத்தில் புரோமெலைன் என்னும் செரிமான நொதிப் பொருள் உள்ளது. இது தான் செரிமான பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்க உதவுகிறது.
2. அவகேடோ
எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட்டீங்களா? இப்படி சாப்பிட்டால் உங்கள் உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புக்களை எளிதில் உடைத்தெறிய வேண்டுமா? அப்படியானால் அவகேடோ பழத்தை சில துண்டுகள் சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள லிபேஸ் என்னும் நொதிப் பொருள், கொழுப்புக்களை எளிதில் உடைத்தெறிய உதவுகிறது.
3. பப்பாளி
ஆண்டு முழுவதும் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய பழம் தான் பப்பாளி. இந்த பப்பாளி செரிமான பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபட உதவும் அற்புதமான பழம். ஏனெனில் இப்பழத்தில் பாப்பைன் என்னும் நொதிப் பொருள் உள்ளது. இந்த நொதி புரோட்டீனை எளிதில் உடைதெறிகிறது. எனவே செரிமான பிரச்சனையால் அதிகம் அவதிப்பட்டால், பப்பாளியை வாங்கி சாப்பிடுங்கள். உடனடியாக நல்ல நிவாரணத்தைப் பெறலாம்.
4. மாம்பழம்
பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்தைப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இதன் வாசனையே பலரையும் மயக்கிவிடும். பலரும் மாம்பழத்தை ஒரு ஹெவியான உணவாக நினைக்கிறார்கள். மேலும் இது ஜீரணமாக கடினமாக இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு.
உண்மையில் மாம்பழத்தில் நீர்ச்சத்து, நார்ச்சத்து மட்டுமின்றி, அமிலேஸ் என்னும் நொதிப் பொருள் உள்ளது. இது உணவுகளை எளிதில் ஜீரணிக்க உதவுகிது. முக்கியமாக அமிலேஸ் கார்போஹைட்ரேட்டுகள், ஸ்டார்ச் போன்றவற்றை அசால்ட்டாக சிறுசிறு மூலக்கூறுகளாக உடைத்தெறியும்.
5. வாழைப்பழம்
பப்பாளியைப் போன்றே வருடம் முழுவதும் எளிதில் மற்றும் விலை மலிவில் கிடைக்கக்கூடிய பழம் தான் வாழைப்பழம். வாழைப்பழம் செரிமானத்திற்கு நல்லது என்பதை அறிவோம். ஆனால் அதற்கு அதில் உள்ள அமிலேஸ் என்னும் நொதி பொருள் தான் காரணம் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. இந்த நொதி பொருள் தான் வாழைப்பழம் செரிமான பிரச்சனைகளை விரைவில் சரிசெய்ய முக்கிய காரணமாக உள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications