Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
தக்காளியை ஆலிவ் எண்ணெய்யில் சமைத்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாயாஜாலங்கள்...!
எந்த ஒரு உணவாக இருந்தாலும் அது தனித்து இருக்கும்போது அதன் பயன் நமக்கு தெரியாது. இதுவே ஒரு சில உணவுகளுடன் சேர்த்து அதனை சாப்பிடும்போது அதன் தன்மை வேறுபாடும். சில சமயம் இதன் வீரியம் அதிகரிக்கவும் செய்யும். அந்த வகையில் தக்காளியும் ஆலிவும் சிறந்த கலவையாகவும். இவற்றை பற்றிய ஆராய்ச்சியில் பல ஆச்சரியமான தகவல்கள் வெளி வந்துள்ளன.

பொதுவாகவே தக்காளியை ஆலிவ் எண்ணெய்யுடன் சமைத்து சாப்பிடுவதால் உடலில் ஏராளமான நன்மைகள் ஏற்படும். மற்ற எண்ணெய்களில் தக்காளியை சமைத்து சாப்பிடுவதை விட இந்த எண்ணெய்யில் சமைத்து சாப்பிட்டால் உடலில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படும் என ஆய்வுகள் சொல்கின்றது. இது எந்த வகையில் சாத்தியம் என்பதையும், இதனால் ஏற்படும் மாயாஜாலங்களையும் இனி அறிந்து கொள்வோம்.

பேராபத்து தருமா..?
முன்பெல்லாம் ஏதேதோ எண்ணெய்யில் நாம் சமைத்து சாப்பிடுவோம். இதனால் ஏற்படும் விளைவுகளும் நமக்கு நன்றாகவே தெரியும். குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களில் நாம் சமைத்து சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய பிரச்சினைகள், ரத்த கொதிப்பு, உடல் பருமன் போன்ற பல வகையான பாதிப்புகள் ஏற்படுகின்றதாம்.

எது சிறந்தது..?
இன்றைய காலகட்டத்தில் ஆலிவ் எண்ணெய்யில் நாம் சமைத்து சாப்பிட்டால் பலவித ஆபத்துகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என விஞ்ஞானிகள் சொல்கின்றனர். இதில் monounsaturated கொழுப்புகள் இருப்பதால் இதய நோய்களில் இருந்து காத்து கொள்ளலாம். மேலும், பலவித ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸும் இதில் உள்ளது.

தக்காளியும் ஆலிவும் எப்படி..?
மற்ற வகை உணவு கலவையை காட்டிலும் இந்த தக்காளியும் ஆலிவும் அற்புதமான வழியில் நமக்கு உதவுகின்றன. தக்காளியில் உள்ள lycopene என்கிற மூல பொருள் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை நமது உடலில் குறைகின்றது. இவை ஆலிவுடன் சேரும்போது மேலும் பல நன்மைகள் கிடைக்கிறது.

நோய்களை தடுக்கும்...
ஆலிவும் தக்காளியும் சேரும்போது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் அதிக பலத்துடன் இருக்கிறது. இதற்கு காரணம் இதிலுள்ள பீட்டா கேரட்டின் தான். இந்த கலவை உங்களின் உடலில் பலவித நோய் தாக்குதலில் இருந்தும் காக்குமாம்.

இதய நோய்களுக்கு
தக்காளியை ஆலிவ் எண்ணெய்யில் சமைத்து சாப்பிடுவதால் உங்களுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும். அதில் ஒன்று தான் இதுவும். அதாவது, இதய நோய்களில் இருந்து உங்களை காக்கும் சக்தி இந்த கலவைக்கு உள்ளதாம்.

கெட்ட கொலெஸ்ட்ராலுக்கு டாட்..!
ஆலிவ் எண்ணெய்வில் இது போன்று சமைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் மிக முக்கிய பயன் இதுதான். ஆமாங்க..! உங்களின் உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை இவற்றின் கலவை குறைத்து விடுகிறது என ஆய்வுகள் சொல்கிறது. மேலும், நல்ல கொலஸ்ட்ராலை சீரான அளவில் வைத்து கொள்கிறதாம்.

புற்றுநோய்களுக்கு எதிரி..!
இந்த சிறந்த கலவை புற்றுநோய்களுக்கு பெரும் எதிரியாக உள்ளதாம். குறிப்பாக நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், தோல் புற்றுநோய் ஆகியவற்றை தடுக்கும் ஆற்றல் இவ்வற்றிற்கு உள்ளது என ஆராய்ச்சிகள் கூறுகின்றது. இதற்கு காரணம் இதிலுள்ள லிகோபைன் தான்.

சீரான உடல் எடை
நீங்கள் தக்காளியை ஆலிவ் எண்ணெய்யில் சமைத்து சாப்பிடுவதால் உங்களின் உடல் எடை கூடாமல் இருக்கும். மேலும், உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளும் வெளியேற இது சிறந்த முறையில் வழி வகுக்கும். எனவே, இனி தக்காளியை ஆலிவ் எண்ணெய்யில் சமைத்து சாப்பிடுங்கள் நண்பர்களே.

பளபளப்பான முகத்திற்கு
முகம் பளபளவென இருக்க வேண்டுமென்றால் அதற்கு இந்த குறிப்பு நன்கு உதவும். ஆலிவ் எண்ணெய்யை அரை ஸ்பூன் அரிந்த தக்காளியின் மீது தடவி முகத்தில் பூசவும். நன்றாக மசாஜை 5 முதல் 10 நிமிடம் செய்யவும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் எந்தவித பாதிப்புகள் ஏற்படாது.



Click it and Unblock the Notifications