Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
'இந்த' ஒரு மசாலா பொருள் உங்க விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து கர்ப்பம் தரிக்க உதவுமாம்...!
காலையில் இலவங்கப்பட்டை தேநீர் அல்லது இலவங்கப்பட்டை டிடாக்ஸ் தண்ணீரைக் குடிப்பது மாதவிடாய் சுழற்சியை சீராக்க வைத்து, கர்ப்பத்தின் வாய்ப்புகளை அதிகரிக்க உதவுகிறது.
இலவங்கப்பட்டை இயற்கையில் சூடாக உள்ளது மற்றும் அதை உங்கள் தேநீர், டிடாக்ஸ் பானங்கள், சூப்கள், குழம்பு, கறிகள் மற்றும் இனிப்பு வகைகளில் சேர்த்து சாப்பிடலாம். இது விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்துவதோடு ஆண்களின் இடுப்பு பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். ஆண்களின் விறைப்புச் செயலிழப்பை தடுக்கிறது. ஆண்களின் பாலியல் உணர்வை அதிகரிக்கிறது. உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஆதலால், ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்வதில் மக்கள் மிகுந்த அக்கறை காட்டி வருகின்றனர். பொதுவாக மசாலா பொருட்கள் நம் உணவின் சுவையை அதிகரிப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அவற்றில் ஒன்றான இலவங்கப்பட்டை எடை கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆரோக்கிய ஆர்வலர்களிடையே அதன் எண்ணற்ற ஆரோக்கிய நலன்களுக்காக ஒரு மோகமாக மாறியுள்ளது. ஆனால் இந்த எளிய நறுமண மசாலாவை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம், கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகளை நீங்கள் உண்மையில் மேம்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான தம்பதிகள் கருவுறாமை பிரச்சனையால் வருத்தத்தில் உள்ளனர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆண்மை மற்றும் கருவுறுதலை அதிகரிக்க இலவங்கப்பட்டை உதவும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் நீங்கள் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டமிடுகிறீர்களானால், இந்த மசாலா உங்கள் அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இக்கட்டுரையில் காணலாம்.

கருவுறுதலை அதிகரிக்க இலவங்கப்பட்டை உதவுமா?
நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் மற்றும் எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரே இரவில் கருவுறுதலை மேம்படுத்தும் உணவுகள் எதுவும் இல்லை. ஆனால் வழக்கமான மற்றும் மிதமான ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது உண்மையில் கருத்தரிக்க உதவும். சுவாரஸ்யமாக, இந்த நறுமண மசாலா இலவங்கப்பட்டை சேர்ப்பது கருவுறுதலை மேம்படுத்தவும், இயற்கையாகவே லிபிடோவை அதிகரிக்கவும் உதவும். இந்த மசாலாவை சிறிது சேர்ப்பது கருவுறுதல் அடிப்படையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதவுகிறது.

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது
இலவங்கப்பட்டை இயற்கையில் சூடாக உள்ளது மற்றும் அதை உங்கள் தேநீர், டிடாக்ஸ் பானங்கள், சூப்கள், குழம்பு, கறிகள் மற்றும் இனிப்பு வகைகளில் சேர்த்து சாப்பிடலாம். இது விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்துவதோடு ஆண்களின் இடுப்பு பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். ஆண்களின் விறைப்புச் செயலிழப்பை தடுக்கிறது. ஆண்களின் பாலியல் உணர்வை அதிகரிக்கிறது. மேலும், அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இதில் நிறைந்துள்ளன.

மாதவிடாய் சுழற்சியை சீராக்குகிறது
இதேபோல், பெண்கள் உணவில் சிறிதளவு இலவங்கப்பட்டையைச் சேர்ப்பது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை நிர்வகிக்க உதவும். மேலும், பெண்களின் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றான பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) விளைவைக் குறைக்கவும் உதவும். காலையில் இலவங்கப்பட்டை தேநீர் அல்லது இலவங்கப்பட்டை டிடாக்ஸ் தண்ணீரைக் குடிப்பது மாதவிடாய் சுழற்சியை சீராக்க வைத்து, கர்ப்பத்தின் வாய்ப்புகளை அதிகரிக்க உதவுகிறது.

ஒரு நாளைக்கு எவ்வளவு இலவங்கப்பட்டை சாப்பிடலாம்?
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஆண்கள் அல்லது பெண்கள் தங்கள் தினசரி உணவில் சுமார் 3 கிராம் இலவங்கப்பட்டை சேர்க்கலாம். இலவங்கப்பட்டை கருவுறுதலுக்கு சிறப்பாகச் செயல்படுவது மட்டுமல்லாமல், உடல் எடையைக் குறைக்கவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்
தினசரி உணவில் இலவங்கப்பட்டை சேர்க்க பல வழிகள் உள்ளன. இலவங்கப்பட்டை தூள் அல்லது குச்சியை வெந்நீரில் ஊறவைத்து டீயாக குடிக்கலாம் அல்லது சாலடுகள், ஓட்ஸ் உணவுகள், கஞ்சிகள், சூப்கள், ஸ்மூத்திகளில் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து சாப்பிடலாம். ஒரு சில இலவங்கப்பட்டையை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதற்கான மற்றொரு சிறந்த வழி, எலுமிச்சைத் துண்டுகளை தண்ணீரில் காய்ச்சி, இலவங்கப்பட்டை மற்றும் தேனுடன் சேர்த்து தயாரிக்கப்படும் பானத்தை அருந்தலாம். இல்லையெனில் நீங்கள் உறங்கும் போது எடுத்துக்கொள்ளும் பானங்களில் இலவங்கப்பட்டையைச் சேர்க்கலாம். இது உங்களுக்கு நிம்மிதியான தூக்கத்தை கொடுக்கும்.

கர்ப்ப காலத்தில் இலவங்கப்பட்டை பாதுகாப்பானதா?
எதையுமே அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளலாமல் குறைவான அளவில் எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது. இதையே நீங்கள் அதிகமாக உணவில் பயன்படுத்தும் போது சில தீவிர பக்க விளைவுகளை உண்டாக்க வாய்ப்புள்ளது. இந்த பட்டையை பிரியாணி, கேக், டீ இப்படி எதில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 1-6 கிராம் வரை பெரியவர்கள் பயன்படுத்தலாம் கருவுற்ற பெண்களுக்கு என்று தனிப்பட்ட அளவு இல்லை. எனவே இதை விட கொஞ்சம் குறைவாகவே மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கர்ப்ப காலத்தில் பட்டையின் பயன்கள்
கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது சிக்கலாகி விடும். இதை போக்க இலவங்கப்பட்டை பயன்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை குறைத்து பிரசவத்தை எளிதாக்குகிறது. அதே நேரத்தில் மருத்துவரிடம் ஆலோசித்து குறைந்த அளவை எடுத்துக் கொள்ளுங்கள்.

இறுதிக்குறிப்பு
தேவை என்றால் இலவங்கப்பட்டையை சூடான நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ போட்டு குடிக்கலாம். நல்ல நறுமணமாக இருக்கும். குமட்டல், வாந்திக்கு ஒரு ரிலீவ் கிடைக்கும். இலவங்கப்பட்டை பொடியை கேக் மற்றும் குக்கீஸ்களில் பயன்படுத்தி சாப்பிடலாம். நல்ல நறுமணம் இருப்பதால் உங்கள் உணவிற்கு சுவையை கூடும்.



Click it and Unblock the Notifications