Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த வகை பால் ப்ரிட்ஜில் வைக்காமலேயே பல மாதங்கள் கேட்டு போகாமல் இருக்குமாம்...!
டெட்ரா பேக் என்று அழைக்கப்படும் பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் பால் பல நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவில்லை என்றாலும் கெட்டுப்போகாமல் இருக்கும்.
விரைவில் கெட்டுப்போக கூடிய உணவுகளில் முதலிடத்தில் இருப்பது பால்தான். அதற்கு காரணம் அதிலிருக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிதான். பாலை சூடு பண்ணிய பிறகு குளிர்சாதன பெட்டியில் வைப்பது இந்த பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கும். அது சில நாட்களுக்கு மட்டும்தான்.

டெட்ரா பேக் என்று அழைக்கப்படும் பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் பால் பல நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவில்லை என்றாலும் கெட்டுப்போகாமல் இருக்கும். இந்த பாலில் கெட்டுப்போகாமல் இருப்பதற்கும், இதன் மருத்துவ பலன்கள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

கெட்டுப்போகாத பால் என்றால் என்ன?
மாறிவிட்ட வாழ்க்கை முறையால் ஆரய்ச்சியாளர்கள் பாலின் ஆயுளை அதிகரிக்கும் முறையை உருவாக்கியுள்ளனர். இதற்காக பால் மிக அதிக வெப்பநிலையில் கொதிக்க வைக்கப்படுகிறது. அதில் இருக்கும் அனைத்து நுண்ணயிர்களும் அழிக்கப்பட்டு பின்னர் பாக்டீரியாவால் தாக்கப்படாத அடைக்கப்பட்ட கொள்கலனில் சேமிக்கப்படுகிறது.

பதப்படுத்தும் முறை
இந்த முறையில் பதப்படுத்தும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பால் கொள்கலன்கள் ஆட்டோகிளேவில் 110 முதல் 120 டிகிரி வெப்பநிலைக்கு 10 முதல் 20 நிமிடங்கள் கொதிக்கவைக்கப்டுகிறது.

மிக அதிக வெப்பநிலை(UHT)
இந்த முறையில் பால் தொடர்ச்சியாக ஓடும் அமைப்பில் சுமார் 140 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலைக்கு மிக குறுகிய காலத்திற்கு வெப்பப்படுத்தப்டுகிறது. அதாவது ஐந்து நொடிகளுக்கு.

பதப்படுத்தும் முறைக்கும், வெப்பநிலை முறைக்கும் உள்ள வேறுபாடு
கொள்கலனில் பதப்படுத்தும் முறையில் பதப்படுத்தப்பட்ட பால் நன்கு சமைக்கப்பட்ட பதத்தில் இருக்கும். இதில் சிறிது பழுப்பு நிறம் கொண்டதாக இருக்கும். UHT முறையில் பால் குறைவான சமைக்கப்பட்ட பதத்தில் இருக்கும். இதன் நிறத்திலும் பெரிய மாற்றம் இருக்காது.

அடைக்கப்பட்ட பாலுக்கு ஏன் UHT முறை பயன்படுத்தப்படுகிறது?
நிபுணர்களின் கூற்றுப்படி UHT பால் தரத்தில் சிறந்தது. இதனால் இது சிறப்பான பலன்களை வழங்குகிறது. மேலும், UHT பாலை மேம்படுத்துவதற்கு அசெப்டிக் பேக்கிங்கின் வளர்ச்சி உதவுகிறது. கொள்கலனில் கொதிக்கவைக்கப்டும் பால் ஹெர்மெட்டிகல் சீல் வைக்கப்பட்டு அடைக்கப்படுகிறது.

அசெப்டிக் பால் பேக்கேஜிங் என்றால் என்ன?
இந்த தொழில்நுட்பத்தில் பால் ஆபத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களில் இருந்து பதுக்கப்படுகிறது. மேலும் பல மாதங்களுக்கு கெட்டுப்போகாமல் தடுக்கப்படுகிறது. இந்த பாலுக்கு குளிர்சாதன பெட்டி அவசியமில்லை. இந்த தொழில்நுட்பம் பொதுவாக வணிக மலட்டுத்தன்மை என அழைக்கப்படுகிறது, இதில் பேக்கேஜிங் பொருட்கள் சூடான ஹைட்ரஜன் பெராக்சைடு மூலம் கருத்தடை செய்யப்படுகின்றன. இந்த செயல்முறை முடிந்ததும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு கலவை அதிலிருந்து வெளியேற்றப்படுகிறது.

பிற உணவுப் பொருட்களில் பயன்பாடு
நிபுணர்களின் கூற்றுப்படி இந்த முறை மற்ற பால் பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தயிர், சீஸ் போன்ற பால் பொருட்களுக்கு இது ஏற்றதல்ல, அதற்கு காரணம் அவற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம்தான். இந்த பாலில் பாக்டீரியாக்களும், நுண்ணயிர்களும் இல்லாமல் இருப்பதால் மனிதர்கள் இதனை தாராளமாக பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications